நரசிம்ம அவதாரம்
ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் ஏழாம் காண்டம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பாகம் 2
இரண்யகசிபு சாகாவரம் பெறும்திட்டம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இரண்யகசிபு மரணமற்றவனாக ஆக விரும்பினான். யாராலும் ஐயிக்கப்பட முடியாதவனாகவும், முதுமையாலும் நோயினாலும் பீடிக்கப் படாதவனாகவும், எதிரியற்றவனாகவும் ஆக விரும்பினான். இவ்வாறாக அவன் இந்த முழு பிரபஞ்சத்திற்கும் சக்ரவர்த்தியாக ஆக விரும்பினான். இந்த விருப்பத்துடன் மந்தரமலைப் பள்ளத்தாக்கில் பிரவேசித்த அவன், ஒருவித கடுந்தவத்தையும், தியானத்தையும் செய்யத் துவங்கினான். இரண்யகசிபு இத்தவத்தில் ஈடபட்டிருப்பதைக் கண்ட தேவர்கள் அவரவர் இல்லங்களுக்குத் திரும்பினர். ஆனால் இரண்யகசிபு இவ்வாறு ஈடுபட்டிருந்த பொழுது, ஒருவித நெருப்பு ஜீவாலை அவனது தலையிலிருந்து வெளிப்பட்டு முழு பிரபஞ்சத்தையும், அதன் வாசிகளையும், பறவைகளையும், மிருகங்களையும் மற்றும் தேவர்களையும் தொந்தரவு செய்தது. மேலுலகங்களிலும், கீழுலங்களிலும் வாழ முடியாதபடி வெட்பம் மிகுந்துவிட்டதால், தொல்லைக்குள்ளான தேவர்கள் உயர்க்கிரகங்களிலுள்ள தங்களுடைய வசப்பிடங்களை விட்டுவிட்டு, பிரம்மதேவரைக் காணச் சென்றனர். தேவையற்ற அந்த வெப்பத்தைக் குறைக்கும்படி அவரிடம் வேண்டினர். சாகாவரம் பெறவும், தனது குறுகிய ஆயுளை வெல்லவும், துருவலோகம் உட்பட எல்லாக் கிரகங்களுக்கும் தலைவனாக இருக்கவும் ஆவல் கொண்ட இரண்யகசிபுவின் நோக்கத்தை அவர்கள் பிரம்ம தேவரிடம் கூறினர்.
இரண்யகசிபுவினுடைய கடுந்தவத்தின் நோக்கத்தைப் பற்றி கேட்ட பிரம்ம தேவர், மாமுனிவரான பிருகுவுடனும் சக்திவாய்ந்தவரான தட்சனுடனும் இரண்யகசிபுவை காணச் சென்றார். அங்குச் சென்றதும் பிரம்மா தனது கமண்டலத்திலுள்ள நீரை இரண்யகசிபுவின் தலை மேல் தெளித்தார்.
தைத்திய ராஜனான இரண்யகசிபு, இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிக்கர்த்தாவான பிரம்மதேவர் முன் சிரம் தாழ்த்தி, மீண்டும் மீண்டும் வணங்கி பிரார்த்தனைகள் செய்தான். பிரம்மதேவரும் அவனுக்கு வரங்கள் கொடுப்பதாக ஒப்புக் கொண்டார். அப்பொழுது அவன், தான் எந்த ஜீவராசியாலும் கொல்லப்படக் கூடாது என்றும், உள்ளேயும், வெளியேயும் உள்ள எந்த இடத்திலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என்றும், பகலிலோ அல்லது இரவிலோ தனக்கு மரணம் உண்டாகக் கூடாது என்றும், எந்த மனிதனாலோ, மிருகத்தாலோ, தேவராலோ, அல்லது அசையும் அசையாத வேரெந்த ஜீவராசியாலோ தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என்றும் அவன் வேண்டினான். மேலும் அவன் முழு பிரபஞ்சத்திற்கும் தான் தலைமை அதிகாரத்தைப் பெறவேண்டும் என்றும் அணிமா, லகிமா முதலான அஷ்ட சித்திகளை அடைய வேண்டும் என்றும் வேண்டினான்.
தொடரும் . .
நாளை ..
இரண்யகசிபு பிரபஞ்சத்தை பீதியடையச்செய்தல்
🍁🍁🍁🍁🍁🍁
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment