***********************
கிருஷ்ணரிடம் உதவி பெற்று கருவறைச் சிறையிலிருந்து நாம் விடுதலை பெற்றோம். ஆனாலும் உண்மையில் அது விடுதலையா? நாம் தற்போது சுதந்திரமாக இருக்கின்றோமா? நிச்சயமாக இல்லை. நாம் கிருஷ்ணரை மறக்கின்றபோது உடனடியாக முக்குணங்களால் ஆட்கொள்ளப்படுகிறோம். இந்த ஜடவுலகிலுள்ள ஒவ்வொன்றும் முக்குணங்களோடு பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. உண்மையில், இவ்வுலகம், து:காலயம் அஷாஷ்வதம், அதாவது, துக்கத்தின் இருப்பிடமும் நிரந்தரமற்றதுமாகும். இத்தகு உலகில் சுதந்திரமாக அனுபவிக்க நாம் எவ்வளவு போராடினாலும், அது வீண் முயற்சியே. கானல் நீரைக் கண்டு மயங்கும் மான்போல், இன்பம் இருப்பதுபோன்ற ஒரு தோற்றத்தைக் கண்டு நாம் அதைத் தேடித் தேடியே வாழ்வை முடிக்க நேரிட்டு விடுகிறது.
******************************
தைவீ ஹ்யேஷா குண-மயீ மம மாயா துரத்யயா
மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே
“ஜட இயற்கையின் முக்குணங் களாலான எனது இந்த மாயா சக்தி வெல்லுவதற்கரியது. ஆயினும் என்னிடம் சரணடைந்தோர் இதனை எளிதில் கடக்கலாம்.” (பகவத் கீதை 7.14)
*******************************
நாம ரூப கிருஷ்ணரிடம் சரணடைவோம்.
******************************
கிருஷ்ண மந்த்ர ஹைதே ஹபே ஸம்ஸார மோசன
கிருஷ்ண-நாம ஹைதே பாபே கிருஷ்ணேர சரண
கிருஷ்ண நாமத்தை உச்சரிப்பதால் பௌதிக வாழ்விலிருந்து எளிதாக விடுதலை பெற முடியும். உண்மையில், ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பதால் பகவானின் தாமரைத் திருவடிகளை எளிதாகக் காண இயலும்.” (சைதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலை 7.73)
*******************************
ஹரி நாமத்தில்,
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
என்னும் மஹாமந்திரத்தில் சரணாகதியடைவோம்
********************************
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment