நரசிம்ம அவதாரம்
ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் ஏழாம் காண்டம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பாகம் 8
பிரகலாதர் பகவான் நரசிம்மரைசாந்தப்படுத்துதல்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இரண்யகசிபுவைக் கொன்ற
பிறகும் பகவானுடைய கோபம் தனியவில்லை. பிரம்மா முதலான தேவர்களாலும் அவரை சாந்தப்படுத்த இயலவில்லை. ஸ்ரீதேவியும், நாராயணரின் இணையிரியா நாயகியுமான தாய் லக்ஷ்மிதேவிகூட, பகவான் நரசிம்மதேவர் முன் வரத் துணியவில்லை. பிறகு பிரம்மதேவர், பகவானை அணுகி அவரைச் சாந்தப்படுத்தும்படி பிரகலாத மகாராஜனை கேட்டுக் கொண்டார். தமது தலைவராகிய பகவான் நரசிம்மதேவர் தன்னிடம் கொண்டுள்ள பாசத்தில் முழு நம்பிக்கைக் கொண்டிருந்த பிரகலாதர் சிறிதும் அச்சப்படவில்லை. அவர் மௌனமாக பகவானுடைய தாமரைப் பாதங்களை அணுகி, மரியாதையுடன் அவரை வணங்கினார். பகவான் நரசிம்மர் பிரகலாதரிடம் பேரன்பு கொண்டிருந்ததால், அவர் தமது கையைப் பிரகலாதரின் தலைமேல் வைத்து அவரை ஆசீர்வதித்தார். பகவானுடைய நேரடியான ஸ்பரிசத்தினால் பிரகலாதர் உடனே ஆத்ம ஞானத்தைப் (ப்ரஹ்ம-ஞான) பெற்றார். இவ்வாறாக அவர், பூரண ஆத்ம ஞானத்துடனும், பக்தித் பரவசத்துடனும் பகவானை துதித்துப் போற்றினார். பிரகலாதரால் ஸ்ரோத்திரங்களின் வடிவில் கொடுக்கப்பட்ட உபதேசங்கள் பின்வருமாறு:
பிரகலாதர் கூறினார்: “பரமபுருஷருக்கு ஸ்தோத்திரம் செய்யும் பாக்கியத்தைப் பெற்றது
குறித்து நான் கர்வப்படவில்லை. நான் பகவானுடைய கருணையைத் தஞ்சமடைகிறேன். ஏனெனில், பக்தியின்றி ஒருவரால் அவரைச் சாந்தப்படுத்த முடியாது. உயர்குடிப் பிறப்பினாலோ, செல்வம், கல்வி, தவம், விரதம் யோக சித்தி ஆகியவற்றினாலோ பகவானை மகிழ்விக்க முடியாது. உண்மையில் இவையெல்லாம் பகவானுக்கு திருப்தி அளிப்பதேயில்லை. தூய பக்தித் தொண்டு மட்டுமே அவரை திருப்திப்படுத்தும். பக்தனல்லாத ஒருவன், பன்னிரண்டு பிராமண தகுதிகளையுடைய ஒரு பிராமணனாக இருந்தாலும், அவனால் பகவானுக்குப் பிரியமானவன் ஆகமுடியாது. ஆனால் நாய் மாமிசம் திண்ணும் சண்டாளம் குடும்பத்தில் பிறந்த ஒருவன் ஒரு பக்தனாக இருப்பானாயின், அவனுடைய பிரார்த்தனைகளையும் பகவான் ஏற்றுக் கொள்கிறார். பகவானுக்கு யாருடைய பிரார்த்தனையும், துதியும் தேவையில்லை. இருப்பினும் பகவானைத் துதிக்கும் பக்தன் சிறந்த நன்மைகளை அடைகிறான். ஆகவே, அறிவில்லாத கீழ்த்தரமான குடும்பங்களில் பிறந்தவர்கள் கூட, மனப்பூர்வமாக பகவானைத் துதிப்பார்களானால், அதை பகவான் நிச்சயம் ஏற்றுக் கொள்வார். பகவானிடம் பிரார்த்தனைகளையோ, ஸ்தோத்திரங்களையோ செய்பவன் உடனே பிரம்மன் படித்தரத்தில் நிலைபெற்றவனாகிறான்.
பகவான் நரசிம்மர் பிரகலாதரின் நன்மைக்காக மட்டுமின்றி மனிதகுலம் முழுவதின் நன்மைக்காகத் தோன்றினார். பகவான் நரசிம்மரின் பயங்கர ரூபம், பக்தனால்லாத ஒருவனுக்கு மிகவும் கொடூரமானதாகத் தோன்றக்கூடும். ஆனால் பக்தனுக்கு, மற்ற ரூபங்களைப் போலவே பகவான் எப்பொழுதும் பாசம் மிக்கவராக இருக்கிறார். உண்மையில் ஜட உலகிலுள்ள பந்தப்பட்ட வாழ்வானது மிகவும் பயங்கரமானதாகும். ஆனால் ஒரு பக்தன் நிஜமாகவே எதைக் குறித்தும் அஞ்சுவதில்லை. பௌதிக வாழ்விலுள்ள பயத்திற்குப் பொய் அகங்காரமே காரணம். ஆகவே, பகவானுடைய அடியார்க்கும் அடியவரின் நிலையை அடைவதே அனைத்து ஜீவன்களுக்கும் முடிவான இலட்சியமாகும். ஜட உலகிலுள்ள ஜீவராசிகளின் துன்பகரமான நிலையை பகவானுடைய கருணையால் மட்டுமே திருத்தியமைக்க முடியும். பிரம்மதேவர், பிற தேவர்கள், அல்லது ஒருவனது சொந்த தந்தை போன்ற பெயரளவேயான பௌதிக காவலர்கள் இருந்த போதிலும், பரமபுருஷரால் நிராகரிக்கப்பட்ட ஒருவனுக்கு அவர்களால் எந்த நன்மையையும் செய்ய முடியாது. ஆனால், பகவானுடைய தாமரைத் திருவடிகளின் புகலிடத்தை முழுமையாக ஏற்றவன் ஜட இயற்கையின் பலமான தாக்குதலிலிருந்து காப்பாற்றப்பட முடியும். எனவே அனைத்து ஜீவன்களும் பெயரளவேயான பௌதிக இன்பத்தினால் கவரப்படாமல், எல்லா வழிகளிலும் பகவானின் புகலிடத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும். இதுவே மனித வாழ்வின் குறிக்கோளாகும். புலன் நுகர்வினால் கவரப்படுவது முட்டாள்தனம். ஒருவன் பகவானுடைய பக்தனாகவோ அல்லது பக்தனல்லாதவனாகவோ இருப்பது, அவனுடைய உயர்ந்த அல்லது தாழ்ந்த பிறப்பைச் சார்நததல்ல. பிரம்மதேவராலும், லக்ஷ்மி தேவியாலும் கூட பகவானின் பூரண அனுக்கிரகத்தைப் பெற முடியவில்லை. ஆனால் ஒரு பக்தனால் இத்தகைய பக்தித் தொண்டைச் சுலபமாக அடைந்துவிட முடியும். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் பகவானுடைய கருணை சமமாக அருளப்படுகிறது. நாரத முனிவரின் ஆசீர்வாதத்தினால் பிரகலாதர் மிகச்சிறந்த பக்தரானார். பகவான் தமது பக்தர்களை அருவவாதிகளிடமிருந்தும், சூனூயவாதிகளிடமிருந்தும் எப்பொழுதும் காப்பாற்றுகிறார். பகவான் அனைத்து ஜீவராசிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கவும், அவர்களுக்கு எல்லா நன்மைகளையும் செய்யவும், அவர்களுடைய இதயங்களில் பரமாத்மாவாக எழுந்தருளி இருக்கிறார். இவ்விதமாக பகவான் சிலசமயம் கொல்பவராகவும், சில சமயம் காப்பவராகவும் செயற்படுகிறார். முரண்பாடான செயலுக்காக பகவான் மீது பழி சுமத்தக்கூடாது. அவருடைய திட்டத்தினால்தான் இவ்வுலகில் பல வகைப்பட்ட உயிரினங்கள் இருப்பதை நான் காண்கிறோம். முடிவாக அனைத்தும் அவருடைய கருணையே ஆகும்.
முழு
பிரபஞ்ச தோற்றமும் வேற்றுமை இல்லாதது என்றாலும், ஆன்மீக உலகம் ஜட உலகிலிருந்து வேறுபட்டதாகும். பரமபுருஷரின் கருணையால் மட்டுமே அற்புதமான ஜட இயற்கை எப்படி செயற்படுகிறது என்பதை ஒருவனால் புரிந்து கொள்ள முடியும. உதாரணமாக பிரம்மதேவர், கர்போதகசாயி விஷ்ணுவின் நாபியிலிருந்து வளர்ந்த தாமரை ஆசனத்திலிருந்து தோன்றினார் என்றாலும், இனி என்ன செய்ய வேண்டும் என்பதை அவரால் புரிந்து கொள்ள இயலவில்லை. மது, கைடபன் என்ற இரு அசுரர்கள் அவரைத் தாக், வேத ஞானத்தை அவரிடமிருந்து பறித்துச் சென்றனர். ஆனால் பகவான் அவர்களைக் கொன்று, வேத ஞானத்தை மீண்டும் பிரம்மாவிடம் ஒப்படைத்தார். இவ்வாறாக, தேவர்கள், மனிதர்கள், மிருகங்கள், முனிவர்கள், கடல்வாழ் ஜீவன்கள் ஆகிய ஜீவன்களுக்கிடையில் பகவான் யுகந்தோறும் தோன்றுகிறார். இத்தகைய அவதாரங்களெல்லாம் பக்தக்ளைக் காத்து, அசுரர்களைக் கொல்வதற்காக ஏற்பட்டவையே. ஆனால் கொல்லுதல், காத்தல் என்ற இவ்விரு செயல்களும், பரமபுருஷரைப் பொறுத்தவரை பாரபட்சமுள்ள செயல்களல்ல. பந்தப்பட்ட ஆத்மா எப்பொழுதும் பௌதிக சக்தியினால் ஈர்க்கப்படுகிறான். இதனால் அவன் காமத்திற்கும், பேராசைக்கும் அடிமையாகி, ஜட இயற்கையின் பிடியில் அகப்பட்டு அவதிப்படுகிறான். தமது பக்தனிடம் பகவான் காட்டும் காரணமற்ற கருணைதான் பௌதிக வாழ்விலிருந்து வெளியேறுவதற்குரிய ஒரே வழியாகும். பகவானின் செயல்களைத் துதிப்பதில் ஈடுபட்டுள்ள எவரும், இந்த ஜட உலகில் எப்பொழுதும் அச்சமற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் அவ்வாறு பகவானைத் துதிக்காதவன் எல்லாத் துன்பங்களுக்கும் ஆளாகிறான்.
தனிமையான இடங்களில் பகவானை மௌனமாக வழிபடுவதில் சிரத்தையுள்ளவர்கள தங்களுடைய சொந்த முக்திக்குத் தகுதி பெறுகின்றனர். ஆனால் தூய பக்தரொருவர் பிறர் துன்புறுவதைக் கண்டு எப்பொழுதும் துன்பப்படுகிறார். கவே, தன் சொந்த முக்தயைப் பற்றி கவலைப்படாமல், அவர் பகவானைத் துதிப்பதன் மூலமாக எப்பொழுதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். எனவே பிரகலாத மகாராஜன் மௌனமாக இல்லாமல், தமது வகுப்புத் தோழர்களுக்குப் பிரச்சாரம் செய்து, அவர்களைக் கடைத்தேற்ற முயன்றார. தவ, விரதங்களை அனுஷ்டித்தும், வேத இலக்கியங்களைக் கற்றும், வேதக் கிரியைகளை நிறைவேற்றியும், ஜபம், தியானம் ஆகியவற்றை மேற்கொண்டு தனிமையான ஒரிடத்தில் மௌனமாக வாழும் முறையானது, முக்தியடைவதற்கு ஏற்புடைய வழியே என்றாலும், அது பக்தரல்லாதவனுக்குரிய ஒரு வழி முறையாகும். அதாவது, இது பிறர் தயவில் வாழ விரும்பும் ஏமாற்றுக்காரர்களுக்குரிய ஒரு வழியாகும். ஆனால், குறையுடைய இத்தகைய எல்லாச் செயல்களிலிருந்தும் விடுபட்டுள்ள தூய பக்தனால் பகவானை நேருக்கு நேராகத் தரிசிக்க முடிகிறது.
பிரபஞ்சத் தோற்றமே
அணுக்களின்
சேர்க்கையினால் அமைந்தது என்ற
அணுவியல் கோட்பாடு உண்மையல்ல. பகவானே அனைத்திற்கும் காரணம். எனவே இந்த சிருஷ்டிக்கும் அவரே காரணமாவார். எனவே, பகவானைப் பணிவுடன் வணங்குதல், பிரார்த்தனைகள் செய்தல், பகவானுக்காக வேலை செய்தல், ஆலயத்தில் பகவானை வழிபடுதல், பகவானை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருத்தல். எப்பொழுதும் பகவானின் உன்னத செயல்களைப் பற்றி கேட்டல் ஆகியவற்றின் மூலமாக, ஒருவன் எப்பொழுதும் பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபட்டிருக்க வேண்டும். இந்த ஆறு வகையான செயல்களில் ஈடுபடாமல் ஒருவனால் பக்தித் தொண்டை அடைய முடியாது.
பிரகலாத
மகாராஜன் ஒவ்வொரு அடியிலும் பகவானுடைய கருணையை யாசித்து, அவரிடம் பிரார்த்தனைகள் செய்தார். பிரகலாதரின் பிரார்த்தனைகளால் சாந்தமடைந்த பகவான் நரசிம்மதேவர், எல்லா வகையான பௌதிக இன்பங்களையும் அடையக்கூடிய வரங்களைப் பிரகலாதருக்கு அளிக்க விரும்பினார். ஆனால் பௌதிக இன்பங்களால் பிரகலாதர் தவறான பாதையில் ஈர்க்கப்படவில்லை. மாறாக, எப்பொழுதும் பகவானுடைய அடியார்க்கு அடியவராக இருப்பதையே அவர் விரும்பினார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment