ஸ்ரீமத்-பாகவதம்
காண்டம் 10 / அத்தியாயம் 10
/ பதம் 29-38
*************************************************************************
பதம் 29
மொழிபெயர்ப்பு
ஓ கிருஷ்ண, ஓ கிருஷ்ண, உமது யோக ஜசுவரியம் நினைத்தற்கரியதாகும். தாங்கள் பரமபருஷரும், மூல முதல்வரும், உடனடியானதும் பழமையானதுமான எல்லாக் காரணங்களுக்கும் மூலகாரணமும் ஆவீர். மேலும் தாங்கள் இந்த பௌதிக சிருஷ்டிக்கு மேற்பட்டவராவீர். தாங்களே அனைத்தும் என்பதையும், ஸ்தூல மற்றும் சூட்சும அம்சங்களுடன் கூடிய இப்பிரபஞ்ச தோற்றமானது உமது உருவம் என்பதையும் (ஸர்வம் கல்வ இதம் ப்ரஹம என்ற வேத வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு), கற்றறிந்த பிராமணர்கள் அறிந்துள்ளனர்.
பதம் 30-31
மொழிபெயர்ப்பு
நீங்கள் அனைத்தையும் ஆளும் பரமபுருஷராவீர். நீங்களே அனைத்து ஜீவராசிகளின் உடலாகவும், உயிராகவும், அகங்காரமாகவும் மற்றும் புலன்களாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் பரமபுருஷரும், அழிவற்ற ஈசுவரருமாகிய விஷ்ணுவாவீர். நீங்களே காலமும், உடன்டியான காரணமும், சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களைக் கொண்ட ஜட இயற்கையுமாவீர். இந்த ஜடத் தோற்றத்தின் மூல காரணமும் நீங்களே. நீங்கள் பரமாத்மா என்பதால், ஒவ்வொரு ஜீவராசியின் இதயத்திலுமுள்ள அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள்.
பதம் 32
மொழிபெயர்ப்பு
பகவானே, தாங்கள் சிருஷ்டிக்கு முன்பே இருக்கிறீர்கள். எனவே, இந்த ஜட உலகில், பௌதிக குணங்களைக் கொண்ட ஒருடலில் சிறைப்பட்டுள்ள யாரால் உம்மைப் புரிந்துக்கொள்ள முடியும்?
பதம் 33
மொழிபெயர்ப்பு
பகவானே, உமது மகிமைகளை உமது சொந்த சக்தியாலேயே மறைத்துக் கொண்டுள்ள நீங்கள் பரமபுருஷராவீர். படைப்பின் மூலமான சங்கர்ஷணரும் நீரே, சதுர்-வ்யூஹத்தின் மூலமாகிய வாசுதேவரும் நீரே, அனைத்துமாக இருப்பதால் தாங்கள் பரப்பிரம்மனாவீர். எனவே உமக்கு எங்களது பணிவான வணக்கங்கள்
பதம் 34-35
மொழிபெயர்ப்பு
சாதாரண ஒரு மீன், ஆமை, பன்றி போன்ற உடல்களில் தோன்றும் நீங்கள், இத்தகைய ஜீவன்களால் செய்ய முடியாத அசாதாரணமான, ஒப்பற்ற, உன்னத செயல்களை வெளிப்படுத்துகிறீர்கள். இச்செயல்கள் எல்லையற்ற பலமும். சக்தியும் உடையவையாகும். எனவே உங்களுடைய இவ்வுடல்கள் பௌதிக மூலப் பொருட்களால் ஆனவையல்ல. இவை பரமபுருஷராகிய உமது அவதாரங்களாகும். நீங்கள் இந்த ஜட உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காக, முழு சக்தியுடன் இப்பொழுது தோன்றியுள்ள அதே பரமபுருஷராவீர்.
பதம் 36
மொழிபெயர்ப்பு
பரம கல்யானமூர்த்தியே, பரம மங்கள் வடிவினராகிய உங்களுக்கு எங்களது பணிவான வணக்கங்கள், பெரும் புகழுக்குரிய யது குலத்தோன்றலே, யது குலத் தலைவரே, வசுதேவரின் புதல்வரே, சாந்த சொரூபியே, உமது தாமரைப் பாதங்களில் எங்களது பணிவான் வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறோம்.
பதம் 37
மொழிபெயர்ப்பு
பரம சொரூபியே, நாங்கள் எப்பொழுதும் உமது தொண்டர்களுக்குத் தொண்டர்களாவோம், குறிப்பாக நாரத முனிவரின் தொண்டர்களாவோம். இப்பொழுது வீடு திரும்ப எங்களுக்கு அனுமதி தாருங்கள். நாரத முனிவரின் கருணையாலும், அருளாலும்தான் உங்களை எங்களால் நேருக்கு நேராகத் தரிசிக்க முடிந்தது.
பதம் 38
மொழிபெயர்ப்பு
இனிமேல், எங்களுடைய வார்த்தைகள் உமது லீலைகளை மட்டுமே விவரிக்கட்டும். எங்கள் காதுகள் உமது பெருமைகளைக் கேட்பதில் ஈடுபடட்டும். எங்கள் கைகால்களும், மற்ற புலன்களும் உங்களை மகிழ்விக்கும் செயல்களில் ஈடுபடட்டும். எங்கள் மனங்கள் உமது தாமரைப் பாதங்களையே எப்பொழுதும் நினைக்கட்டும். இவ்வுலகிலுள்ள அனைத்தும் உமது வெவ்வேறு வடிவங்கள் என்பதால், எங்கள் தலைகள் உம்மை வணங்கட்டும். மேலும் எங்களுடைய கண்கள், உங்களிலிருந்து வேறுபடாத வைஷ்ணவர்களைக் காணட்டும்.
Comments
Post a Comment