நரசிம்ம அவதாரம்
ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் ஏழாம் காண்டம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பாகம் 4
இரண்யகசிபுவின் தெய்வப் புதல்வரானபக்தப் பிரகலாதன்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பிரகலாத மகாராஜன் எப்பொழுதும் பகவான் விஷ்ணுவின் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தால் அவர் தன் சான்களின் உத்தரவுகளை நிறைவேற்றவில்லை. இந்த அத்தியாயத்தில் விவரிக்கப்படுவதுபோல், இரண்யகசிபு, தன் மகனான பிரகலாத மகாராஜனைப் பாம்பால் கடிக்கச் செய்தும், யானைகளின் பாதங்களுக்கிடையில் தள்ளியும் அவரைக் கொல்ல முயன்றான். எனினும், அதில் அவன் வெற்றி அடையவில்லை.
இரண்யகசிபுவின் குருவான சுக்ராச்சாரியருக்கு சண்டன், அமர்க்கன் என்ற இரு மகன்கள் இருந்தனர். பிரகலாத மகாராஜன் கல்வி கற்பதற்காக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். அந்த ஆசான்கள் சிறுவனான பிரகலாதருக்கு அரசியல், பொருளாதாரம் முதலான மற்ற பௌதிக விசயங்களை போதிக்க முயன்றனர். ஆனால் அவர்களது போதனைகளை அவர் பொருட்படுத்தவில்லை. மாறாக, தொடர்ந்து அவர் ஒரு தூய பக்தராகவே இருந்தார். பிரகலாத மகாராஜன் நண்பன், பகைவன் என்ற வேறுபாட்டை ஒருபோதும் விரும்பியதில்லை. அவர் ஆன்மீக நாட்டம் உடையவர் என்பதால், அனைவரிடமும் சமமாக நடந்து கொண்டார். ஒருசமயம் இரண்யகசிபு தன் மகனிடம், தன் ஆசான்களிடமிருந்து அவர் கற்ற கல்வியிலேயே சிறப்புடையது எது என்று வினவினான். அதற்கு பிரகலாத மகாராஜன், இருமை என்ற பௌதிக உணர்வில் ஆழ்ந்துள்ள மனிதன், “இது என்னுடையது, அது என் பகைவனுடையது” என்று எண்ணுகிறான். அவன் தன் குடும்ப வாழ்வைத் துறந்து, வனம் சென்று, பரமபுருஷரை வழிபட வேண்டும் என்று பதிலளித்தார்.
தன் மகனிடமிருந்து பக்தித் தொண்டைப் பற்றி கேட்ட இரண்யகசிபு, பள்ளிக்கூடத்திலுள்ள யாரோ ஒரு நண்பனால் அவர் தவறாக போதிக்கப்பட்டுள்ளார் என்று முடிவு செய்தான். இவ்வாறாக தன் மகன் ஒரு கிருஷ்ண உணர்வுள்ள ஒரு பக்தனாக மாறிவிடாதபடி அவரை நன்கு கவனித்துக் கொள்ளுமாறு அந்த ஆசான்களுக்கு இரண்யகசிபு அறிவுரை கூறினான். ஆனால், பிரகலாத மகாராஜன் தங்களுடைய போதனைகளுக்கு எதிராக செயற்படுவதன் காரணத்தை அந்த ஆசான்கள் தன்னிடமும் வினவியதைக் கேட்ட பிரகலாதர், உரிமையாளன் என்ற மனோபாவம் பொய்யானது என்றும், எனவே தான் பகவான் விஷ்ணுவின் ஒரு தூய பக்தனாக மாற முயல்வதாகவும் அந்த ஆசான்களுக்கு அவர் கற்பித்தார். இந்த பதிலைக் கேட்டு கடுங்கோபமடைந்த அந்த ஆசான்கள் பிரகலாதனை தண்டித்து, பலவிதமாக அவரை பயமுறுத்தினர். அவர்கள் தங்களால் இயன்றளவு சிறப்பாக அவருக்குக் கல்வி புகட்டி, அவரது தந்தையின் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.
இரண்யகசிபுவும் தன் மகன் பிரகலாதனை அன்புடன் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு, இதுவரை பிரகலாதன் தன் ஆசான்களிடமிருந்து கற்றதில் சிறப்புடையது எது என்று வினவினான். வழக்கம் போலவே பிரகலாத மகாராஜன் ஸ்வரணம். கீர்த்தனம் முதலான ஒன்பது பக்தித் தொண்டு முறைகளை போற்றத் துவங்கினார். இவ்வாறாக அசுரராஜனான இரண்யகசிபு கடுங்கோபமடைந்து, பிரகலாதனுக்குத் தவறான கல்வியைப் புகட்டியதற்காக சண்டனையும், அமர்க்கனையும் தண்டித்தான். பெயரளவேயான அந்த ஆசான்களும், பிரகலாத மகாராஜன் தானாகவே ஒரு பக்தன் என்றும், தங்களுடைய உபதேசங்களை அவர் கேட்பதில்லை என்றும் அந்த அரசனிடம் அறிவித்தனர். தங்களிடம் குற்றமில்லை என்பதை அவர்கள் நிரூபித்ததும், விஷ்ணு பக்தியைப் பிரகலாதன் எங்கிருந்து கற்றார் என்று இரண்யகசிபு அவரிடமே வினவினான். அதற்கு பிரகலாத மகாராஜன் பின்வருமாறு பதிலளித்தார். குடும்ப வாழ்வில் பற்றுக்கொண்டுள்ளவர்கள் கிருஷ்ண உணர்வில் முன்னேற்றமடைவதில்லை, மாறாக, இந்த ஜட உலகில் அவர்கள் பிறப்பு, இறப்பு என்ற முடிவற்ற துன்பத்தை அனுபவித்துக் கொண்டு, தொடர்ந்து மென்றதையே மென்று கொண்டு இருக்கின்றனர். மேலும் ஒருவன் ஒரு தூய பக்தரிடம் தஞ்சமடைந்து, கிருஷ்ண உணர்வைப் புரிந்து கொள்வதற்குத் தகுதியுடையவன் ஆகவேண்டியது ஒவ்வொருவருக்கும் உள்ள கடமையாகும் என்றும் பிரகலாதன் விளக்கினார்.
இந்த பதிலைக் கேட்டு கோபாவேசமடைந்த இரண்யகசிபு, பிரகலாத மகாராஜனைத் தன் மடியிலிருந்து கீழே தள்ளினான். பிரகலாதன் தன் பெரியப்பனான இரண்யாக்ஷனைக் கொன்ற விஷ்ணுவின் பக்தனாக மாறி நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டதால், இரண்யகசிபு அவரைக் கொன்றுவிடும்படி தன் சேவகர்களுக்கு உத்தரவிட்டான். இரண்யகசிபுவின் சேவகர்கள் பிரகலாதரைக் கூர்மையான ஆயுதங்களால் தாக்கினார். அவரை யானைகளின் காலடியில் வீசினார், நரகம் போன்ற சூழ்நிலைகளுக்கு அவரை உட்படுத்தினர், மலை உச்சியிலிருந்து அவரைக் கீழே தள்ளினர். இன்னும் ஆயிரக்கணக்கான வாகளில் அவரைக் கொல்ல முயன்றனர். ஆனால் அவர்களுடைய எந்த முயற்சியிலும் அவர்கள் வெற்றி பெறவில்லை. எனவே இரண்யகசிபு தன் மகன் பிரகலாதனிடம் அதிகம் அச்சம் கொண்டு அவரைக் கைது செய்தான். இரண்யசிபுவின் குருவான சுக்ராச்சாரியரின் இரு மகன்களும் தங்களுடைய சொந்த வழியில் பிரகலாதனுக்கு போதிக்கத் துவங்கினார். ஆனால் பிரகலாத மகராஜன் அவர்களது போதனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த ஆசாமிகள் வகுப்பறையில் இல்லாத சமயம் பார்த்து, பிரகலாதன் அந்த பள்ளிக்கூடத்தில் கிருஷ்ண பக்தியைப் பிரச்சாரம் செய்யத் துவங்கினார். அவரது அந்த உபதேசங்களினால், அசுரர்களின் மகன்களான அவரது பள்ளித் தோழர்கள் அனைவரும் அவரைப் போலவே பக்தர்களாக மாறிவிட்டனர்.
தொடரும் . .
நாளை ..
அசுரத் தோழர்களுக்குபிரகலாதரின் உபதேசம்
🍁🍁🍁🍁🍁🍁
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment