*ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்*
********************************
நாத்திகன் ஓருவன் மேடையில் பிரசங்கிக்கிறான். "கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை. மதத் தலைவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக்கொண்ட கட்டுக்கதைகள்" என்று வாய் ஜால திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான்.
அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள். கடைசியாக " கடவுளுமில்லை, கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம்" எனச் சொல்லி முடித்து "யாராவது கேள்வி கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம்" என்றும் அழைத்தான்.
அந்நகரில் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒருவன் மேடைமீது ஏறினான். தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான்.
"கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே" எனக் கோபங்கொண்டான் நாஸ்திகன்.
பழத்தை உரித்தவன் சுழை சுழையாகத் தின்று கொண்டே பொறு, பொறு தின்று முடித்துவிட்டுக் கேள்வியைக் கேட்கிறேன்" என்று சொல்லியவாறு ரசித்துத் தின்றுகொண்டிருந்தான்.தின்று முடித்த பின்பு நாத்திகனை நோக்கி, "பழம் இனிப்பாய் இருக்கிறதா?" எனக் கேட்டான்.
"பைத்தியக்காரனே, நான் தின்று பார்க்காமல் பழம் இனிப்பா, புளிப்பா என்று எவ்வாறு சொல்லமுடியும்" என்றான் நாஸ்திகன் ஆங்காரத்துடன்.
"கடவுள் நல்லவர் என்பதை நீ ருசித்துப்பார்த்தால் தானே உனக்குத் தெரியும். ருசித்துப் பார்க்காமல் ஏன் உளறுகிறாய்" என்று சொல்லவே ஜனங்கள் கைத்தட்டி ஆரவாரஞ் செய்தார்கள். நாஸ்திகன் தலைகுனிந்து போனான்
****************************
*பகவத்கீதை & ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேதசாஸ்த்திரங்களை படிக்காமல் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தான் முழுமுதற் கடவுள் பரமபுருஷ பகவான் பரம்பொருள் என எப்படி அறிய முடியும் பலர் தவறான பாதையில் போக முக்கியமான காரணம் வேத சாஸ்த்திரங்களை படிப்பதில்லை எனவே நானே இறைவன் என்று பிதற்றுகிறார்கள்ஏமாற்றும் நபரிடம் மாட்டிக்கொண்டு பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஆன்மீக ராஜ்ஜியம் அடையாமல் மீண்டும் மீண்டும் ஜடவுலகிலேயே பிறவி எடுக்கிறார்கள் இதை பகவத் கீதையில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் நமக்கு தெளிவாக விளக்குகிறார்.
****************************
பகவத் கீதை உண்மையுருவில்
அத்தியாயம் ஒன்பது பதம் 11 - பதம் 14
*************************
பதம் 11: மனித உருவில் நான் தோன்றும்போது முட்டாள்கள் என்னை ஏளனம் செய்கின்றனர். எனது பரம இயற்கையை, அதாவது, இருப்பவை அனைத்திற்கும் நானே உன்னத உரிமையாளன் என்பதை அவர்கள் அறியார்கள்.
பதம் 12: இவ்வாறு குழம்பியவர்கள், ராட்சசத்தனமாக கருத்துக்களாலும் நாத்திகக் கருத்துக்களாலும் கவரப்படுகின்றனர். அத்தகு மயங்கிய நிலையில், அவர்களது முக்திக்கான ஆவல்கள், பலன் நோக்குச் செயல்கள், அறிவுப் பயிற்சிகள் ஆகிய அனைத்தும் தோல்வியடைகின்றன.
பதம் 13: பிருதாவின் மகனே, குழப்பமடையாத மகாத்மாக்களோ தெய்வீக இயற்கையின் பாதுகாப்பில் உள்ளனர். அவர்கள், பரம புருஷ பகவானான என்னை, ஆதிபுருஷனாகவும் அழிவற்றவனாகவும் அறிந்து, எனது பக்தித் தொண்டில் பூரணமாக ஈடுபட்டுள்ளனர்.
பதம் 14: எப்போதும் எனது புகழை கீர்த்தனம் செய்து கொண்டு, திடமான உறுதியுடன் முயன்று கொண்டு, எனக்கு வந்தனை செய்தபடி, இந்த மகாத்மாக்கள் பக்தியுடன் நித்தியமாக என்னை வழிபடுகின்றனர்.
Comments
Post a Comment