இரண்யகசிபு பிரபஞ்சத்தை பீதியடையச்செய்தல்

 

நரசிம்ம அவதாரம்

 

ஆதாரம் :- ஶ்ரீமத பாகவதம் ஏழாம் காண்டம்

 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

 

பாகம் 3

 

இரண்யகசிபு பிரபஞ்சத்தை பீதியடையச்செய்தல்

 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

 

இரண்யகசிபு கடுந்தவங்களினால் பிரம்மதேவரை மகிழ்வித்து தான் விரும்பிய வரங்களைப் பெற்றான். இந்த வரங்களைப் பெற்ற பின், கிட்டத்தட்ட முழுமையாக அரிக்கப்பட்டிருந்த அவனது உடல், முழு அழகும், தங்கத்தைப் போன்ற பளபளப்பும் கொண்ட ஓருடலாக புதுப்பித்துப்பட்டது. ஆயினும், தன் சகோதரனைக் கொன்ற பகவான் விஷ்ணுவை மறக்கமுடியாமல் தொடர்ந்து அவரிடம் பகைமை பாராட்டி வந்தான். இரண்யகசிபு பத்துத் திசைகளையும் மூவுலங்களையும் வென்று, தேவர்கள், அசுரர்கள் ஆகிய அனைத்து ஜீவராசிகளையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தான். இந்திரனின் இருப்பிடம் உட்பட எல்லா இடங்களுக்கும் அதிபதியாக மாறிய அவன், மிகவும் ஆடம்பரமாக வாழ்வை அனுபவிக்கத் துவங்கி வெறிபிடித்தவனானான். பகவான் விஷ்ணு, பிரம்மதேவர் மற்றும் சிவபெருமான் ஆகியோரைத் தவிர மற்றெல்லா தேவர்களும் அவனது கட்டுப்பாட்டிற்கு அடி பணிந்து அவனுக்கு சேவை செய்யத் துவங்கினர். ஆனால் இவ்வளவு பௌதிக சக்தியை அவன் பெற்றிருந்த போதிலும், எப்பொழுதும் வேத விதிகளை மீறுவதில் பெருமை கொண்டு திமிர் பிடித்தவனாக இருந்ததால் அவன் திருப்தியடையாதவனாகவே இருந்தான். அனைத்து பிராமணர்களும் அவனிடம் அதிருப்தியடைந்து திடமனதுடன் அவனைச் சபித்தனர். இறுதியில் பிரபஞ்சத்திலுள்ள தேவர்கள் மற்றும் முனிவர்கள் முதலான அனைத்து ஜீவராசிகளும் இரண்யகசிபுவின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி பரம புருஷரிடம் பிரார்த்தனை செய்தனர்.

தேவர்களையும் பிற ஜீவராசிகளையும், இரண்யகசிபுவால் உருவாக்கப்பட்ட பயங்கரமான சூழ்நிலைகளிலிருந்து தாம் காப்பாற்றுவதாக பகவான் விஷ்ணு தேவர்களுக்கு அறிவித்தார். இரண்யகசிபு அனைத்து தேவர்களையும், வேதங்களைப் பின்பற்றுபவர்களையும், பசுக்களையும், பிராமணர்களையும், மற்றும் சாதுக்களையும், துன்புறுத்துபவனாகவும் பரமபுருஷரிடம் பகைமை கொண்டவனாகவும் இருந்ததால், இயல்பாகவே மிக விரைவில் அவன் கொல்லப்பட்டுவிடுவான் என்பது நிச்சயம். தன் சொந்த மகனும், மிகச் சிறந்த ஒரு வைஷ்ணவருமான (மஹா - பாகவதர்) பிரகலாரைச் சித்திரவதை செய்வதுதான் அவனுடைய கடைசிச் செயலாகும். அதன்பிறகு அவனுடைய வாழ்வு முடிந்துவிடும். பரமபுருஷரால் தேவர்களுக்கு இவ்வாறு உறுதியளிக்கப்பட்டபொழுது, இரண்யகசிபுவின் கொடுமைகள் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்பதை அறிந்து அனைவரும் திருப்தியடைந்தனர்.

இறுதியாக, இரண்யகசிபுவின் மகனான பிரகலாக மகாராஜனின் சிறப்பியல்புகளையும், எப்படி அவரது தந்தை தன் சொந்த மகனிடமே பகைமை கொண்டான் என்பதையும் நாரத முனிவர் விவரிக்கிறார். இவ்விதமாக இந்த அத்தியாயம் ஒரு முடிவுக்கு வருகிறது.

 

தொடரும் . .  

 

நாளை ..

 

இரண்யகசிபுவின் தெய்வப் புதல்வரானபக்தப் பிரகலாதன்

 

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more