நாராயண - கவசம்



“நாராயண - கவசம்”

ஸ்ரீமத் பாகவதம்  / ஆறாம் காண்டம்



பதம் 12

ஓம் ஹரிர் விதத்யான் மம ஸர்வ-ரக்ஷாம்

ன்யஸ்தாங்ரி-பத்ம: பதகேந்ர-ப்ரூஷ்டே

தராரி-சர்மாஸி-கதேஷு-ாப-

பாசா ததானோ ‘ஷட்-குணோ ‘ஷ்ட-பாஹு:


மொழிபெயர்ப்பு

தமது கருட வாகனத்தின் மேல் தாமரைப் பாதங்களை வைத்தபடி அமர்ந்திருப்பவரான பரமபுருஷர், சங்கு, சக்கரம், கேடயம், கத்தி, கதை, அம்புகள், வில், பாசம் (கயிறு) ஆகிய எட்டு ஆயுதங்களைத் தமது கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறார். அந்த பரமபுருஷர் அவரது எட்டுக் கரங்களினால் எப்பொழுதும் என்னைப் பாதுகாப்பாராக. அவர் அணிமா, லகிமா முதலான அஷ்ட சித்திகளை முழுமையாகப் பெற்றவர் என்பதால் சர்வ சக்தி படைத்தவராவார்.


பதம் 13

ஜலேஷு மாம் ரக்ஷது மத்ஸ்ய-மூர்த்திர்

யாதோ-கணேப்யோ வருணஸ்ய பாசாத்

ஸ்தாலேஷு மாயாவடு-வாமனோ ‘வ்யாத்

த்ரிவிக்ரம: கே ‘வது விஸ்வரூப:


மொழிபெயர்ப்பு

மிகப் பெரிய ஒரு மீனின் உடலை ஏற்பவரான பகவான், வருணதேவனின் சகாக்களாகவுள்ள, கொடிய நீரினங்களிடம் இருந்து நீரில் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாராக. பகவான் தமது மாயா சக்தியை விரிவடையச் செய்து குள்ள வாமணரின் உருவத்தை ஏற்றார். அந்த வாமனர் நிலத்தில் என்னைக் காப்பாராக. பகவானின் பிரம்மாண்டமான விஸ்வரூபம் மூவுலகங்களையும் ஆக்கிரமிப்பதால், அவர் ஆகாயத்தில் என்னைக் காப்பாராக.


பதம் 14

துர்கேஷு அடவி-ஆஜி-முகாதிஷு ப்ரபு:

பாயான் ந்ருஸிம்ஹோ ‘ஸுர-யூதபாரி:

விமுஞ்சதோ யஸ்ய மஹாட்ட-ஹாஸம்

திசோ வினேதுர் ன்யபதம்ஸ் ச கர்பா:


மொழிபெயர்ப்பு

இரண்யகசிபுவின் எதிரியாகத் தோன்றிய பகவான் நரசிம்மர் எல்லாத் திசைகளிலும் என்னைக் காப்பாராக. அவருடைய உரத்த சிரிப்பு எல்லாத் திசைகளையும் அதிரச் செய்து, கருவுற்றிருந்த அசுர பத்தினிகளுக்கு கருச்சிதைவை ஏற்படுத்தியது. அந்த பகவான், வனம் மற்றும் யுத்த முன்னனி போன்ற கடினமான இடங்களில் என்னைக் காத்து இரட்சிப்பாராக.


பதம் 15

ரக்ஷது அஸௌ மாத்வனி யக்ஞ-கல்ப:

ஸ்வ-தம்ஷ்ட்ரயோன்னீத-தரோ விராஹ:

ராமோ ‘த்ரி-கூடேஷ்வ் அத விப்ரவாஸே

ஸலக்ஷ்மனோ ‘வ்யாத் பரதாக்ரஜோ ‘ஸ்மான்


மொழிபெயர்ப்பு

அழிக்கப்பட முடியாதவரான பரமபுருஷர் வேத யக்ஞ அனுஷ்டானத்தின் மூலமாக ஆராய்ந்தறியப்படுவதால், அவர் யக்ஞேஸ்வரர் எனப்படுகிறார். அவருடையவராக அவதாரத்தில் அவர் பிரபஞ்சத்திற்கு அடியிலுள்ள நீரிலிருந்து பூமியைத் தூக்கி, அதைத் தனது கூரிய பற்களின் மேல் தாங்கிக் கொண்டார். அந்த பகவான் தெருவில் திருடர்களிடமிருந்து என்னைக் காப்பாராக. மலை உச்சிகளில் பகவான் பரசுராமர் என்னைக் காக்கட்டும். பரதனின் தமையனான பகவான் ராமச்சந்திரர் தம்பி லக்ஷ்மணருடன் அந்நிய தேசங்களில் என்னைக் காக்கட்டும்.


பதம் 16

மாம் உக்ர-தர்மாத் அகிலாத் ப்ரமாதான்

நாராயண: பாது நரஸ் ச ஹாஸாத்

தத்தஸ் து அயோகாத் அத யோக-நாத:

பாயாத் குணேச: கபில: கர்ம-பந்தாத்


மொழிபெயர்ப்பு

செருக்கின் காரணத்தினால், தேவையில்லாமல் தவறான சமய மார்கத்தைப் பின்பற்றி, என் கடமைகளிலிருந்து விழுவதிலிருந்து பகவான் நாராயணர் என்னைக் காப்பாராக. நரராகத் தோன்றிய பகவான் அனாவசியமான தற்பெருமையிலிருந்து என்னைக் காக்கட்டும். யோக சித்திகளுக்கெல்லாம் தலைவராக பகவான் தத்தாத்ரேயர் பக்தி யோகத்தை நிறைவேற்றும் சமயத்தில் இழிவடைவதிலிருந்து என்னைக் காக்கட்டும். எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமான பகவான் கபிலர் கர்ம பந்தத்திலிருந்து என்னைக் காக்கட்டும்.


பதம் 17

ஸனத்-குமாரோ ‘வது காமதேவாத்

தயசீரீஷா மாம் பதி தேவ-ஹேலனாத்

தேவர்ஷி-வர்ய: புருஷார்சனாந்தராத்

கூர்மோ ஹரிர் மாம் நிரயாத் அசேஷாத்


மொழிபெயர்ப்பு

காம இச்சையிலிருந்து சனத் குமாரர் என்னைக் காக்கட்டும். மங்கள காரியத்தைத் துவங்கும் பொழுது, பரமபுருஷரை வணங்கத் தவறி குற்றம் புரிவதிலிருந்து பகவான் ஹயகிரீவர் என்னைக் காக்கட்டும். விக்கிரக ஆராதனையில் குற்றம் புரிவதிலிருந்து தேவரிஷி நாரதர் என்னைக் காக்கட்டும். எல்லையற்ற நரக லோகங்களில் விழுவதிலிருந்து பகவான் கூர்மர் என்னைக் காக்கட்டும்.


பதம் 18

தன்வந்தரிர் பகவான் பாது அபத்யாத்

த்வந்வாத் பயாத் ரிஷபோ நிர்ஜிதாத்மா

யக்ஞஸ் ச லோகாத் அவதாஜ் ஜனாந்தாத்

பலோ கணாத் க்ரோத-வசாத் அஹீந்ர:


மொழிபெயர்ப்பு

பரமபுருஷர் அவரது தன்வந்தரி அவதாரத்தில், விரும்பத்தகாத உணவுகளிலிருந்து என்னை விடுவித்து, நோய்களிலிருந்து என்னைக் காக்கட்டும். அக மற்றும் புறப் புலன்களை வென்றவராக பகவான் ரிஷபதேவர், வெப்பம் மற்றும் குளிர் என்ற இருமையினால் உண்டாகும். பயத்திலிருந்து என்னைக் காக்கட்டும். பொதுமக்களால் விளைவிக்கப்படும் அவதூறிலிருந்தும், தீங்கிலிருந்தும் யக்ஞர் என்னைக் காக்கட்டும். பகவான் பலராமரின் சேஷ அவதாரம் குரோதம் நிறைந்த பாம்புகளிடமிருந்து என்னைக் காக்கட்டும்.


பதம் 19

த்வைபாயனோ பகவான் அப்ரபோதாத்

புத்தஸ் து பாஷண்ட-கண-ப்ரமாதாத்

கல்கி: கலே: கால-மலாத் ப்ரபாது

தர்மவனாயோரு-க்ருதாவதார:


மொழிபெயர்ப்பு

பரமபுருஷரின் சக்திவாய்ந்த அவதாரமான வியாசதேவர், வேத ஞானம் இல்லாமையால் உண்டாகும் எல்லா வகையான அஞ்ஞானத்திலிருந்தும் என்னைக் காக்கட்டும்த. வேதக் கோட்பாடுகளுக்கு முரணான செயல்களிலிருந்தும், வேத ஞானம் மற்றும் கிரியை ஆகிய வேதக் கோட்பாடுகளை முற்றிலும் மறக்கச் செய்யும் சோம்பலிலிருந்தும், பகவான் புத்ததேவர் என்னைக் காக்கட்டும். சமயக் கோட்பாடுகளைக் காப்பதற்காக அவதரித்தவரும், பரம புருஷருமாகிய பகவான் கல்கிதேவர் கலியுகத்தின் அழுக்கிலிருந்து என்னைக் காக்கட்டும்.


பதம் 20

மாம் கேசவோ கதயா ப்ராதர் அவ்யாம்

கோவிந்த ஆஸங்கவம் ஆத்த-வேணு:

நாராயண: ப்ராஹ்ண உதாத்-சக்திர்

மத்யன்-தினே விஷ்ணுர் அரீந்ர-பாணி:


மொழிபெயர்ப்பு

பகலின் முதல் பகுதியின் (அதிகாலையில்), பகவான் கேசவர் அவரது கதையால் என்னைக் காக்கட்டும், எப்பொழுதும் புல்லாங்குழலை வாசிப்பதில் ஈடுபட்டுள்ள கோவிந்தன் பகலின் இரண்டாவது பகுதியில் என்னைக் காக்கட்டும். அனைத்து சக்திகளையும் உடைணவரான பகவான் நாராயணர் பகலின் மூன்றாவது பகுதியில் என்னைக் காக்கட்டும். மேலும் பகைவரைக் கொல்வதற்காக கையில் சக்கரத்தை ஏந்தியுள்ள பகவான் விஷ்ணு பகலினி நான்காவது பகுதியில் என்னைக் காக்கட்டும்.


பதம் 21

தேவோ ‘ப்ராஹ்ணே மது-ஹோக்ரதன்வா

ஸாயம் த்ரி-தாமாவது மாதவோ மாம்

தோஷே ஹ்ருஷீகேச உதார்த-ராத்ரே

நிசீத ஏகோ ‘வது பத்மநாப:


மொழிபெயர்ப்பு

அசுரர்களுக்கு அச்சமூட்டும் வில்லை வைத்திருப்பவரான பகவான் மதுசூதன்ர் பகலின் ஐந்தாம் பகுதியில் என்னைக் காக்கட்டும். பிரம்ம, விஷ்ணு மற்றும் மகஸே்வரராகத் தோன்றும் பகவான் மாதவர் மாலையில் என்னைக் காக்கட்டும். இரவின் ஆரம்பத்தில் பகவான் ரிஷிகேசர் என்னைக் காக்கட்டும். இரவின் இரண்டாவது, மூன்றாவது பகுதிகளில் (அர்த்த ராத்திரியிலும், நடு நிசியிலும்) பகவான் பத்மநாபர் தனியாக என்னைக் காக்கட்டும்.


பதம் 22

ஸ்ரீவத்ஸ-தாமபர-ராத்ர ஈச:

ப்ரத்யூஷ ஈசோ ‘ஸி-தரோ ஜனார்தன:

தாதோதரோ ‘வ்யாத் அனுஸந்யம் ப்ரபாதே

விஸ்வேஸ்வரோ பகவான் கால-மூர்த்தி:


மொழிபெயர்ப்பு

மார்பில் ஸ்ரீவத்ஸத்தைத் தாங்கியிருக்கும் பரமபுருஷர், நள்ளிரவுக்குப் பிறகு கீழ்வானம் சிவக்கும் வரை என்னைக் காக்கட்டும். கையில் வாளேந்தியவரான பகவான் ஜனார்தனர் இரவின் முடிவில் (இரவின் கடைசி நான்கு நாழிகைகளின போது) என்னைக் காக்கட்டும். அதிகாலையில் பகவான் தாமோதரர் என்னைக் காக்கட்டும். பகல் மற்றும் இரவின் சந்தி வேளைகளில் பகவான் விஸ்வேஸ்வரர் என்னைக் காக்கட்டும்.


பதம் 23

சக்ரம் யுகாந்தானல-திக்ம-நேமி

ப்ரமத் ஸமந்தாத் பகவத்-ப்ரயுக்தம்

தந்தக்தி தந்தக்தி அரி-ஸைன்யம் ஆசு

கக்ஷம யதா வாத-ஸகோ ஹுதாச:


மொழிபெயர்ப்பு

பகவானால் ஏவப்பட்டு நான்கு திசைகளிலும் சஞ்சரிக்கும் பரமபுருஷருடைய சக்கரமானது, யுகத்தின் முடிவில் தோன்றும் காலாக்னி போன்ற கூரிய முனைகளைக் கொண்டுள்ளது. கொழுந்து விட்டெரியும் தீயானது காற்றின் உதவியுடன் காய்ந்த புல்லை எரித்துச் சாம்பலாக்குவது போல், அந்த சுதர்சன சக்கரம் எங்களுடைய பகைவர்கள் எரித்துச் சாம்பலாக்கட்டும்.


பதம் 24

கதே ‘சனி-ஸ்பர்சன-விஸ்ஃபுலிங்கே

நிஷ்பிண்டி நிஷ்பிண்டி அஜித-ப்ரியாஸி

குஷ்மாண்ட-வைணாயக-யக்ஷ-ரக்ஷோ-

பூத-க்ரஹாம்ஸ் சூர்ணய சூர்ணயாரீன்


மொழிபெயர்ப்பு

பரமபுருஷரின் கையிலுள்ள கதையே, இடிபோல் தொட்டதை அழிக்கும். பொறிகளைக் கக்கும் நீ பகவானுக்கு மிகப் பிரியமானவனாவாய். நானும் அவருடைய சேவகன்தான். ஆகவே குஷ்மாண்டர், வைனாயிகர், யக்ஷர், இராட்சஸர், பூதங்கள் மற்றும் கிரகங்கள் எனப்படம் துஷ்ட ஜீவன்கள் ஆகியோரை அழித்துவிடு. அவர்களை தூள்தூளாகப் பொடியாக்கிவிடு.


பதம் 25

த்வம் யாதுதான-ப்ரமத-ப்ரேத-மாத்ரு-

பிசாச-விப்ரக்ரஹ-கோர-த்ருஷ்டீன்

தரேந்த வித்ராவய க்ருஷ்ண-பூரிதோ

பீம-ஸ்வனோ ‘ரேர் ஹ்ருதயாணி கம்பயன்


மொழிபெயர்ப்பு

சங்கங்களில் சிறந்ததும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கையில் இருப்பதுமான பாஞ்சஜன்யமே, நீ எப்பொழுதும் பகவானுடைய மூச்சினால் நிரப்பப்பட்டிருக்கிறாய். ஆகவே நீ பயங்கரமான நாதத்தை உண்டாக்கி, இராட்சஸர்கள், பிரமதர்கள், பிரேதங்கள், மாத்ருகள், பிசாசுகள் மற்றும் கொடும் பார்வையுடைய பிரம்மராட்ஸர்களைப் போன்ற எதிரிகளின் இதயங்களை நடுங்கச் செய்து அவர்களை விரட்டியடிப்பாயாக.


பதம் 26

த்வம் திக்ம-தாராஸி-வராரி-ஸைன்யம்

ஈச-ப்ரயுக்தோ மம சிந்தி சிந்தி

சக்ஷூம்ஷி சர்மாஞ் சத-சந்ர சாதய

த்விஷாம் அகோனாம் ஹர பாப சக்ஷுஷாம்


மொழிபெயர்ப்பு

பரமபுருஷரால் ஏவப்படும் கூரிய முனையுடைய வாளே, என் எதிரிகளின் சேனைகளைக் கண்டதுண்டமாக வெட்டுவாயாக. சந்திரன் போல் ஜொலிக்கும் நூறு வட்டங்களைக் கொண்ட கேடயமே, பாவிகளான எதிரிகளின் கண்களை மறைத்துவிடு. பாவமுள்ள அவர்களது கண்களைப் பிடுங்கிவிடு.


பதங்கள் 27 - 28

யன் நோ பயம் க்ரஹேப்யோ ‘பூத் கேதுர்யோ ந்ருப்ய ஏவ ச

ஸரீஸ்ருபேப்யோ தம்ஷ்ட்ரிப்யோ பூதேப்யோ ‘ம்ஹோப்ய ஏவ ச

ஸர்வாணி ஏதானி பகவன்-நாம-ரூபானுகீர்த்தனாத்

ப்ரயாந்து ஸங்க்ஷயம் ஸத்யோ யே ந: ஸ்ரேய:-ப்ரதீபகா:


மொழிபெயர்ப்பு

பரமபுருஷரின் திவ்யநாமம், ரூபம், குணங்கள், உபகரணங்கள் ஆகியவற்றின் கீர்த்தனமானது, எங்களைக் கெட்ட கிரகங்கள், எரி நட்சத்திரங்கள், பொறாமையுள்ள மனிதர்கள், பாம்புகள், தேவர்கள், புலி, ஓநாய் போன்ற மிருகங்களின் ஆதிகத்திலிருந்து எங்களைக் காக்கட்டும். மேலும், மண், நீர், நெருப்பு, காற்று போன்ற பௌதிக மூலப் பொருட்களிலிருந்தும், பூதங்களிடமிருந்தும், இடியிலிருந்தும் எங்களுடைய முந்திய பாவங்களிலிருந்தும்கூட அது எங்களைக் காக்கட்டும். எங்களுடைய மங்களகரமான வாழ்வுக்கு ஊறு விளைவிக்கும் இவைகளிடம் நாங்கள் எப்பொழுதும் அச்சம் கொண்டுள்ளோம். ஆகவே இவையனைத்தும் ஹரே கிருஷ்ண மகா மந்திர ஜபத்தினால் முற்றிலும் அழிக்கப்படட்டும்.


பதம் 29

கருடோ பகவான் ஸ்தோத்ர ஸ்தோபஸ் சந்தோமய: ப்ரபு:

ரக்ஷது அசேஷ-க்ருச்ரேப்யோ விஷ்வக்ஷேன: ஸ்வ-நாமபி:


மொழிபெயர்ப்பு

பகவான் விஷ்ணுவின் வாகனமான கருடதேவர் பரமபுருஷருக்கு இணையான சக்தியுடையவர் என்பதால் சிறந்த வழிபாட்டுக்கு உரியவராவார். வேதங்களின் சொரூபமாகிய அவர் சிறந்த சுலோங்களால் பூஜிக்கப்படுகிறார். அவர் ஆபத்தான எல்லாச் சூழ்நிலைகளிலிருந்தும் எங்களைக் காக்கட்டும். பரமபுருஷராகிய பகவான் விஷ்வக்ஷேனரும் அவரது புனித நாமங்களால் எல்லா அபாயங்களிலிருந்தும் எங்களைக் காக்கட்டும்.


பதம் 30

ஸர்வாபத்ப்யோ ஹரேர் நாம-ரூப-யானாயுதானி ந:

புத்தீந்ரிய-மன:-ப்ராணான் பாந்து பார்ஷத-பூஷணா:


மொழிபெயர்ப்பு

பரமபுருஷரின் அந்தரங்கள சகாக்களாக இருந்து கொண்டு அவரை அலங்கரிக்கும் அவரது புனித நாமங்கள், உன்னத ரூபங்கள், வாகனங்கள், ஆயுதங்கள் ஆகியவை எங்களுடைய புத்தியையும், புலன்களையும், மனதையும், உயிரையும், எல்லா அபாயங்களிலிருந்தும் காக்கட்டும்.


பதம் 31

யதா ஹி பகவான் ஏவ வஸ்துத: ஸத் அஸச் ச யத்

ஸத்யேனானேன ந: ஸர்வே யாந்து நாசம் உபத்ரவா:


மொழிபெயர்ப்பு

ஸ்தூல மற்றும் சூட்சுமமான பிரபஞ்ச தோற்றம் பௌதிகமானதாகும். இருப்பினும் அது பரமபுருஷரிலிருந்து வேறுபட்டதல்ல. ஏனெனில் அவரே எல்லாக் காரணங்களுக்கும் முடிவான காரணமாவார். காரணமும் விளையும் உண்மையில் ஒன்றேயாகும். ஏனெனில் காரணமானது அதன் விளைவில் அடக்கம். ஆகையால் பரம சக்தியமாகிய பரமபுருஷரால் நம்முடைய எல்லா அபாயங்களையும், சக்திவாய்ந்த அவருடைய பகுதிகளுள் ஒன்றினால் அழித்துவிட முடியும்.


பதங்கள் 32 - 33

யதைகாத்ம்யானுபாவானாம் விகல்ப-ரஹித: ஸ்வயம்

பூஷணாயுத-லிங்காக்யா தத்தே சக்தீ: ஸ்வ-மாயயா

தேனைவ ஸத்ய-மானேன ஸர்வ-க்ஞோ பகவான் ஹரி:

பாது ஸர்வை: வ்வரூபைர் ந: ஸதா ஸர்வத்ர ஸர்வ-க:


மொழிபெயர்ப்பு

பரமபுருஷர், ஜீவராசிகள், பௌதிக சக்தி, அன்மீக சக்தி, முழு சிருஷ்டி ஆகிய அனைத்தும் தனித்தனி பொருள்களாகும். ஆனால் ஆராய்ந்து கண்ட உண்மை என்னவெனில், இவையெல்லாம் சேர்ந்து தான் ஒே ர பரமபுருஷராக உருவெடுத்துள்ளன. ஆகவே ஆன்மீக அறிவில் முன்னேறியவர்கள் வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பார்கள். ஆன்மீகத்தில் முன்னேறிய இத்தகைய நபர்களுக்கு பகவானுடைய அணிகலன்கள், மற்றும் அவருடைய நாமம், புகழ், குணங்கள், ரூபங்கள், ஆயுதங்கள் ஆகிய அனைத்தும் அவரது சக்தியின் தோற்றங்களே என்பது தெரியும். அவர்களுடைய மேலான ஆன்மீக அறிவுக்கேற்ப, பல்வேறு ரூபங்களைத் தோற்றுவிப்பவரும் சர்வக்ஞருமான பகவான் எங்கும் நிறைந்திருப்பவராகிறார். அவர் எல்லா இடங்களிலும், எல்லா அபாயங்களிலிருந்தும் நம்மைக் காக்கட்டும்.


பதம் 34

விதிக்ஷு திக்ஷூர்த்வம் அத: ஸமந்தாத்

அந்தர் பஹிர் பகவான் நாரஸிம்ஹ:

ப்ரஹாபயல் லோக-பயம் ஸ்வனேன

ஸ்வ-தேஜஸா க்ரஸ்த-ஸமஸ்த-தேஜா


மொழிபெயர்ப்பு

பிரகலாத மகாராஜன் பகவான் நரசிம்ம தேவரின் புனித நாமத்தை உரக்கப் பாடினார். தமது பக்தரான பிரகலாத மகாராஜனுக்காக கர்ஜனை செய்த பகவான் நரசிம்ம தேவர், துணிச்சலான தலைவர்களால், விஷம், ஆயுதங்கள், நீர், நெருப்பு போன்றவைகள் மூலம் எல்லாத் திசைகளிலும் விளைவிக்கப்படும் ஆபத்தெனும் பயத்திலிருந்து நம்மைக் காக்கட்டும். பகவான் தெய்வீகமான தமது சொந்த ஆதிக்கத்தினால் அவர்களுடைய ஆதிக்கத்தை மறைத்து விடுவாராக. எல்லாத் திசைகளிலும், மூலைகளிலும், மேலும், கீழும், உள்ளும், புறமும் நரசிம்மதேவர் நம்மைக் காக்கட்டும்.



ஃபலஸ்துதி


பதம் 35

மகவன் இதம் ஆக்யாதம் வர்ம நாராயணாத்மகம்

விஜேஷ்யஸே ‘ஞ்ஜஸா யேன தம்சிதோ ‘ஸுர - யூதபான்

.

மொழிபெயர்ப்பு

விஸ்வரூபர் தொடர்ந்து கூறினார்: இந்திரனே, பகவான் நாராயணருடன் சம்பந்தப்பட்டதான மாயாமான இக்கவசம் என்னால் உங்களுக்கு விவரிக்கப்பட்டது. இந்த பாதுகாப்புக் கவசத்தை அணிந்து கொள்வதால், அசுரத் தலைவர்களை நிச்சயமாக உங்களால் வெல்ல முடியும்.


பதம் 36

ஏதத் தாரயமாணஸ் து யம் யம் பஸ்யதி சக்ஷுஷா

பதா லா ஸம்ப்ருசேத் ஸத்ய: ஸாத்வஸாத் ஸ விமுச்யதே


மொழிபெயர்ப்பு

இக்கவசத்தை ஒருவர் அணிந்துகொண்டு யாரையெல்லாம் தன் கண்களால் பார்க்கிறரோ அல்லது தன் கால்களால் தொடுகிறாரோ, அவர்கள் மேற்கூரிய எல்லா அபாயங்களிலிருந்தும் உடனே விடுவிக்கப்படுவார்கள்.


பதம் 37

ந குதஸ்சித் பயம் தஸ்ய வித்யாம் தாரயதோ பவேத்

ராஜ-தஸ்யு-க்ரஹாதிப்யோ வ்யாதி-ஆதிப்யஸ் ச கர்ஹிசித்


மொழிபெயர்ப்பு

நாராணய - கவசமான இந்த ஸ்தோத்திரம் நாராயணருடன் தெய்வீகமான முறையில் இணைக்கப் பெற்ற சூட்சும அறிவினால் அமையப் பெற்றதாகும். இந்த ஸ்தோத்திரத்தை உபயோகிப்பவர் அரசாங்கத்தினாலோ, கொள்ளைக்காரர்களாலோ, துஷ்ட அசுரர்களாலோ அல்லது எவ்வித நோயினாலோ ஒரு போதும் தொல்லைக்குள்ளாவதில்லை.


பதம் 41

ஸ்ரீ-சுக உவாச

ய இதம் ஸ்ருணுயாத் காலே யோ தாரயதி சாத்ருத:

 தம் நமஸ்யந்தி பூதானி முச்யதே ஸர்வதோ பயாத்


மொழிபெயர்ப்பு

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, இக்கவசத்தை உபயோகிப்பவர் அல்லது பயபக்தியுடன் இதைப்பற்றி கேட்பவர். இந்த ஜட உலக சூழ்நிலைகளின் காரணத்தால் அச்சத்திற்கு உள்ளாகும்பொழுது, எல்லா அபாயங்களிலிருந்தும் உடனே விடுவிக்கப்படுவதுடன், அனைத்து ஜீவராசிகளாலும் பூஜிக்கவும் படுகிறார்.




Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more