நரசிம்ம அவதாரம்
ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் ஏழாம் காண்டம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பாகம் 5
அசுரத் தோழர்களுக்கு பிரகலாதரின் உபதேசம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பிரகலாதர் தமது
பள்ளித் தோழர்களுக்குச் செய்த உபதேசத்தைப் பற்றி இந்த அத்தியாயம் விவரிக்கிறது. பிரகலாதர், அசுரப் புத்திரர்களான தன் தோழர்களுடன் பேசும் பொழுது, ஒவ்வொரு ஜீவராசியும், குறிப்பாக, மனிதர்கள் வாழ்வின் துவக்கத்திலிருந்தே ஆத்ம ஞானத்தில் நாட்டம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மனிதர்கள் குழந்தைகளாக இருக்கும்பொழுதே, அவர்களுக்குப் பரமபுருஷர் ஒருவரே அனைவராலும் வழிபடத்தக்க மூர்த்தி என்பது கற்பிக்கப் பட வேண்டும். பௌதிக சுகத்தில் ஒருவன் அதிக நாட்டம் கொள்ளக் கூடாது; மாறாக, சுலபமாக அடையப்படக்கூடிய பௌதிக விஷயங்கள் கொண்டு ஒருவன் திருப்தியடைய வேண்டும். ஒருவனது ஆயுள் மிகவும் குறுகியதாக உள்ளதால், அவன் ஒவ்வொரு நொடியையும் ஆன்மீக முன்னேற்றத்திற்காகவே செலவிடவேண்டும். “இளமையில் பௌதிக சுகபோகங்களை அனுபவிப்போம். முதுமையில் கிருஷ்ண பக்தியில் ஈடுபடலாம்” என்று
ஒருவன் தவறாக நினைக்கக் கூடும். இத்தகைய பௌதிகமான சிந்தனையால் பயனில்லை. ஏனெனில், வயதான பருவத்தில் ஒருவனை ஆன்மீக வழிமுறையில் பயிற்றுவிக்க முடியாது. ஆகவே, வாழ்வின் துவக்கத்திலிருந்தே ஒருவன் பக்தித் தொண்டில் ஈடுபடவேண்டும். (ஸ்ரவணம் கிர்த்தனம் விஷ்ணோ:) இதுவே ஜீவராசிகளின் கடமையாகும். பௌதிகக் கல்வியானது இயற்கையின் முக்குணங்களால் அசுத்தப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மனித சமுதாயத்தில் மிகவும் தேவையாக உள்ள ஆன்மீக கல்வி உன்னதமானதாகும். நாரத முனிவரிடமிருந்து தான் உபதேசம் பெற்ற இரகசியத்தைப் பிரகலாத மகாராஜன் வெளிப்படுத்தினார். சீடப் பரம்பரையில் இடம் பெற்றுள்ள பிரகலாத மகாராஜனின் தாமரைப் பாதங்களை ஏற்றுக் கொள்வதன் மூலமாக, ஆன்மீக வாழ்வின் சரியான மார்கத்தைபுரிந்துகொள்ளமுடியும்.
இத்தகையசெயல்முறையைஏற்றுக்கொள்வதற்குபௌதிகதகுதிமுறைகள்தேவையில்லை.
பிரகலாத
மகாராஜன் கூறியதைக் கேட்ட அவரது நெருங்கிய நண்பர்கள், அவர் எவ்வாறு இந்த அளவிற்குக் கற்றறிந்தவராகவும், உயர்ந்தவராகவும் ஆனார் என்று வினவினர். இவ்விதமாக இந்த அத்தியாயம் நிறைவு பெறுகிறது.
தொடரும் . .
நாளை ..
கர்பத்தில்
பிரகலாதர்
கற்றது
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment