🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஸஹஸ்ர-யுக-பர்யந்தம்
அஹர் யத் ப்ரஹ்மணோ விது:
ராத்ரிம் யுக-ஸஹஸ்ராந்தாம்
தே (அ)ஹோ-ராத்ர-விதோ ஜனா:
மொழிபெயர்ப்பு
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
மனிதக் கணக்கின்படி ஆயிரம் யுகங்களைக் கொண்ட காலம் பிரம்மாவின் ஒரு பகலாகும்; அவரது இரவின் காலமும் அது போன்று நீண்டதே.
மொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பௌதிக பிரபஞ்சத்தின் காலம் எல்லைக்கு உட்பட்டதாகும். இது கல்பங்களின் சுழற்சியாகத் தோற்றமளிக்கிறது. கல்ப என்பது பிரம்மாவின் ஒரு பகல். ஸத்ய, திரேதா, துவாபர, கலி எனும் நான்கு யுகங்கள், ஆயிரம் முறை சுழலும் போது அது பிரம்மாவின் ஒரு பகலாகும். புண்ணியம், விவேகம் மற்றும் தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட ஸத்ய யுகத்தில் அறியாமையும் பாவமும் கிடையாது, அது 17,28,000 வருடங்கள் நீடிக்கக் கூடியது. திரேதா யுகத்தில் பாவங்கள் ஆரம்பமாயின அது 12,96,000 வருடங்கள் நீடிக்கின்றது. துவாபர யுகத்தில் புண்ணியமும் தர்மமும் மேலும் சீர்குலைய, பாவங்கள் மேலோங்குகின்றன, அந்த யுகம் 8,64,000 வருடங்கள் நீடித்தது. இறுதியாக கலி யுகத்தில் (கடந்த 5000 வருடங்களாக நாம் அனுபவித்து வரும் யுகத்தில்) போர் அறியாமை, அதர்மம் மற்றும் பாவங்கள் அதிகரித்து, உண்மையான புண்ணியம் என்பது ஏறக்குறைய அழிந்துவிடுகிறது, இந்த யுகம் 4,32,000 வருடங்கள் நீடிக்கின்றது. பாவங்கள் அதிகரித்து எல்லை மீறிப்போகும் போது, கலி யுகத்தின் இறுதியில் கல்கியாக அவதாரம் எடுக்கும் முழுமுதற் கடவுள், அசுரர்களை அழித்து, பக்தரைக் காத்து, மீண்டும் ஸத்ய யுகத்தைத் தொடக்குகிறார். பின்னர், மீண்டும் அதே சுழற்சி தொடர்ந்து நடைபெறும். இந்த நான்கு யுகங்கள் ஆயிரம் முறை சூழலும் போது, அது பிரம்மாவின் ஒரு பகலாகும், அவரது இரவும் அது போன்றதே. இவ்வாறு நூறு வருடங்கள் வாழும் பிரம்மா அதன்பின் இறக்கின்றார். இந்த "நூறு வருடங்கள்" பூலோகக் கணக்கின்படி 3,11,04,000 கோடி வருடங்களாகும். இவ்வாறு பிரம்மாவின் வாழ்நாள் வினோதமாக, முடிவில்லாதது போலத் தோன்றினாலும், நித்திய வாழ்வுடன் ஒப்பிடும்போது இது மின்னலைப் போன்ற குறுகிய காலமே. அட்லாண்டிக் கடலின் நீர்க் குமிழிகளைப் போல, காரணக் கடலில் எண்ணற்ற பிரம்மாக்கள் தோன்றி மறைகின்றனர். பிரம்மாவும் அவரது படைப்பும், பௌதிக பிரபஞ்சத்தின் பகுதிகள் என்பதால், அவை எப்போதும் மாற்றத்திற்கு உட்பட்டவை.
பிரம்மா உட்பட ஜடவுலகைச் சார்ந்த அனைவரும், பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதிக்கு உட்பட்டவர்களே. இருப்பினும், இந்த பிரபஞ்சத்தை நிர்வகிப்பதன் மூலம், பரம புருஷருடைய நேரடித் தொண்டில் ஈடுபட்டிருக்கும் பிரம்மா, அதனால் உடனடியாக முக்தியடைகிறார். உயர்ந்த சந்நியாசிகள், பிரம்ம லோகம் என்றழைக்கப்படும் பிரம்மாவின் குறிப்பிட்ட உலகினை அடைகின்றனர். ஜடவுலகின் மிகவுயர்ந்த கிரகமான அந்த பிரம்ம லோகம், உயர் கிரகங்களான ஸ்வர்க லோகங்கள் அழிந்த பிறகும் நிலைத்திருப்பதாகும். ஆனால், காலப்போக்கில் பிரம்மாவும் பிரம்மலோகவாசிகளும், ஜட இயற்கையின் சட்டப்படி, மரணத்திற்கு உட்பட்டவர்களே.
( பகவத்கீதை 8.17 )
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment