பகவத் கீதை உண்மையுருவில்
108 முக்கியமான ஸ்லோகங்கள்
அத்தியாயம் 1 - 18
அத்தியாயம் 1 பதம் 1
த்ருத்ராஷ்ர உவாச
தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே
சமவேதா யுயுத்ஸவ:
மாமகா: பாண்டவஸ் ச
திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?
அத்தியாயம் 2 பதம் 7
கார்பண்ய–தோஷோபஹத-ஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்ம-ஸம்மூட–சேதா:
யச் ச்ரேய: ஸ்யான் நிஷ்சிதம் ப்ரூஹி தன்மே
ஷிஷ்யஸ் தே (அ)ஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபன்
இப்போது
நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம்
இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக்
கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்ந்து எனக்கு
அறிவுரை கூறுவீராக.
அத்தியாயம் 2 பதம் 11
ஸ்ரீ-பகவான் உவாச
அஷோச்யான் அன்வஷோசஸ்த்வம்
ப்ரக்ஞா-வாதாம்ஸ் ச பாஷஸே
கதாஸூன் அகதாஸூம்ஷ் ச
நானுஷோசந்தி பண்டிதா:
புருஷோத்தமரான
முழுமுதற் கடவுள் கூறினார்: அறிவாளியைப் போல பேசும் அதே சமயத்தில் கவலைப்பட வேண்டாதவற்றிற்
காக நீ கவலைப்படுகிறாய். அறிஞர் வாழ்பவர்களுக்காகவோ மாண்டவர்களுக்காகவோ வருந்துவதில்லை.
அத்தியாயம் 2 பதம் 12
ந த்வேவாஹம் ஜாது நாஸம்
ந த்வம் நேமே ஜனாதிபா:
ந சைவ ந பவிஷ்யாம:
ஸர்வே வயம் அத: பரம்
நானோ, நீயோ, இம்மன்னர்களோ இல்லாமலிருந்த காலம் எதுவுமில்லை. எதிர்காலத்திலும் நம்மில் எவரும் இல்லாமலிருக்கப் போவதுமில்லை.
அத்தியாயம் 2 பதம் 13
தேஹினோ (அ)ஸ்மின் யதா தேஹே
கௌமாரம் யௌவனம் ஜரா
ததா தேஹாந்தர-ப்ராப்திர்
தீரஸ் தத்ர ந முஹ்யதி
தேகத்தை உடையவனின் உடல், சிறுவயது, இளமை, முதுமை என்று கடந்துசெல்வதைப் போல, ஆத்மா, மரணத்தின் போது வேறு உடலுக்கு மாற்றம் பெறுகின்றது. நிதான புத்தியுடையவர் இதுபோன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை
அத்தியாயம் 2 பதம் 14
மாத்ரா-ஸ்பர்ஷாஸ் து கௌந்தேய
ஷீதோஷ்ண-ஸுக -து:க-தா:
ஆகமாபாயினோ (அ)நித்யாஸ்
தாம்ஸ் திதிக்ஷஸ்வ பாரத
குந்தியின் மகனே, இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும் காலப் போக்கில் ஏற்படும் மறைவும், கோடையும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவதைப் போன்றதாகும். புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றன; எனவே, பரத குலத் தோன்றலே, இவற்றால் பாதிக்கப்படாமல், பொறுத்துக் கொள்ளக் கற்றுக் கொள்.
அத்தியாயம் 2 பதம் 20
ந ஜாயதே ம்ரியதே வா கதாசின்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
அஜோ நித்ய: ஷாஷ்வதோ (அ)யம் புராணோ
ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே
ஆத்மாவிற்கு எக்காலத்திலும் பிறப்போ இறப்போ கிடையாது. அவன் தோன்றியவனும் அல்ல, தோன்றுபவனும் அல்ல, தோன்றக்கூடியவனும் அல்ல. அவன் பிறப்பற்றவன், நித்தியமானவன், என்றும் நிலைத்திருப்பவன், மிகப் பழமையானவன், உடல் கொல்லப்படும்போது அவன் கொல்லப்படுவதில்லை
அத்தியாயம் 2 பதம் 22
வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய
நவானி க்ருஹ்ணாதி நரோ (அ)பராணி
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணான்-
யன்யானி ஸம்யாதி நவானி தேஹி
Translation:
பழைய ஆடைகளைப் புறக்கணித்து, புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப் போன்றே, பழைய உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கிறது.
அத்தியாயம் 2 பதம் 23
நைனம் சிந்தந்தி ஷஸ்த்ராணி
நைநம் தஹதி பாவக:
ந சைனம் க்லேத யந்த்-யாபோ
ந ஷோஷயதி மாருத:
ஆத்மா எந்த ஆயுதத்தாலும் துண்டிக்கப்பட முடியாததும், நெருப்பால் எரிக்கப்பட முடியாததும், நீரால் நனைக்கப்பட முடியாததும், வீசும் காற்றால் உலர்த்தப்பட முடியாததுமாகும்
அத்தியாயம் 2 பதம் 27
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்
த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச
தஸ்மாத் அபரிஹார்யே (அ)ர்தே
நத்வம் ஷோசிதும் அர்ஹஸி
பிறந்தவன் எவனுக்கும் மரணம் நிச்சயம், மரணமடைந்தவன் மீண்டும் பிறப்பதும் நிச்சயமே. எனவே, தவிர்க்க முடியாத உன் கடமைகளைச் செயலாற்றுவதில், நீ கவலைப்படக் கூடாது.
அத்தியாயம் 2 பதம் 30
தேஹி நித்யம் அவத்யோ (அ)யம்
தேஹே ஸர்வஸ்ய பாரத
தஸ்மாத் ஸர்வாணி பூதாணி
ந த்வம் ஷோசிதும் அர்ஹஸி
பரத குலத் தோன்றலே, உடலில் உறைபவன் ஒருபோதும் அழிக்கப்பட முடியாதவன், எனவே, எந்த உயிர்வாழிக்காகவும் நீ வருந்த வேண்டிய தேவையில்லை
அத்தியாயம் 2 பதம் 40
நேஹாபி க்ரம– நாஷோ (அ)ஸ்தி
ப்ரத்யவாயோ ந வித்யதே
ஸ்வல்பம் அப்யஸ்ய தர்மஸ்ய
த்ராயதே மஹதோ பயாத்
இம்முயற்சியில் குறைவோ இழப்போ இல்லை. இவ்வழியில் சிறிது முன்னேற்றமும், மிகப் பயங்கரமான பயத்திலிருந்து ஒருவனைக் காக்கும்
அத்தியாயம் 2 பதம் 41
வ்யவஸாயாத்மிகா புத்திர்
ஏகேஹ குரு-நந்தன
பஹு-ஷாகா ஹ்யனந்தாஷ் ச
புத்தயோ (அ)வ்யஸாயினாம்
இவ்வழியிலுள்ளோர் தங்களது குறிக்கோளில் திடமான உறுதியுடன் இருப்பர், இவர்களது இலட்சியம் ஒன்றே. குரு வம்சத்தின் செல்வனே, உறுதியற்றவரது அறிவோ பல கிளைகளைக் கொண்டது.
அத்தியாயம் 2 பதம் 44
போகைஷ்வர்ய-ப்ரஸக்தானம்
தயாபஹ்ருத–சேதஸாம்
வ்யவஸாயாத்மிகா புத்தி:
ஸமாதௌ ந விதீயதே
புலனின்பத்திலும் பௌதிகச் செல்வத்திலும் மிகுந்த பற்றுதல் கொண்டு, அதனால் மயங்கி உள்ளவர்களின் மனதில், முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டிற்கான திடமான உறுதி உண்டாவதில்லை.
அத்தியாயம் 2 பதம் 45
த்ரை-குண்ய-விஷயா வேதா
நிஸ்த்ரை-குண்யோ பவார்ஜுன
நிர்த்வந்த்வோ நித்ய-ஸத்த்வ-ஸ்தோ
நிர்யோக-க்ஷேம ஆத்மவான்
வேதங்கள், பொதுவாக பௌதிக இயற்கையின் முக்குணங்களைப் பற்றியவை. அர்ஜுனா, இம்மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்டவனாக ஆவாயாக. எல்லா இருமைகளிலிருந்தும் விடுபட்டு, பொருள்களை அடைதல், பாதுகாத்தல் ஆகிய கவலைகளிலிருந்தும் விடுபட்டு, தன்னில் நிலைபெறுவாயாக.
அத்தியாயம் 2 பதம் 46
யாவான் அர்த உதபானே
ஸர்வத ஸம்ப்லுதோதகே
தாவான் ஸர்வேஷு வேதேஷு
ப்ராஹ்மணஸ்ய விஜானத:
சிறு கிணற்றால் பூர்த்தி செய்யப்படும் தேவைகள் அனைத்தும், பெரும் நீர்த்தேக்கத்தால் உடனே பூர்த்தி செய்யப்படும். அதுபோலவே வேதங்களின் நோக்கங்களெல்லாம் அவற்றிற்குப் பின்னால் உள்ள நோக்கங்களை அறிந்தவனால் அடையப் பெறும்.
அத்தியாயம் 2 பதம் 59
விஷயா வினிவர்தந்தே
நிராஹாரஸ்ய தேஹின:
ரஸ-வர்ஜம் ரஸோ (அ)ப்யஸ்ய
பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே
உடல் பெற்ற ஆத்மாவை புலனின்பத்திலிருந்து கட்டுப்படுத்தினாலும், புலனுகர்ச்சிப் பொருள்களுக்கான சுவை அப்படியே இருக்கும். ஆனால் புலனின்ப ஈடுபாடுகளை உயர்ந்த சுவையினால் ஒழிப்பவன், தனது உணர்வில் நிலைபெற்றுள்ளான்.
அத்தியாயம் 2 பதம் 62
த்யாயதோ விஷயான் பும்ஸ:
ஸங்கஸ் தேஷூபஜாயதே
ஸங்காத் ஸஞ்ஜாயதே காம:
காமாத் க்ரோதோ (அ)பிஜாயதே
புலன்நோக்குப் பொருள்களை சிந்திப்பதால், மனிதன் அதன் மேல் பற்றுதலை வளர்த்துக் கொள்கிறான். அந்தப் பற்றுதலில் இருந்து காமமும் காமத்திலிருந்து கோபமும் தோன்றுகின்றன.
அத்தியாயம் 2 பதம் 63
க்ரோதாத் பவதி ஸம்மோஹ:
ஸம்மோஹாத் ஸ்ம்ருதி-விப்ரம:
ஸ்ம்ருதி-ப்ரம்ஷாத் புத்தி-நாஷோ
புத்தி-நாஷாத் ப்ரணஷ்யதி
கோபத்திலிருந்து பூரண மயக்கமும், மயக்கத்தினால் நினைவு நிலை இழப்பும் ஏற்படுகின்றன. நுனைவு குழம்புவதால் அறிவு இழக்கப்படுகிறது, அறிவு இழக்கப்பட்டவுடன், ஒருவன் மீண்டும் ஜட வாழ்க்கையில் வீழ்கிறான்
அத்தியாயம் 2 பதம் 64
ராக–த்வேஷ-விமுக்தைஸ் து
விஷயான் இந்த்ரியைஷ் சரன்
ஆத்ம-வஷ்யைர் விதேயாத்மா
ப்ரஸாதம் அதி கச்சதி
எல்லாவிதமான விருப்பு வெறுப்புகளிலிருந்தும் விடுபட்டு, விடுதலைக்கான விதிகளால் புலன்களைக் கட்டுப்படுத்துபவன், கடவுளின் முழுக் கருணையை அடைய முடியும்.
அத்தியாயம் 2 பதம் 69
யா நிஷா ஸர்வ பூதானாம்
தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமி
யஸ்யாம் ஜாக்ரதி பூதானி
ஸா நிஷா பஷ்யதோ முனே:
எல்லா உயிர்களுக்கும் எது இரவோ, அது சுயக் கட்டுப்பாடு உள்ளவனுக்கு விழித்தெழும் நேரமாகும். எல்லா உயிர்களுக்கும் எது விழித்தெழும் நேரமோ, அது ஆய்வறிவு கொண்ட முனிவனுக்கு இரவாகின்றது.
அத்தியாயம் 3 பதம் 9
யக்ஞார்தாத் கர்மணோ (அ)ன்யத்ர
லோகோ (அ)யம் கர்ம-பந்தன:
தத் அர்தம் கர்ம கௌந்தேய
முக்த-ஸங்க: ஸமாசர
விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்படும் செயல்கள் நிறைவேற்றப்படலாம், மற்ற செயல்கள் இந்த பௌதிக உலகத்தோடு பந்தப்படுத்துபவை. எனவே, குந்தியின் மகனே, உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை அவரது திருப்திக்காகச் செய். இவ்விதமாக நீ எப்போதும் பந்தத்திலிருந்து விடுபட்டு வாழ்வாய்.
அத்தியாயம் 3 பதம் 14
அன்னாத் பவந்தி பூதானி
பர்ஜன்யாத் அன்ன-ஸம்பவ:
யக்ஞாத் பவதி பர்ஜன்யோ
யக்ஞ: கர்ம-ஸமுத்பவ:
மழையால் தோற்றுவிக்கப்படும் தானியங்களால் எல்லா ஜீவன்களின் உடல்களும் வாழ்கின்றன. யாகத்தால் மழையும், விதிக்கப்பட்ட கடமைகளால் யாகமும் உண்டாக்கப் படுகின்றன.
அத்தியாயம் 3 பதம் 21
யத் யத் ஆசரதி ஷ்ரேஷ்டஸ்
தத் தத் ஏவேதரோ ஜன:
ஸ யத் ப்ரமாணம் குருதே
லோகஸ் தத் அனுவர்ததே
பெரிய மனிதன் எத்தகைய செயல்களைச் செய்கின்றானோ, அதையே பொதுமக்களும் பின்பற்றுகின்றனர். தன் செயல்களால் எந்தத் தரத்தை அவன் உவமை அமைத்துக் காட்டுகின்றானோ அதையே உலகம் முழுவதும் பின்பற்றுகின்றது.
அத்தியாயம் 3 பதம் 27
ப்ரக்ருதே: க்ரியமாணானி
குணை: கர்மாணி ஸர்வஷ:
அஹங்கார–விமூடாத்மா
கர்தாஹம் இதி மன்யதே
அஹங்காரத்தினால் பாதிக்கப்பட்டு மயங்கிய ஆத்மா, பௌதிக இயற்கையின் முக்குணங்களால் நடைபெறும் செயல்களுக்குத் தன்னையே கர்த்தா என்று எண்ணிக் கொள்கிறான்.
அத்தியாயம் 3 பதம் 37
ஸ்ரீ-பகவான் உவாச
காம ஏஷ க்ரோத ஏஷ
ரஜோ-குண-ஸமுத்பவ:
மஹாஷனோ மஹா-பாப்மா
வித்த்-யேனம் இஹ வைரிணம்
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: அர்ஜுனா, காமமே இதற்குக் காரணம். ரஜோ குணத்தில் உற்பத்தியாகி, பின்னர் கோபமாக உருவெடுக்கும் இஃது இவ்வுலகின் எல்லாவற்றையும் அழிக்கும் பாவகரமான விரோதியாகும்.
அத்தியாயம் 4 பதம் 1
ஸ்ரீ-பகவான் உவாச
இமம் விவஸ்வதே யோகம்
ப்ரோக்தவான் அஹம் அவ்யயம்
விவஸ்வான் மனவே ப்ராஹ
மனுர் இக்ஷ்வாகவே (அ)ப்ரவீத்
புருஷோத்தமரான முழு முதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: அழிவற்ற இந்த யோக விஞ்ஞானத்தை நான் சூரிய தேவனான விவஸ்]வானுக்கு உபதேசித்தேன். விவஸ்]வான் மனித குலத் தந்தையான மனுவுக்கும், மனு, இக்ஷ்வாகு மன்னனுக்கும் இதனை முறையே உபதேசித்தனர்.
அத்தியாயம் 4 பதம் 2
ஏவம் பரம்பரா-ப்ராப்தம்
இமம் ராஜர்ஷயோ விது:
ஸ காலேனேஹ மஹதா
யோகோ நஷ்ட: பரந்தப
உன்னதமான இவ்விஞ்ஞானம் சீடர்களின் சங்கிலித் தொடர் மூலமாகப் பெறப்பட்டு, அவ்வாறே புனிதமான மன்னர்களால் உணரப்பட்டது. ஆனால், காலப்போக்கில் அத்தொடர் விட்டுப்போகவே, இவ்விஞ்ஞானம் மறைந்துவிட்டதை போலத் தோன்றுகின்றது.
அத்தியாயம் 4 பதம் 3
ஸ ஏவாயம் மயா தே (அ)த்ய
யோக: ப்ரோக்த: புராதன:
பக்தோ (அ)ஸி மே ஸகா சேதி
ரஹஸ்யம் ஹ்யேதத் உத்தமம்
பரமனுடன் உறவு கொள்வதைப் பற்றிய அதே பழம்பெரும் விஞ்ஞானத்தை நான் இன்று உனக்கு எடுத்துரைத்துள்ளேன்; ஏனெனில், நீ எனது பக்தனும் நண்பனுமாதலால் இந்த விஞ்ஞானத்தின் உத்தம இரகசியத்தை உன்னால் புரிந்துகொள்ள முடியும்.
அத்தியாயம் 4 பதம் 6
அஜோ (அ) பி ஸன்ன் அவ்யயாத்மா
பூதானாம் ஈஷ்வரோ (அ)பி ஸன்
ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய
ஸம்பவாம்-யாத்ம-மாயயா
நான் பிறப்பற்றவனாக இருந்தாலும், எனது திவ்யமான உடல் அழிவற்றதாக இருந்தாலும், உயிர்வாழிகள் அனைவருக்கும் நானே இறைவனாக இருந்தாலும், நான் எனது சுயமான திவ்ய உருவில் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகின்றேன்.
அத்தியாயம் 4 பதம் 7
யதா யதா ஹி தர்மஸ்ய
க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய
ததாத்மானம் ஸ்ருஜாம்-யஹம்
எப்போதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, பரத குலத் தோன்றலே, அப்போதெல்லாம் நான் தோன்றுகின்றேன்.
அத்தியாயம் 4 பதம் 8
பரித்ராணாய ஸாதூனாம்
வினாஷாய ச துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸதாபனார்தாய
ஸம்பவாமி யுகே யுகே
Translation:
பக்தர்களைக் காத்து, துஷ்டர்களை அழித்து, தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைத்துவதற்காக, நானே யுகந்தோறும் தோன்றுகிறேன்.
அத்தியாயம் 4 பதம் 9
ஜன்ம கர்ம ச மே திவ்யம்
ஏவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம
நைதி மாம் ஏதி ஸோ (அ)ர்ஜுன
எனது தோற்றமும் செயல்களும் திவ்யமானவை என்பதை எவனொருவன் அறிகின்றானோ, அவன் இந்த உடலைவிட்ட பின், மீண்டும் இப்பௌதிக உலகில் பிறவு எடுப்பதில்லை. அர்ஜுனா, அவன் எனது நித்திய உலகை அடைகின்றான்.
அத்தியாயம் 4 பதம் 10
வீத-ராக-பய-க்ரோதா
மன் மயா மாம் உபாஷ்ரிதா:
பஹவோ க்ஞான-தபஸா
பூதா மத்-பாவம் ஆகதா:
பற்றுதல், பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டு, முழுதும் என்னில்லயித்து, என்னை சரணடைந்த பற்பல நபர்கள் என்னைப் பற்றிய அறிவால் இதற்கு முன் தூய்மையடைந்துள்ளனர். இவ்வாறாக, அவர்கள் எல்லாரும் என் மீது திவ்யமான அன்புடையவர்களாயினர்.
அத்தியாயம் 4 பதம் 11
யே யதா மாம் ப்ரபத்யந்தே
தாம்ஸ் ததைவ பஜாம்-யஹம்
மம வர்த்மானுவர்தந்தே
மனுஷ்யா: பார்த ஸர்வஷ:
என்னிடம் சரணடைவதற்கு ஏற்றாற் போல, நான் அனைவருக்கும் பலனளிக்கின்றேன். பிருதாவின் மகனே, எல்லா விதத்திலும் அனைவரும் என் வழியையே பின்பற்றுகின்றனர்.
அத்தியாயம் 4 பதம் 13
சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்
குண-கர்ம-விபாகஷ:
தஸ்ய கர்தாரம் அபி மாம்
வித்த்-யகர்த்தாரம் அவ்யயம்
மூன்றுவித இயற்கை குணங்களுக்கும் அவற்றின் செயல்களுக்கும் ஏற்ப, மனித சமூகத்தின் நால்வகைப் பிரிவுகள் என்னால் ஏற்படுத்தப்பட்டன. இம்முறையைப் படைத்தவன் நானேயாயினும் மாற்றமற்ற என்னைச் செயல்களுக்கு அப்பாற்பட்டவனாக அறிந்துகொள்.
அத்தியாயம் 4 பதம் 34
தத்வித்தி ப்ரணிபாதேன
பரிப்ரஷ்னேன ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே க்ஞானம்
க்ஞானினஸ் தத்த்வ-தர்ஷின:
ஆன்மீக குருவை அணுகி உண்மையை அறிய முயற்சி செய். அடக்கத்துடன் அவரிடம் கேள்விகள் கேட்டு அவருக்குத் தொண்டு செய். உண்மையைக் கண்டவர்களான தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்கள் உனக்கு ஞானத்தை அளிக்க முடியும்.
அத்தியாயம் 5 பதம் 18
வித்யா-வினய-ஸம்பன்னே
ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி
ஷுனி சைவ ஷ்வ-பாகே ச
பண்டிதா: ஸம-தர்ஷின:
அடக்கமுள்ள பண்டிதர்கள் தங்களது உண்மை ஞானத்தின் வாயிலாக, கற்றறிந்த தன்னடக்கமுள்ள பிராமணன், பசு யானை, நாய், நாயைத் தின்பவன் (கீழ் ஜாதி) என அனை வரையும் சம நோக்கில் காண்கின்றனர்.
அத்தியாயம் 5 பதம் 22
யே ஹி ஸம்ஸ்பர்ஷ-ஜா போகா
து: க-யோனய ஏவ தே
ஆத்-யந்தவந்த: கௌந்தேய
ந தேஷு ரமதே புத:
ஜடப் புலன்களின் தொடர்பினால் வரும் இன்பம், துன்பங்களுக்குக் காரணமாக இருப்பதால், அறிவுடையோன் அதில் பங்கு கொள்வதில்லை. குந்தியின் மகனே, இத்தகு இன்பங்களுக்கு ஆரம்பமும் முடிவும் இருப்பதால், அறிவுடையோன் இவற்றினால் மகிழ்ச்சியடைவதில்லை.
அத்தியாயம் 5 பதம் 29
போக்தாரம் யக்ஞ-தபஸாம்
ஸர்வ-லோக-மஹேஷ்வரம்
ஸுஹ்ருத ம் ஸர்வ-பூதானாம்
க்ஞாத்வா மாம் ஷாந்திம் ருச்சதி
நானே, எல்லா யாகங்களையும், தவங்களையும், இறுதியில் அனுபவிப்பவன் என்றும், எல்லா லோகங்களையும், தேவர்களையும், கட்டுப்படுத்துபவன் என்றும், எல்லா உயிர்வாழிகளின் உற்ற நண்பன் என்றும் அறிந்து, என்னைப் பற்றிய முழு உணர்வில் இருப்பவன், ஜடத்துயரங்களிலிருநது விடுபட்டு அமைதி அடைகிறான்.
அத்தியாயம் 6 பதம் 17
யுக்தாஹார-விஹாரஸ்ய
யுக்த-சேஷ்டஸ்ய கர்மஸு
யுக்த-ஸ்வப்னாவபோதஸ்ய
யோகோ பவதி து: க-ஹா
உண்ணுதல், உறங்குதல், உழைத்தல், கேளிக்கை ஆகிய பழக்கங்களை நெறிப்படுத்தியவன், யோகப் பயிற்சியின் மூலமாக எல்லாத் துன்பங்களையும் பெருமளவில் நீக்கிவிட முடியும்.
அத்தியாயம் 6 பதம் 41
ப்ராப்ய புண்ய-க்ருதாம் லோகான்
உஷித்வா ஷாஷ்வதீ: ஸமா:
ஷுசீனாம் ஸ்ரீமதாம் கேஹே
யோக-ப்ரஷ்டோ (அ)பிஜாயதே
வெற்றியடையாத யோகி, புண்ணிய ஆத்மாக்களின் லோகங்களில் பற்பல வருடங்கள் அனுபவித்தபின், நல்லோரின் குடும்பத்தில், அல்லது பெரும் செல்வந்தரின் குடும்பத்தில் பிறக்கின்றான்.
அத்தியாயம் 6 பதம் 47
யோகினாம் அபி ஸர்வேஷாம்
மத்-கதேனாந்தர்-ஆத்மனா
ஷ்ரத்தாவான் பஜதே யோ மாம்
ஸ மே யுக்ததமோ மத:
மேலும், எல்லா யோகிகளுக்கு மத்தியில், எவனொருவன் பெரும் நம்பிக்கையுடன் எப்போதும் என்னில் நிலைத்து, தன்னுள் என்னை எண்ணி, எனக்கு திவ்யமான அன்புத் தொண்டு புரிகின்றானோ, அவனே யோகத்தில் என்னுடன் மிகவும் நெருங்கியவனும் எல்லாரையும்விட உயர்ந்தவனும் ஆவான். இதுவே எனது அபிப்பிராயம்.
அத்தியாயம் 7 பதம் 3
மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு
கஷ்சித் யததி ஸித்தயே
யததாம் அபி ஸித்தானாம்
கஷ்சின் மாம் வேத்தி தத்த்வத:
ஆயிரமாயிரம் மனிதர்களில் யாரேனும் ஒருவன் பக்குவமடைய முயற்சி செய்யலாம். அவ்வாறு பக்குவமடைந்தவர்களில் கூட யாரேனும் ஒருவனே என்னை உண்மையாக அறிகிறான்.
அத்தியாயம் 7 பதம் 4
பூமிர் ஆபோ (அ)னலோ வாயு:
கம் மனோ புத்திர் ஏவ ச
அஹங்கார இதீயம் மே
பின்னா ப்ரக்ருதிர் அஷ்டதா
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம்—இந்த எட்டும் சேர்ந்ததே எனது பிரிந்த ஜட சக்திகளாகும்.
அத்தியாயம் 7 பதம் 5
அபரேயம்இதஸ் த்வன்யாம்
ப்ரக்ருதிம் வித்தி மே பராம்
ஜீவ-பூதாம் மஹா-பாஹோ
யயேதம் தார்யதே ஜகத்
பலம் பொருந்திய புயங்களை உடைய அர்ஜுனா, இதற்கு அப்பால், என்னுடைய உயந்த சக்தி ஒன்று உள்ளது. இந்த தாழ்ந்த ஜட இயற்கையினை தனது சுயநலனிற்காக உபயோகிக்ககூடிய ஜீவாத்மாக்களை அஃது உள்ளடக்கியதாகும்.
அத்தியாயம் 7 பதம் 7
மத்த: பரதரம் நான்யத்
கிஞ்சித் அஸ்தி தனஞ்ஜய
மயி ஸ்ர்வம் இதம் ப்ரோதம்
ஸூத்ரே மணி-கணா இவ
செல்வத்தை வெல்வோனே, என்னைவிட உயர்ந்த உண்மை ஏதுமில்லை. நூலில் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளதுபோல, அனைத்தும் என்னையே சார்ந்துள்ளன
அத்தியாயம் 7 பதம் 14
தைவீ ஹ்யேஷா குண—மயீ
மம மாயா துரத்யயா
மாம் ஏவ யே ப்ரபத்யந்தே
மாயாம் ஏதாம் தரந்தி தே
ஜட இயற்கையின் முக்குணங்களாலான எனது இந்த தெய்வீக சக்தி வெல்லுவதற்கரியது. ஆனால் என்னிடம் சரணடைந்தோர் இதனை எளிதில் கடக்கலாம்.
அத்தியாயம் 7 பதம் 15
ந மாம் துஷ்க்ருதினோ மூடா
ப்ரபத் யந்தே நராத மா:
மாயயாபஹ்ருத-க்ஞானா
ஆஸுரம் பாவம் ஆஷ்ரிதா:
சற்றும் அறிவற்ற மூடர்களும், மனிதரில் கடைநிலையோரும், மாயையால் அறிவு கவரப்பட்டவர்களும், அசுரரின் நாத்திகத் தன்மையை ஏற்றவர்களுமான துஷ்டர்கள் என்னிடம் சரணடையவதில்லை.
அத்தியாயம் 7 பதம் 16
சதுர்-விதா பஜந்தே மாம்
ஜனா: ஸுக்ருதினோ (அ)ர்ஜுன
ஆர்தோ ஜிக்ஞாஸுர் அர்தார்தீ
க்ஞானி ச பரதர்ஷப
பரதர்களில் சிறந்தவனே, நான்கு விதமான நல்லோர் எனக்குத் தொண்டு புரிகின்றனர்— துயருற்றோர், செல்வத்தை விரும்புவோர், கேள்வியுடையோர், பூரணத்தின் அறிவைத் தேடுவோர் என்பவர் அவர்கள்.
அத்தியாயம் 7 பதம் 19
பஹூனாம் ஜன்மனாம் அந்தே
க்ஞானவான் மாம் ப்ரபத்யதே
வாஸுதேவ: ஸர்வம் இதி
ஸ மஹாத்மா ஸு-துர்லப:
பற்பல பிறவிகளுக்குப் பின், உண்மையான அறிவுடையவன், எல்லாக் காரணங்களுக்கும் காரணமாக, எல்லாமாக என்னை அறிந்து, என்னிடம் சரணடைகிறான். அத்தகைய மகாத்மா மிகவும் அரிதானவன்.
அத்தியாயம் 7 பதம் 25
நாஹம் ப்ரகாஷ: ஸர்வஸ்ய
யோக-மாயா-ஸமாவ்ருத:
மூடோ (அ)யம் நாபிஜானாதி
லோகோ மாம் அஜம் அவ்யயம்
சிற்றறிவுடையோருக்கும் முட்டாளுக்கும் நான் ஒருபோதும் தோன்றுவதில்லை. நான் எனது அந்தரங்க சக்தியால் கவரப்பட்டுள்ளேன், எனவே நான் பிறப்பற்றவன், அழிவற்றவன் என்பதை இவர்கள் அறிவதில்லை.
அத்தியாயம் 7 பதம் 26
வேதாஹம் ஸமதீதானி
வர்தமானானி சார்ஜுன
பவிஷ்யாணி ச பூதானி
மாம் து வேத ந கஷ்சன
அர்ஜுனா, முழுமுதற் கடவுளான நான், கடந்த காலத்தில் நடந்தவை, தற்போது நடப்பவை, இனி நடக்க போகின்றவை அனைத்தையும் அறிவேன். நான் எல்லா ஜீவாத்மாக்களையும் நன்கறிவேன், ஆனால் என்னை அறிந்தவர் யாருமில்லை.
அத்தியாயம் 7 பதம் 27
இச்சா-த்வேஷ-ஸமுத்தேன
த்வந்த்வ-மோஹேன பாரத
ஸர்வ-பூதானி ஸம்மோஹம்
ஸர்கே யாந்தி பரந்தப
பரத குலத் தோன்றலே, எதிரிகளை வெல்வோனே, விருப்பு வெறுப்பினால் உண்டான இருமைகளில் மயங்கியுள்ள எல்லா உயிர்வாழிகளும், மிகுந்த குழப்பதுடன் பிறந்துள்ளனர்
அத்தியாயம் 7 பதம் 28
யேஷாம் த்வந்த-கதம் பாபம்
ஜனானாம் புண்ய-கர்மணாம்
தே த்வந்த்வ-மோஹ-நிர்முக்தா
பஜந்தே மாம் த்ருட-வ்ரதா
முற்பிறவியிலும் இப்பிறவியிலும் புண்ணிய செயல்களில் ஈடுபட்டு, எவர்களது பாவ விளைவுகள் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டதோ, எவர்கள் மயக்கத்தின் இருமையிலிருந்து பூரணமாக விடுபட்டுள்ளார்களோ, அவர்களே எனது பக்தித் தொண்டில் மனவுறுதியுடன் ஈடுபடுவர்.
அத்தியாயம் 8 பதம் 5
அந்த-காலே ச மாம் ஏவ
ஸ்மரன் முக்த்வா கலேவரம்
ய: ப்ரயாதி ஸ மத்-பாவம்
யாதி நாஸ்த்-யத்ர ஸம்ஷய:
மேலும், தனது வாழ்வின் இறுதி காலத்தில், யாராவது என்னை மட்டும் எண்ணிக் கொண்டு உடலை விட்டால், உடனடியாக அவன் என்னுடைய இயற்கையை அடைகிறான். இதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
அத்தியாயம் 8 பதம் 6
யம் யம் வாபி ஸ்மரன் பாவம்
தய்ஜத்-யந்தே கலேவரம்
தம் தம் ஏவைதி கௌந்தேய
ஸதா தத்-பாவ-பாவித:
ஒருவன் தனது உடலை விடும்போது எந்த நிலையை எண்ணுகின்றானோ, ஐயமின்றி அந்நிலையை அவன்அடைகிறான்.
அத்தியாயம் 8 பதம் 7
தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு
மாம் அனுஸ்மர யுத்ய ச
மய்-யர்பித- மனோ புத்திர்
மாம் ஏவைஷ்யஸ்-யஸம்ஷய:
எனவே, அர்ஜுனா, என்னை இந்த (கிருஷ்ண) உருவில் எப்போதும் எண்ணிக் கொண்டு, அதே சமயம் உனக்கு விதிக்கப்பட்ட கடமையான போரிடுதலையும் செய்வாயாக. உன்னுடைய செயல்களை எனக்கு அர்ப்பணித்து, உன்னுடைய மனதையும் புத்தியையும் என்னில் நிலைநிறுத்துவதன் மூலம், நீ என்னையே அடைவாய் என்பதில் ஐயமில்லை.
அத்தியாயம் 8 பதம் 14
அனன்யா-சேதா ஸததம்
யோ மாம் ஸ்மரதி நித்யஷ:
தஸ்யாஹம் ஸுலப: பார்த
நித்ய-யுக்தஸ்ய யோகின:
பிருதாவின் மகனே, பிறழாத மனதுடன் என்னை எப்போதும் நினைப்பவன், சுலபமாக என்னை அடைகிறான்; ஏனெனில், அவன் பக்தித் தொண்டில் இடையறாது ஈடுபட்டுள்ளான்.
அத்தியாயம் 8 பதம் 15
மாம் உபேத்ய புனர் ஜன்ம
து: காலயம்-அஷாஷ்வதம்
நாப்னுவந்தி மஹாத்மான:
ஸம்ஸித்திம் பரமாம் கதா:
பக்தியில் யோகிகளான மகாத்மாக்கள் என்னை அடைந்த பிறகு, முற்றிலும் துன்பம் நிறைந்த இந்த தற்காலிகமான உலகத்திற்குத் திரும்பி வருவதே இல்லை, ஏனெனில், அவர்கள் மிகவுயர்ந்த பக்குவத்தை அடைந்துவிட்டனர்.
அத்தியாயம் 8 பதம் 16
ஆ-ப்ரஹ்ம-புவனால் லோகா:
புனர் ஆவர்தினோ (அ)ர்ஜுன
மாம் உபேத்ய து கௌந்தேய
புனர் ஜன்ம ந வித்யதே
ஜடவுலகின் மிகவுயர்ந்த லோகத்திலிருந்து மிகவும் தாழ்ந்த லோகம் வரை, அனைத்தும் பிறப்பும் இறப்பும் மாறி மாறி நடைபெறும் துன்பம் நிறைந்த இடங்களே. ஆனால் குந்தியின் மகனே, என்னுடைய இடத்தை அடைபவன் என்றும் மறுபிறவி எடுப்பதில்லை.
அத்தியாயம் 8 பதம் 28
வேதேஷு யக்ஞேஷு தப:ஸு சைவ
தானேஷு யத் புண்ய-பலம் ப்ரதிஷ்டம்
அத்யேதி தத் ஸர்வம் இதம் விதித்வா
யோகீ பரம் ஸ்தானம் உபைதி சாத்யம்
பக்தித் தொண்டின் பாதையை ஏற்பவன், வேதங்களைப் படித்தல், யாகங்களைச் செய்தல், தவம் புரிதல், தானம் கொடுத்தல், கர்ம, ஞானப் பாதைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றால் அடையப்படும் பலன்களை இழப்பதில்லை. பக்தித் தொண்டை செய்வதன் மூலமாகவே இவையனைத்தையும் பெற்று, இறுதியில் நித்தியமான உன்னத இடத்தை அவன் அடைகிறான்
அத்தியாயம் 9 பதம் 2
ராஜ-வித்யா ராஜ-குஹ்யம்
பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம்
ஸு ஸுகம் கர்தும் அவ்யயம்
இந்த அறிவு, கல்வியின் அரசனும், எல்லா இரகசியங்களிலும் மிக இரகசியமானதும், மிகத் தூய்மையானதுமாகும். தன்னுணர்வின் அனுபவத்தை நேரடியாக அளிப்பதால் இதுவே தர்மத்தின் பக்குவ நிலையாகும். இஃது அழிவற்றதும், பேரின்பத்துடன் செயலாற்றுப்படுவதும் ஆகும்
அத்தியாயம் 9 பதம் 4
மயா ததம் இதம் ஸர்வம்
ஜகத் அவ்யக்த-மூர்தினா
மத்-ஸ்தானி ஸர்வ-பூதானி
ந சாஹம் தேஷ்-வவஸ்தி த:
நான் எனது தோன்றாத உருவின் மூலம் இந்த அகிலம் முழுவதும் பரவியுள்ளேன். எல்லா ஜீவன்களும் என்னில் இருக்கின்றன்; ஆனால் அவர்களில் நான் இல்லை.
அத்தியாயம் 9 பதம் 10
மயாத்யக்ஷேண ப்ரக்ருதி:
ஸூயதே ஸ-சராசரம்
ஹேதுனாநேன கௌந்தேய
ஜகத் விபரிவர்ததே
குந்தியின் மகனே, எனது சக்திகளில் ஒன்றான இந்த ஜட இயற்கை, எனது மேற்பார்வையில் செயல்பட்டு, அசைகின்ற மற்றும் அசையாதவற்றை எல்லாம் உண்டாக்குகின்றது. அதன் ஆணைப்படி, இந்தத் தோற்றம் மீண்டும் மீண்டும் படைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றது.
அத்தியாயம் 9 பதம் 11
அவஜானந்தி மாம் மூடா
மானுஷீம் தனும் ஆஷ்ரிதம்
பரம் பாவம் அஜானந்தோ
மம பூத-மஹேஷ்வரம்
மனித உருவில் நான் தோன்றும்போது முட்டாள்கள் என்னை ஏளனம் செய்கின்றனர். எனது பரம இயற்கையை, அதாவது, இருப்பவை அனைத்திற்கும் நானே உன்னத உரிமையாளன் என்பதை அவர்கள் அறியார்கள்.
அத்தியாயம் 9 பதம் 12
மோகாஷா மோக-கர்மாணோ
மோக-க்ஞானா விசேதஸ:
ராக்ஷஸீம் ஆஸுரீம் சைவ
ப்ரக்ருதிம் மோஹினீம் ஷ்ரிதா:
இவ்வாறு குழம்பியவர்கள், ராட்சசத்தனமாக கருத்துக்களாலும் நாத்திகக் கருத்துக்களாலும் கவரப்படுகின்றனர். அத்தகு மயங்கிய நிலையில், அவர்களது முக்திக்கான ஆவல்கள், பலன் நோக்குச் செயல்கள், அறிவுப் பயிற்சிகள் ஆகிய அனைத்தும் தோல்வியடைகின்றன.
அத்தியாயம் 9 பதம் 13
மஹாத்மானஸ் து மாம் பார்த
தைவீம் ப்ரக்ருதிம் ஆஷ்ரிதா:
பஜந்த்-யனன்ய-மனஸோ
க்ஞாத்வா பூதாதிம் அவ்யயம்
பிருதாவின் மகனே, குழப்பமடையாத மகாத்மாக்களோ தெய்வீக இயற்கையின் பாதுகாப்பில் உள்ளனர். அவர்கள், பரம புருஷ பகவானான என்னை, ஆதிபுருஷனாகவும் அழிவற்றவனாகவும் அறிந்து, எனது பக்தித் தொண்டில் பூரணமாக ஈடுபட்டுள்ளனர்.
அத்தியாயம் 9 பதம் 14
ஸததம் கீர்தயந்தோ மாம்
யதந்தஷ் சத்ருட-வ்ரதா
நமஸ்யந்தஷ் ச மாம் பக்தயா
நித்ய-யுக்தா உபாஸதே
எப்போதும் எனது புகழை கீர்த்தனம் செய்து கொண்டு, திடமான உறுதியுடன் முயன்று கொண்டு, எனக்கு வந்தனை செய்தபடி, இந்த மகாத்மாக்கள் பக்தியுடன் நித்தியமாக என்னை வழிபடுகின்றனர்.
அத்தியாயம் 9 பதம் 22
அனன்யாஷ் சிந்தயந்தோ மாம்
யே ஜனா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபி யுக்தானாம்
யோக-க்ஷேமம் வஹாம்-யஹம்
ஆனால் எனது திவ்ய ரூபத்தின் மீது தியானம் செய்துகொண்டு, களங்கமற்ற (அனன்ய) பக்தியுடன் என்னை நித்தியமாக வழிபடுபவர்களுக்கோ, அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தும், அவர்களிடம் இருப்பவற்றை காத்தும் நான் பாலிக்கின்றேன்.
அத்தியாயம் 9 பதம் 25
யாந்தி தேவ-வ்ரதா தேவான்
பித்ரூன் யாந்தி பித்ரு-வ்ரதா:
பூதானி யாந்தி பூதேஜ்யா
யாந்தி மத்-யாஜினோ (அ)பி மாம்
தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்களிடையே பிறப்பவர்; முன்னோர்களை வழிபடுபவர்கள் முன்னோர்களிடம் செல்வர்; பூதங்களை வழிபடுபவர்கள் பூதங்களிடையே பிறப்பர்; மேலும், என்னை வழிபடுபவர்கள் என்னுடனே வாழ்வர்.
அத்தியாயம் 9 பதம் 26
பத்ரம் புஷ்பம் பலம் தோயம்
யோ மே பக்த்யா ப்ரயச்சதி
தத் அஹம் பக்த்-யுபஹ்ருதம்
அஷ்னாமி ப்ரயதாத்மன:
அன்புடனும் பக்தியுடனும் ஒருவன் எனக்கு ஓர் இலையோ, ஓரு பூவோ, ஒரு பழமோ, நீரோ அளித்தால் அதனை நான் ஏற்கின்றேன்.
அத்தியாயம் 9 பதம் 27
யத் கரோஷி யத் அஷ்னாஸி
யஜ் ஜுஹோஷி ததாஸி யத்
யத் தபஸ்யஸி கௌந்தேய
தத் குருஷ்வ மத்-அர்பணம்
குந்தியின் மகனே, எதையெல்லாம் நீ செய்கின்றாயோ, எதையெல்லாம் நீ உண்கின்றாயோ, எதையெல்லாம் நீ படைக்கின்றாயோ, எதையெல்லாம் நீ கொடுக்கின்றாயோ, எந்த தவங்களையெல்லாம் நீ செய்கின்றாயோ, அதனை எனக்கு அர்ப்பணமாக செய்வாயாக.
அத்தியாயம் 9 பதம் 29
ஸமோ (அ)ஹம் ஸர்வ-பூதேஷு
ந மே த்வேஷ்யோ (அ)ஸ்தி ந ப்ரிய:
யே பஜந்தி து மாம் பக்த்யா
மயி தே தேஷு சாப்-யஹம்
நான் யாரிடமும் பொறாமை கொள்வதோ, பாரபட்சம் காட்டுவதோ இல்லை. நான் அனைவருக்கும் சமமானவன். ஆயினும் பக்தியுடன் எனக்கு அன்புத் தொண்டு புரிபவன் யாராயினும், அவன் எனது நண்பன். அவன் என்னில் இருக்கிறான். நானும் அவனுக்கு நண்பனாகிறேன்.
அத்தியாயம் 9 பதம் 30
அபி சேத் ஸு-துராசாரோ
பஜதே மாம் அனன்ய-பாக்
ஸாதுர் ஏவ ஸ மந்தவ்ய:
ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ:
ஒருவன் மிகவும் மோசமான செயலைச் செய்தாலும், அவன் பக்தித் தொண்டில் பிறழாது ஈடுபட்டிருந்தால், அவனை சாதுவாகவே கருத வேண்டும்; ஏனெனில், அவன் தனது தீர்மானத்தில் திடமாக உள்ளான்.
அத்தியாயம் 9 பதம் 32
மாம் ஹி பார்த வ்யபாஷ்ரித்ய
யே (அ)பி ஸ்யு: பாப-யோனய:
ஸ்த்ரியோ வைஷ்யாஸ் ததா ஷூத்ராஸ்
தே (அ)பி யாந்தி பராம் கதிம்
பிருதாவின் மகனே, பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என கீழ் குலத்தைச் சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும், என்னிடம் சரணடைபவர்கள் பரமகதியை அடைய முடியும்.
அத்தியாயம் 9 பதம் 34
மன்-மனா பவ மத்-பக்தோ
மத்-யாஜீ மாம் நமஸ்குரு
மாம் ஏவைஷ்யஸி யுக்த்வைவம்
ஆத்மானம் மத்-பராயண:
உனது மனதை எப்பொழுதும் என்னைப் பற்றிச் சிந்திப்பதில் ஈடுபடுத்தி, எனது பக்தனாகி, எனக்கு வந்தனை செய்து, என்னை வழிபடுவாயாக இவ்வாறாக என்னில் முழுமையாக லயித்து, நிச்சயமாக நீ என்னிடமே வருவாய்.
அத்தியாயம் 10 பதம் 8
அஹம் ஸவர்வஸ்ய ப்ரபவோ
மத்த: ஸர்வம் ப்ரவர்ததே
இதி மத்வா பஜந்தே மாம்
புதா பாவ-ஸமன்விதா:
ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இதனை நன்றாக அறிந்த அறிஞர்கள், எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, இதயப்பூர்வமாக என்னை வழிபடுகின்றனர்.
அத்தியாயம் 10 பதம் 9
மச்-சித்தா மத்-கத-ப்ராணா
போதயந்த: பரஸ்பரம்
கதயந்தஷ் ச மாம் நித்யம்
துஷ்யந்தி ச ரமந்தி ச
எனது தூய பக்தர்களின் சிந்தனைகள் என்னில் மூழ்கியுள்ளன. அவர்களது வாழ்க்கை எனது தொண்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும், என்னைப் பற்றி தங்களுக்குள் உரையாடுவதிலும் ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொள்வதிலும் இவர்கள் பெரும் திருப்தியும் ஆனந்தமும் அடைகின்றனர்.
அத்தியாயம் 10 பதம் 10
தேஷாம் ஸதத-யுக்தானாம்
பஜதாம் ப்ரீதி-பூர்வகம்
ததாமி புத்தி-யோகம் தம்
யேன மாம் உபயாந்தி தே
எனக்கு அன்புடன் தொண்டு செய்வதில் இடையறாது ஈடுபட்டுள்ளவர்களுக்கு, என்னிடம் வந்தடைவதற்குத் தேவையான அறிவை நானே வழங்குகிறேன்.
அத்தியாயம் 10 பதம் 11
தேஷாம் ஏவானுகம்பார்தம்
அஹம் அக்ஞான-ஜம் தம:
நாஷயாம்-யாத்ம-பாவ-ஸ்தோ
க்ஞான-தீபேன பாஸ்வதா
அவர்களிடம் விஷேச கருணையைக் காட்டுவதற்காக, அவர்களது இதயத்தினுள் வசிக்கும் நான், அறியாமையினால் பிறந்த இருளை ஞானமெனும் சுடர்விடும் தீபத்தினால் அழிக்கின்றேன்.
அத்தியாயம் 10 பதம் 12-13
அர்ஜுன உவாச
பரம் ப்ரஹ்ம பரம் தாம
பவித்ரம் பரமம் பவான்
புருஷம் ஷாஷ்வதம் திவ்யம்
ஆதி-தேவம் அஜம் விபும
அஹுஸ் த்வாம் ருஷய: ஸர்வே
தேவர்ஷிர் நாரத ஸ் ததா
அஸிதோ தேவலோ வ்யாஸ:
ஸ்வயம் சைவ ப்ரவீஷ மே
அர்ஜுனன் கூறினான்: நீரே பரபிரம்மன், உன்னத இருப்பிடம், மிகவும் தூய்மையானவர், பரம சத்தியம், நீரே நித்தியமானவர், திவ்யமானவர், ஆதி தேவர், பிறப்பற்றவர், மிகப் பெரியவர். உம்மைப் பற்றிய இந்த உண்மையினை, நாரதர், அஸிதர், தேவலர், வியாசர் போன்ற மிகச்சிறந்த ரிஷிகளும் உறுதி செய்துள்ளனர், இப்பொழுது நீரே இதனை எனக்கு அறிவித்துள்ளீர்.
அத்தியாயம் 10 பதம் 41
யத் யத் விபூதிமத் ஸத்த்வம்
ஸ்ரீமத் ஊர்ஜிதம் ஏவ வா
தத் தத் ஏவாவகச்ச த்வம்
மம தேஜோ-(அ)ம்ஷ-ஸம்பவம்
அழகான, புகழத்தக்க வைபவங்கள் அனைத்தும், என்னுடைய தேஜஸின் சிறு பொறியிலிருந்து தோன்றுபவையே என்பதை அறிவாயாக.
அத்தியாயம் 11 பதம் 54
பக்த்யா த்வ் அனன்யயா ஷக்ய
அஹம் ஏவம்-விதோ (அ)ர்ஜுன
க்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேன
ப்ரவேஷ்டும் ச பரந்தப
எனதன்பு அர்ஜுனா, உன் முன் நிற்கும் என்னை, கலப்பற்ற பக்தித் தொண்டினால் மட்டுமே இதுபோன்று நேரடியாகக் காணவும் புரிந்து கொள்ளவும் முடியும். இவ்வழியில் மட்டுமே என்னைப் பற்றிய உண்மையின் இரகசியங்களிலே உன்னால் நுழைய முடியும்.
அத்தியாயம் 11 பதம் 55
மத்-கர்ம-க்ரூன் மத்-பரமோ
மத்-பக்த: ஸங்க-வர்ஜித:
நிர்வைர :ஸர்வ–பூதேஷு
ய: ஸ மாம் ஏதி பாண்டவ
எனதன்பு அர்ஜுனா, எவனொருவன், எனது தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளானோ, பலன்நோக்குச் செயல்கள் மற்றும் மனக்கற்பனைகளின் களங்கங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளானோ, எனக்காக செயல்படுகிறானோ, என்னை தனது வாழ்வின் பரம இலக்காக வைத்துல்லானோ, மற்றும் எல்லா உயிர்களிடத்திலும் நண்பனாக உள்ளானோ, அவன் நிச்சயமாக என்னை வந்தடைகின்றான்.
அத்தியாயம் 12 பதம் 5
க்லேஷோ (அ)திகதரஸ் தேஷாம்
அவ்யக்தாஸக்த-சேதஸாம்
அவ்யக்தா ஹி கதிர்து:கம்
தேஹவத்பிர் அவாப்யதே
எவரது மனம், பரமனின் தோன்றாத அருவத்தன்மையிடம் பற்றுதல் கொண்டுள்ளதோ, அவர்களது வளர்ச்சி மிகவும் கடினமானதாகும். அவ்வழியில் முன்னேற்றம் காண்பது உடலை உடையவர்களுக்கு எப்போதும் சிரமமானதாகும்.
அத்தியாயம் 12 பதம் 8
மய்யேவ மன ஆதத்ஸ்வ
மயி புத்திம் நிவேஷய
நிவஸிஷ்யஸி மய்யேவ
அத ஊர்த்வம் ந ஸம்ஷய:
முழுமுதற் கடவுளான என்மீது உனது மனதை நிறுத்தி, உன்னுடைய முழு அறிவையும் என்னில் ஈடுபடுத்துவாயாக. இவ்வாறு நீ எப்போதும் என்னிலேயே வாழ்வாய் என்பதில் ஐயமில்லை.
அத்தியாயம் 12 பதம் 9
அத சித்தம் ஸமாதாதும்
ந ஷக்னோஷி மயி ஸ்திரம்
அப்யாஸ–யோகேன ததோ
மாம் இச்சாப்தும் தனஞ்ஜய
செல்வத்தை வெல்பவனான எனதன்பு அர்ஜுனா, உனது மனதை என்மீது பிறழாது நிலைநிறுத்த முடியாவிடில், பக்தி யோகத்தின் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுவாயாக. என்னை அடைவதற்கான விருப்பத்தினை இதன் மூலம் விருத்தி செய்வாயாக.
அத்தியாயம் 12 பதம் 10
அப்யாஸே (அ)ப்யஸமர்தோ (அ)ஸி
மத்-கர்ம-பரமோ பவ
மத்-அர்தம் அபி கர்மாணி
குர்வன் ஸித்திம் அவாப்ஸ்யஸி
பக்தி யோகத்தின் விதிகளை உன்னால் பயிற்சி செய்ய முடியாவிடில், எனக்காக மட்டும் செயலாற்ற முயல்வாயாக. ஏனெனில், எனக்காக செயல்படுவதன் மூலம் நீ பக்குவ நிலைக்கு வந்தடைவாய்.
அத்தியாயம் 14 பதம் 4
ஸர்வ-யோனிஷு கௌந்தேய
மூர்தய: ஸம்பவந்தி யா:
தாஸாம் ப்ரஹ்ம மஹத் யோனிர்
அஹம் பீஜ ப்ரத: பிதா
குந்தியின் மைந்தனே, எல்லா உயிரினங்களும் இவ்வுலகில் பிறப்பினால் சாத்தியமாக்கப்படுகின்றன. மேலும், நானே விதை அளிக்கும் தந்தை என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
அத்தியாயம் 14 பதம் 26
மாம் ச யோ (அ)வ்யபிசாரேண
பக்தி-யோகேன ஸேவதே
ஸ குணான் ஸமதீத்யைதான்
ப்ரஹ்ம-பூயாய கல்பதே
எந்தச் சூழ்நிலையிலும் தவறாமல், எனது பூரண பக்தித் தொண்டில் ஈடுபடுபவன், ஜட இயற்கையின் குணங்களை உடனடியாகக் கடந்து, பிரம்மன் நிலைக்கு வந்தடைகின்றான்.
அத்தியாயம் 14 பதம் 27
ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹம்
அம்ருதஸ்யாவ்யயஸ்ய ச
ஷாஷ்வதஸ்ய ச தர்மஸ்ய
ஸுகஸ்யைகாந்திகஸ்ய ச
மேலும், மரணமற்றதும், அழிவற்றதும், நித்தியமானதும், இறுதி இன்பத்தின் தர்மமுமான அருவ பிரம்மனின் ஆதாரம் நானே
அத்தியாயம் 15 பதம் 5
நிர்மான-மோஹா ஜித-ஸங்க-தோஷா
அத்பாத்ம-நித்யா வினிவ்ருத்த-காமா:
த்வந்த்வைர் விமுக்தா: ஸுக-து:க-ஸம்ஞைர்
கச்சந்த்-யமூடா: பதம் அவ்யயம் தத்
பொய் கெளரவம், மயக்கம் மற்றும் தவறான சங்கத்திலிருந்து விடுபட்டு, நித்தியத்தைப் புரிந்து கொண்டு, பெளதிக காமத்தை நிறுத்திவிட்டு, இன்ப துன்பம் என்னும் இருமையை ஒழித்து, மயக்கமுறாமல் இருப்பவர்கள், பரம புருஷரிடம் சரணடைவது எவ்வாறு என்பதை அறிந்து, அந்த நித்திய ராஜ்ஜியத்தை அடைகின்றனர்.
அத்தியாயம் 15 பதம் 6
ந தத் பாஸயதே ஸூர்யோ
ந ஷஷாங்கொ ந பாவக:
யத் கத்வா ந நிவர்தந்தே
தத் தாம பரமம் மம
எனது அந்த பரம வாசஸ்தலம் சூரியனாலோ, சந்திரனாலோ, நெருப்பினாலோ, மின்சாரத்தினாலோ ஒளியூட்டப்படுவது இல்லை. அதனை அடைபவர்கள் ஒருபோதும் இந்த ஜட உலகிற்குத் திரும்புவதில்லை.
அத்தியாயம் 15 பதம் 7
மமைவாம்ஷோ ஜீவ-லோகே
ஜீவ-பூத: ஸனாதன:
மன:-ஷஷ்டானீந்த்ரியாணி
ப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி
இந்தக் கட்டுண்ட உலகில் இருக்கும் ஜீவாத்மாக்கள் எல்லாரும் எனது நித்தியமான அம்சங்களாவர். கட்டுண்ட வாழ்வின் காரணத்தால், மனம் உட்பட ஆறு புலன்களுடன் இவர்கள் மிகவும் கடினமாக சிரமப்படுகின்றனர்.
அத்தியாயம் 15 பதம் 15
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்டோ
மத்த: ஸ்ம்ருதிர் க்ஞானம் அபோஹனம் ச
வேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்யோ
வேதாந்த-க்ருத் வேத-வித் ஏவ சாஹம்
நான் எல்லாருடைய இதயத்திலும் வீற்றுள்ளேன், என்னிடமிருந்தே ஞாபகசக்தியும் அறிவும் மறதியும் உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும் அறியப்பட வேண்டியவன் நானே. உண்மையில், வேதாந்தத்தை தொகுத்தவனும் வேதங்களை அறிபவனும் நானே.
அத்தியாயம் 15 பதம் 19
யோ மாம் ஏவம் அஸம்மூடோ
ஜானாதி புருஷோத்தமம்
ஸ ஸர்வ-வித் பஜதி மாம்
ஸர்வ-பாவேன பாரத
எவனொருவன் என்னை பரம புருஷ பகவானாக ஐயமின்றி அறிகின்றானோ, அவன் எல்லாவற்றையும் அறிந்தவனாவான். எனவே, பரதனின் மைந்தனே, அவன் எனது பக்தித் தொண்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றான்.
அத்தியாயம் 18 பதம் 42
ஷமோ தமஸ் தப: ஷெளசம்
க்ஷாந்திர் ஆர்ஜவம் ஏவ ச
க்ஞானம் விக்ஞானம் ஆஸ்திக்யம்
ப்ரஹ்ம-கர்ம ஸ்வபாவ-ஜம்
அமைதி, சுயக்கட்டுப்பாடு, தவம், தூய்மை, சகிப்புத்தன்மை, நேர்மை, அறிவு, பகுத்தறிவு, ஆத்திகம் ஆகிய இயற்கையான தன்மைகளில் பிராமணர்கள் செயல்படுகின்றனர்.
அத்தியாயம் 18 பதம் 54
ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்னாத்மா
ந ஷோசதி ந காங்க்ஷதி
ஸம: ஸர்வேஷு பூதேஷு
மத்-பக்திம் லபதே பராம்
இவ்வாறு தெய்வீகமாக நிலைபெற்றவன், உடனடியாக பரபிரம்மனை உணர்ந்து இன்பம் நிறைந்தவனாகின்றான். அவன் என்றும் கவலைப்படுவதில்லை, எதையும் அடைய வேண்டும் என்று விரும்புவதுமில்லை. எல்லா உயிர்வாழிகளிடமும் அவன் சமநோக்கு கொள்கிறான். அத்தகு நிலையில் அவன் எனது தூய பக்தித் தொண்டை அடைகின்றான்.
அத்தியாயம் 18 பதம் 55
பக்த்யா மாம் அபிஜானாதி
யாவான் யஷ் சாஸ்மி தத்த்வத:
ததோ மாம் தத்த்வதோ க்ஞாத்வா
விஷதே தத்-அனந்தரம்
பக்தித்தொண்டால் மட்டுமே என்னை, முழுமுதற் கடவுளாக, உள்ளது உள்ளபடி, அறிந்துகொள்ள முடியும். என்னைப் பற்றிய முழுமையான உணர்வை அத்தகு பக்தியினால் அடையும்போது இறைவனின் திருநாட்டிற்குள் நுழைய முடியும்
அத்தியாயம் 18 பதம் 58
மச்-சித்த: ஸர்வ-துர்காணி
மத்-ப்ரஸாதாத் தரிஷ்யஸி
அத சேத் த்வம் அஹங்காரான்
ந ஷ்ரோஷ்யஸி வினங்க்ஷ்யஸி
நீ என்னைப் பற்றிய உணர்வில் நிலைபெற்றால், எனது கருணையின் மூலம், கட்டுண்ட வாழ்வின் எல்லாத் தடங்கல்களையும் கடந்துவிடுவாய். ஆனால், அத்தகு உணர்வின்றி, அஹங்காரத்துடன், நான் சொல்வதைக் கேட்காமல் செயல்பட்டால், நீ அழிந்துவிடுவாய்.
அத்தியாயம் 18 பதம் 61
ஈஷ்வர: ஸர்வ-பூதானாம்
ஹ்ருத்-தேஷே (அ)ர்ஜுன திஷ்டதி
ப்ராமயன் ஸர்வ-பூதானி
யந்த்ராரூடானி மாயயா
ஓ அர்ஜுனா, ஜட சக்தியால் செய்யப்பட்ட இயந்திரத்தில் அமர்ந்துள்ள எல்லா உயிர்வாழிகளின் பயணங்களையும், அவரவர் இதயத்தில் வீற்றுள்ள முழுமுதற்க கடவுளே வழிநடத்துகின்றார்
அத்தியாயம் 18 பதம் 65
மன்-மனா பவ மத்-பக்தோ
மத்-யாஜீ மாம் நமஸ்குரு
மாம் ஏவைஷ்யஸி ஸத்யம் தே
ப்ரதிஜானே ப்ரியோ (அ)ஸி மே
எப்போதும் என்னைப் பற்றி நினைத்து, எனது பக்தனாக ஆகி, என்னை வழிபட்டு, உனது வணக்கங்களை எனக்கு சமர்பிப்பாயாக. இவ்வாறு நீ என்னை வந்தடைவாய் என்பதில் ஐயமில்லை. நீ எனக்கு மிகவும் பிரியமான நண்பன் என்பதால், இந்த சத்தியத்தை நான் உனக்கு அளிக்கிறேன்.
அத்தியாயம் 18 பதம் 66
ஸர்வ–தர்மான் பரித்யஜ்ய
மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வ–பாபேப்யோ
மோக்ஷயிஷ்யாமி மா ஷுச:
எல்லாவிதமான தர்மங்களையும் துறந்து, என்னிடம் மட்டுமே சரணடையவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன், பயப்படாதே.
அத்தியாயம் 18 பதம் 68
ய இதம் பரமம் குஹ்யம்
மத்-பக்தேஷ்-வபிதாஸ்யதி
பக்திம் மயி பராம் க்ருத்வா
மாம் ஏவைஷ்யத்-யஸம்ஷ ய:
இந்த பரம இரகசியத்தை எனது பக்தர்களிடம் விளக்குபவனுக்கு, தூய பக்தித் தொண்டு உறுதிப்படுத்தப்படுவதோடு, அவன் இறுதியில் நிச்சயமாக என்னிடம் திரும்பி வருகின்றான்.
அத்தியாயம் 18 பதம் 69
ந ச தஸ்மான் மனுஷ்யேஷு
கஷ் சின் மே ப்ரிய–க்ருத்தம:
பவிதா ந ச மே தஸ்மாத்
அன்ய: ப்ரியதரோ புவி
அவனைவிட எனக்கு பிரியமான தொண்டன் இவ்வுலகில் யாரும் இல்லை. அவ்வாறு அவனைவிட பிரியமானவனாக யாரும் ஆகவும் முடியாது.
அத்தியாயம் 18 பதம் 78
யத்ர யோகேஷ்வர: க்ருஷ்ணோ
யத்ர பார்தோ தனுர்-தர:
தத்ர ஷ்ரீர் விஜயோ பூதிர்
த்ருவா நீதிர் மதிர் மம
யோகிகளின் இறைவனான கிருஷ்ணர் எங்கெல்லாம் இருக்கின்றாரோ, உன்னத வில்லாளியான அர்ஜுனன் எங்கெல்லாம் இருக்கின்றானோ, அங்கெல்லாம் நிச்சயமாகச் செல்வமும் வெற்றியும் அசாதாரணமான வலிமையும் நியாயமும் இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Excellent 💕🙏🙏🙏
ReplyDelete