வழங்கியவர் - சுத்த பக்தி குழுவினர்
🍁🍁🍁🍁🍁🍁🍁
பகவத் கீதை பத்தாம் அத்தியாயத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார், "நாகங்களில் நான் பல தலையுடைய அனந்தன், நீர்வாழினங்களில் நான் வருண தேவன். முன்னோர்களில் நான் அர்யமா. நீதிபதிகளில் நான் மரணத்தின் அதிபதியான யமன்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் இந்திரன், வருணன், யமதர்மன் மற்றும் குபேரன் போன்ற தேவர்கள் இந்த பிரபஞ்சத்தின் நான்கு முக்கிய திசைகளின் மேல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஸ்ரீமத் பாகவதத்தில் யமராஜர் "பிதாக்களின் ராஜா" அதாவது "பித்ருக்களின் அரசன்" (பித்ருக்கள் - மூதாதையர்) என்று அழைக்கப்படுகிறார். யமராஜர் வசிக்குமிடம் சாமிய மணி என்று அழைக்கப்படுகிறது இவர் சூரியதேவன் விவஸ்வானின் மகனும், யமுனை நதியின் சகோதரனும் மற்றும் யுதிஷ்டிர மகாராஜாவின் தந்தையும் ஆவார்.
பகவான் ஹரியின்பால் பக்தி இல்லாத மக்களை அவரை நோக்கி திசைதிருப்பி பக்தியில் முன்னேற்றுவது யமராஜரின் முக்கிய கடமையாகும். உயிர் வழிகளின் மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையை கட்டுப்படுத்துபவர் இவரே. உயிர் வாழிகளின் அடுத்த பிறப்பின் விதியை இவரே முடிவு செய்கிறார். உயிர் வாழிகளின் கர்மபலனுக்கு ஏற்றவாறு அவன் எவ்வாறு தண்டிக்கப்பட வேண்டும் என்பதனையும் அடுத்த பிறவியில் அவன் எந்த வகையான உடலை பெற வேண்டும் என்பதனையும் தீர்மானிக்கும் நீதிபதியாக இவர் செயல்படுகிறார். உயிர் வாழிகளின் கர்மத்திற்கு ஏற்றவாறு அவர்கள் சொர்க்க லோகங்களுக்கோ அல்லது நரக லோகங்களுக்கோ செல்வதற்கு உண்டான பயணங்களை ஏற்பாடு செய்பவர் யமதர்மராஜா ஆவார். யமதர்மராஜா வசிக்கும் இடமானது "யமபுரி" என்று அழைக்கப்படுகிறது. இந்த யமபுரியில் மொத்தம் 84 ஆயிரம் நரகங்கள் உள்ளன. அதில் தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம், ஷுகாரமுஹி, ரௌரவம் மற்றும் கும்பிபாகம் என்பன சிலவாகும். இவர் "தர்ம ராஜா" என்றும் அழைக்கப்படுகிறார். ஏனெனில் தர்மத்தின் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு நபருக்கு எவ்வாறு தீர்ப்பளிக்க வேண்டும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நம்பிக்கையுள்ள பிரதிநிதிகளில் யமராஜர் மிக முக்கியமானவர் ஆவார். இதுபோன்ற நம்பிக்கையுடன் கூடிய பொறுப்புள்ள பதவிகள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் அவருடைய மிக உயர்ந்த தூய பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. எமதூதர்கள் எமதர்மராஜனின் ஏவலாளிகளாவர். மரணத்தின் போது யாரொருவர் தங்களது புலன்களின் மீது அதிகப் பற்று உடையவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் யமதூதர்களின் பாதுகாப்பில் வருகின்றனர். அவ்வாறு மரணிக்கும் ஒருவனது பொறுப்பை எமதூதர்கள் ஏற்று அவனை யமராஜரின் யமபுரிக்கு கொண்டு செல்கின்றனர். அனைவரும் எமராஜரைக் கண்டு பயப்படுகிறார்கள். ஏனென்றால் இந்த பௌதிக உலகத்தில் குற்றம் செய்பவர்களுக்கு தண்டனையை அவர் வழங்குகிறார். ஆனால் பகவானின் பக்தர்களாக இருப்பவர்கள் அவரைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. பக்தர் அல்லாதவர்களுக்கு அவர் பயத்தின் சொரூபமாகவே உள்ளார். ஸ்ரீமத் பாகவதத்தில் அஜாமிளனின் கடைசி தருணத்தில் யமராஜர் தனது தூதர்களிடம், "வைஷ்ணவர்களை நீஙகள் அணுக கூடாது" என்று மிகத் தெளிவாக அறிவுறுத்துகிறார். வைஷ்ணவர்கள் ஒருபோதும் எமதூதர்களால் அழைக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறுகிறார்.
பாவம் செய்துள்ள ஆத்மாக்களை மரணத்திற்குப்பின், பூமி கிரகத்திலிருந்து எடுத்துச் சென்று சில லட்சம் மைல் தொலைவிலுள்ள ஒரு குறிப்பிட்ட கிரகத்தில் அவர்கள் செய்த பாவச் செயல்களுக்கு ஏற்ப அவர்களை தண்டிக்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் நியமிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி யமதர்மராஜா ஆவார்.
தவறு செய்பவர்களை தண்டிக்கும் விதத்திலான அவரது உத்தியோக கடமையிலிருந்து வெகு குறைவான நேரமே அவரால் விடுபட்டிருக்க முடிகிறது. ஏனென்றால் மிக நேர்மையான மனிதர்களைக் காட்டிலும் தவறு செய்பவர்களே அதிக அளவில் உள்ளனர். எனவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளில் யமராஜருக்கு மட்டுமே மற்ற தேவர்களை காட்டிலும் அதிக வேலைப்பளு உள்ளது. ஆனால் எமதர்மராஜாவோ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் புகழ் மற்றும் அவரது மகிமைகளை உலகத்திற்கு பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று விரும்பினார். இதனால் பகவானின் விருப்பப்படி 'மண்டடூக' முனிவரால் சபிக்கப்பட்டார். இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திய எமதர்மராஜா இந்த பௌதிக உலகத்தில் "விதுரராக" அவதரித்து பகவானின் உயர்ந்த பக்தராக இருந்து மிகத் தீவிரமாக பக்தி சேவையாற்றினார்.
மகாபாரத வரலாற்றில் இடம்பெற்ற முக்கிய நபர்களுள் ஒருவராவார் விதுரர். இவர் வியாசதேவருக்கும் பாண்டு மகாராஜனின் தாயான அம்பிகாவின் வேலைக்காரிக்கும் பிறந்தவரான இவர் யமராஜனின் அவதாரமாவார். மந்தவ்ய முனிவரின் சாபத்தால் இவர் ஒரு சூத்திரராகப் பிறந்தார். இக்கதையின் வர்ணனை பின்வருமாறு: ஒருமுறை மந்தவ்ய முனிவரின் ஆஷ்ரமத்தில் ஒளிந்து கொண்டிருந்த சில திருடர்களை அரசாங்க காவலர்கள் கைப்பற்றினர். வழக்கம் போல் அக்காவலர்கள் திருடர்களுடன் சேர்த்து மந்தவ்ய முனிவரையும் கைது செய்தனர். நீதிபதி குறிப்பாக அந்த முனிவருக்கு ஈட்டியால் குத்தப்படும் மரண தண்டனையை விதித்தார். அவர் குத்தப்படப்போகும் வேளையில் அச்செய்தி அரசருக்கு எட்டியது. இவர் ஒரு சிறந்த முனிவரென்பதை கருத்திற் கொண்டு அரசரும் உடனே இத்தண்டனையை தடுத்து நிறுத்தினார். முனிவரின் ஆட்கள் செய்த குற்றத்திற்காக முனிவரை மன்னித்துவிடும்படி அரசர் வேண்டினார். மன்னிப்பைப் பெற்ற முனிவர் உடனே, ஜீவராசிகளின் விதியை நிர்ணயிப்பவரான யமராஜனிடம் சென்று இத்தண்டனைக்குரிய காரணத்தை வினவினார். அதற்கு யமராஜனும், பிள்ளைப் பிராயத்திலிருந்த முனிவர் ஒரு பறவையை கூரான ஒரு வைக்கோலால் குத்தியதற்காகவே இத்துன்பத்திற்கு அவர் உள்ளானார் என்று விளக்கமளித்தார். அறியாத பருவத்தில் செய்த குற்றத்திற்காக இப்பொழுது தண்டிக்கப்பட்டது அநீதியாகும் என்றெண்ணிய முனிவர், யமராஜனை ஒரு சூத்திரராகப் பிறக்கும்படி சபித்துவிட்டார். யமராஜனின் இந்த சூத்திர அவதாரம் விதுரர் என்று அழைக்கப்பட்டார். இவர் பாண்டு மற்றும் திருதராஷ்டிர மகாராஜன் ஆகியோரின் சூத்திர சகோதரராவார். ஆனால் குரு வம்சத்தில் சூத்திரராகப் பிறந்த இவரை, இவரது உடன் பிறந்தவர்களின் மகன்களுக்குச் சமமாக பீஷ்மதேவர் நடத்தினார். காலப்போக்கில் விதுரர் ஒரு பெண்னை திருமணம் செய்து கொண்டார். அவளும் ஒரு சூத்ரராணிக்கும், ஒரு பிராமணருக்கும் பிறந்தவளாகவே இருந்தாள். விதுரர் அவரது தந்தையின் (பீஷ்மதேவரின் சகோதரர்) சொத்துக்கு வாரிசாக இருக்கவில்லை என்றாலும், இவரது மூத்த சகோதரரான திருதராஷ்டிரர் போதுமான அரசாங்க சொத்துக்களை இவருக்கு அளித்தார். இவர் திருதராஷ்டிரரிடம் அதிக பற்றுக் கொண்டிருந்ததுடன், ஆரம்பத்திலிருந்து அவருக்குச் சரியான வழிகாட்டவும் முயன்று வந்தார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நிரந்தர சேவகராக தனது பக்தி சேவையை மிகுந்த ஆர்வத்துடன் செயலாற்றி , தூய பக்தி தொண்டின் உயர்ந்த நிலையில் அவர் வாழ்ந்து வாழ்ந்தார் குருட்சேத்திர யுத்தத்தின் போது பாண்டு புத்திரர்களிடம் நீதியுடன் நடந்து கொள்ளும்படி விதுரர் தமது மூத்த சகோதரரிடம் பலமுறை மன்றாடினார். ஆனால் தனது சிற்றப்பனின் தலையீட்டை விரும்பாத துரியோதனன் விதுரரை நிந்தித்தான். இதனால் விதுரர் வீட்டை விட்டு வெளியேறி, தீர்த்த யாத்திரை சென்று மைத்ரேயரிடமிருந்து உபதேசங்களைப் பெற்றார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நிரந்தர சேவகராக தனது பக்தி சேவையை மிகுந்த ஆர்வத்துடன் செயலாற்றி , தூய பக்தி தொண்டின் உயர்ந்த நிலையில் அவர் வாழ்ந்து வாழ்ந்தார்.அவர் பகவான் மீது கொண்ட தூய பக்தி சேவை நடவடிக்கையின் மூலமாக, சூத்திரனாகப் பிறந்ததனால் உள்ள அவருடைய பாவங்கள் அனைத்தும் முழுவதுமாக் கழுவப்பட்டு பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் தாமரைப் பாதத்தை அனுக்ஷணமும் அவரால் நினைவு கொள்ள முடிந்தது . இதனால் அவருடைய வாழ்வின் இறுதியில் அவருடைய பதவியான பித்ரு லோக ராஜாவாகி மீண்டும் யமதர்மராஜாவானார்.
அனைத்து வைஷ்ணவ கோயில்களின் தென் திசையிலும் யமதர்மராஜாவால் பாதுகாக்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது. தமிழ்நாடு மதுரையில் அமைந்திருக்கும் திருமாலிருஞ்சோலை உள்ள கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஏனென்றால் எமதர்மராஜா இங்கு மிக நீண்ட காலம் தவம் செய்து பகவானின் அனுக்கிரகம் பெற்றார்.
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram செயலி
🍁🍁🍁🍁🍁🍁
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇
https://t.me/joinchat/VaBAs5fOiAeHgexI
ஆன்மீக கதைகளை படிக்க 👇
https://t.me/joinchat/HIm4JGufgEgG7jw
🍁🍁🍁🍁🍁🍁
வலைதளம் / website
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
https://suddhabhaktitamil.blogspot.com/?m=1
Comments
Post a Comment