ஸ்ரீமத்-பாகவதம்
காண்டம் 10 / அத்தியாயம் 27
/ பதம்
4-13
**************************************************************************************************************
பதம் 4
இந்த்ர உவாச
விஸூத்த-ஸத்தவம் தவ தாம ஸாந்தம்
தபோ-மயம் த்வஸ்த-ரஜஸ்-தமஸ்கம்
மாயா-யோ (அ)யம் குண-ஸம்ப்ரவாஹோ
ந வித்யதே தே (அ)க்ரஹணானுபந்த:
மொழிபெயர்ப்பு
தேவேந்திரன் கூறினான்: சத்துவ குணத்தின் வெளிப்பாடான உமது உன்னத வடிவம் எந்தவிதமான மாற்றமில்லாததும், ஞான ஒளியுடையதும், ரஜோ, தமோ குணங்கள் அற்றதுமாகும். மாயை மற்றும் அறியாமையினை அடிப்படையாகக் கொண்ட ஜட இயற்கையின் ஆற்றல் மிக்கப் பிரவாகம் உம்மிடம் வெளிப்படுவதில்லை.
பதம் 5
மொழிபெயர்ப்பு
பிறகு எவ்வாறு உம்மிடம் காமம், குரோதம், லோபம் என்னம் சாதாரண மனிதனின் அடையாளங்கள் இருக்க முடியும்? இவை ஒருவனின் முந்தைய பௌதீக வாழ்வின் ஈடுபாட்டின் காரணமாக உண்டாவதோடு அவன் மேலும் உலகியல் வாழ்வில் சிக்கிக் கொள்ள வதற்குக் காரணமும் ஆகின்றன. மேலும் தாங்கள் பரமபுருஷ பகவான் ஆதலினால் துஷ்டர்களை அழித்து தர்ம நெறிகளைக் காக்கின்றீர்
பதம் 6
மொழிபெயர்ப்பு
இப்பிரபஞ்சத்தின் தந்தையும் ஆன்மீகக் குருவும், பரமநெறியாளரும் நீரே கடப்பதற்கரிய காலமும் நீரே, பாவிகளின் நன்மைக்காக அவர்களைத் தண்டிப்பவரும் நீரே. உமது விருப்பத்திற்கேற்ப நீர் மேற் கொள்ளும் பல்வேறு அவதாரங்களிலும், தம்மை இவ்வுலகின் தலைவன் என்று கருதுபவர்களின் வீண் ஆணவத்தினை நீக்குவதற்காக உறுதியுடன் செயல்படுகின்றீர்.
பதம் 7
மொழிபெயர்ப்பு
தம்மை அப்பிரபஞ்சத்தின் தலைவர்களாகக் கருதும் என்னைப் போன்ற மூடர்கள் கூடக் காலத்திற்கும் அஞ்சாதவராக நீர் இருப்பதைக் காணும்பொழுது உடனடியாகத் தமது எண்ணத்தினை உதறித்தள்ளி நேரடியாக ஆன்மீக வளர்ச்சிப் பாதையினை மேற்கொள்கின்றனர். இவ்வாறு நீர் தீயவர்களையும் கூட அவர்களுக்கு உபதேசிப்பதின் மூலம் தண்டிக்கின்றீர்.
பதம் 8
மொழிபெயர்ப்பு
எனது ஆட்சி அதிகாரத்தின் ஆணவத்தில் அமிழ்ந்து, உமது மாண்பினை அறியாது உம்மிடம் தவறிழைத்து விட்டேன். ஓ, பிரபுவே என்னை மன்னித்தருள்வீராக. எனது புத்தி குழம்பி இருந்தது. அதனால் எனது உணர்வு மீண்டும் மாசு பெறாதிருப்பதாக.
பதம் 9
மொழிபெயர்ப்பு
ஓ, உன்னத பகவானே, இப்புவியின் பாரத்தினை அதிகரித்து இதற்குப் பல்வேறு இடையூறுகளைச் செய்யும் போர்வெறிபிடித்த தலைவர்களை அழிப்பதற்காக நீர் இவ்வுலகில் அவதரிக்கின்றீர். ஓ, பகவானே, அதே சமயம் நீர் உமது தாமரைத் திருவடிகளுக்கு நம்பிக்கையுடன் தொண்டு செய்பவர்களின் நன்மைக்காகவும் செயல்படுகின்றீர்.
பதம் 10
மொழிபெயர்ப்பு
முழுமுதற்கடவுளே, மகாத்மாவே, எங்கும் வியாபித்திருப்பவரே, எல்லா உயிர்களின் இதயங்களிலும் இருப்பவரே உமக்கு எனது வந்தனங்கள். யதுகுலத்தின் தலைவரான கிருஷ்ணரே உமக்கு எனது வந்தனங்கள் உரித்தாகுக.
பதம் 11
மொழிபெயர்ப்பு
தமது பக்தர்களின் விருப்பங்களுக்கேற்ப உன்னத உடல்களை மேற்கொள்பவருக்கும், தூய உணர்வுடைய வடிவம் உடையவருக்கும், எல்லா உயிர்களுக்கம் வித்தாகவும், ஆத்மாவாகவும் இருக்கும் அவருக்கு நான் எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
பதம் 12
மொழிபெயர்ப்பு
போற்றுதற்குரிய பகவானே, எனது வேள்வி தடை செய்யப்பட்டது கண்டு அகந்தையின் காரணமாக நான் கடுஞ்சினங் கொண்டேன். அதனால் உமது ஆயர்குலத்தினைக் கடுமையான மழை மற்றும் சூறைக் காற்றினால் நான் அழித்துவிட முயன்றேன்
பதம் 13
மொழிபெயர்ப்பு
எனது ஆணவத்தினை அழித்து எனது முயற்சியினை (விருந்தா வனத்தினைத் தண்டித்தல்) தோல்வியுறச் செய்ததின் மூலம் ஓ, பகவானே, நீர் எனக்குக் கருணை காட்டியுள்ளீர். பரமபுருஷ பகவானம், ஆன்மீக குருவும் பரமாத்மாவும் ஆனவரே உம்மைச் சரணடைவதற்காக இப்போது நான் வந்திருக்கின்றேன்.
Comments
Post a Comment