ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் ஏழாம் காண்டம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பாகம் 1
அசுரராஜன், இரண்யகசிபு
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பரமபுருஷர் வராக - மூர்த்தியாகத் தோன்றி இரண்யகசிபுவின் தமயனான இரண்யாக்ஷனைக் கொன்றபொழுது, இரண்யகசிபு மிகவும் வருத்தமடைந்தான். பரமபுருஷர் அவரது பக்தர்களிடம் பாரபட்சம் உடையவர் என்று கோபத்துடன் குற்றம் சாட்டிய அவன் தன் சகோதரனைக் கொல்வதற்காக வராக - மூர்த்தியாகத் தோன்றிய பகவானை ஏளனம் செய்தான். அவன் எல்லா அசுரர்களையும், இராட்சஸர்களையும் கிளர்தெழச் செய்து, அமைதிமிக்க முனிவர்களின் மற்றும் பிற மண்ணுலக வாசிகளின் வேதக் கிரிகைகளுக்கு இடையூறு விளைவித்தான். யாகங்கள் நின்றுவிட்ட காரணத்தால் தேவர்கள் யாருடைய கண்களுக்கும் புலப்படாமல் மண்ணுலகில் சஞ்சரிக்கத் துவங்கினார்.
தன் சகோதரனின் ஈமக்கிரியைகளை முடித்தபின் இரண்யகசிபு தன் மருமகன்களிடம் வாழ்வின் உண்மையைப் பற்றி சாஸ்திரங்களிலிருந்து எடுத்துக்கூறத் தொடங்கினான். அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக பின்வருமாறு அவன் பேசினான். “அன்புள்ள மருமகன்களே வீரர்களுக்குப் பகைவர்களின் முன்னிலையில் மடிவது புகழ் சேர்ப்பதாகும். வெவ்வேறு கருமங்களுக்கேற்ப ஜீவராசிகள் இந்த ஜட உலகினுள் ஒன்று சேர்ந்து, இயற்கைச் சட்டங்களினால் மீண்டும் பிரிக்கப்படுகின்றனர். ஆனால் உடலிலிருந்து வேறுபட்டதான ஆன்மீக ஆத்மா நித்தியமானது, எதனாலும் பாதிக்கப்படாது, தூய்மையானது எங்கும் நிறைந்தது மற்றும் அனைத்தையும் அறிந்திருப்பது என்பதை எப்பொழுதும் நாம் அறிந்திருக்க வேண்டும். ஆத்மாவானது ஜட சக்தியால் கட்டப்பட்டுள்ள பொழுது வெவ்வேறு சகவாசத்திற்கேற்ப உயர்ந்த அல்லது தாழ்ந்த உயிரினங்களில் பிறவிகளை எடுக்கிறது. இவ்விதமாக இன்பத்தையோ துன்பத்தையோ அனுபவிப்பதற்குரிய வெவ்வேறு வகையான உடல்களை அது பெறுகிறது. பௌதிக வாழ்வின் சூழ்நிலைகளால் பாதிக்கப்படுவதே ஒருவனது இன்பத்திற்கும், துன்பத்திற்கும் காரணமாகிறது; வேறு காரணங்கள் இல்லை. கருமத்தின் மேலோட்டான செயல்களைக் கண்டு ஒருவன் கலங்கி விடக் கூடாது.”
இரண்யகசிபு பிறகு உசீனரம் என்ற நாடடில் வாழ்ந்துவந்த சுயக்ஞர் என்ற அரசரின் வரலாற்றைக் கூறினான். அந்த அரசன் கொல்லப்பட்ட பொழுது துக்கத்தில் ஆழ்ந்திருந்த அவனது ராணிகள் உபதேசங்களைப் பெற்றனர். அவற்றை இரண்யகசிபு தன் மருமகன்களுக்கு எடுத்துக் கூறினான். குலிங்க பறவையொன்று எப்படி தன் மனைவிக்காக வருந்திக் கொண்டிருக்கும் பொழுது, தன் மனைவியைக் கொன்றதே வேடனின் அம்பினால் துளைக்கப்பட்டது என்ற வரலாற்றையும் இரண்யகசிபு விவரித்தான். இவ்வாறாக இக்கதைகளைக் கூறியதன் மூலம் தன் மருமகன்களையும் மற்ற உறவினர்களையும் சமாதானப்படுத்தி அவர்களது துக்கத்தை அகற்றினான். இவ்வாறு சமாதானப்படுத்தப்பட்ட தாய் திதியும் சகோதரன் மனைவியான ருஷபானுவும் தங்களுடைய மனங்களை ஆன்மீக விசயத்தில் ஈடுபடுத்தினர்.
தொடரும் . .
நாளை ..
இரண்யகசிபு சாகாவரம் பெறும்திட்டம்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment