வந்தே (அ)ஹம் ஸ்ரீ-குரோ: ஸ்ரீ-யுத-பத -
கமலம் ஸ்ரீ-குரூன் வைஷ்ணவாம்ஷ் ச
ஸ்ரீ-ரூபம் ஸாக்ரஜாதம் ஸஹ-கண-
ரகுநாதான் விதம் தம் ஸ-ஜீவம்
ஸாத் வைதம் ஸாவதூதம் பரிஜன-
ஸஹிதம் க்ருஷ்ண-சைதன்ய-தேவம்
ஸ்ரீ-ராதா-க்ருஷ்ண-பாதான் ஸஹ-கண-
லலிதா-ஸ்ரீ-விஷாகான்விதாம்ஷ் ச
எனது ஆன்மீக
குருவின்
பாத கமலங்களுக்கும் எல்லா வைஷ்ணவர்களின் பாதங்களுக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்களை சமர்பித்துக் கொள்கிறேன். ஸ்ரீல ரூபகோஸ்வாமி, அவரது மூத்த சகோதரர்
ஸநாதன கோஸ்வமி,
ரகுநாத
தாஸ, ரகுநாத
பட்ட, கோபால பட்ட, ஸ்ரீல ஜீவ கோஸ்வாமிகளின் பாத கமலங்களுக்கு எனது மரியாதைக்குரிய வணக்கங்கள். அத்வைத
ஆச்சாரியர், கதாரர்,
ஸ்ரீவாஸர் மற்றும்
பக்தர்
குழாமுடன், ஸ்ரீ நித்யானந்தருக்கும் ஸ்ரீ கிருஷ்ண
சைதன்யருக்கும் எனது பணிவான
வணக்கங்கள். ஸ்ரீமதி
ராதாராணிக்கும் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அவர்களது
தோழிகளான
லலிதா,
விசாகைக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்.
Comments
Post a Comment