நம ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ண பிரேஷ்டாய பூதலே
ஸ்ரீமதே பக்தி ஸித்தாந்த சரஸ்வதி இதி நாமினே
ஸ்ரீ வார்ஷபாநவீ தேவீ தயிதாய கிருபாப்தயெ
கிருஷ்ண ஸம்பந்த விஞான தாயினே பிரபவே நம:
மாதுர்யோஜ்ஜ்வல பிரேமாட்ய ஸ்ரீ ரூபானுக பக்தித
ஸ்ரீ கௌர கருணா ஷக்தி விக்ரஹாய நமோஸ்துதே
நமஸ்தே கௌர வாணீ ஸ்ரீ மூர்தயே தீன தாரிணே
ரூபானுக விருத்தாபஸித்தாந்த த்வாந்த ஹாரிணே
பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவரும் அவரது தாமரைத் திருவடிகளில் தஞ்சமடைந்தவருமான தெய்வத்திரு பக்திசித்தாந்த சரஸ்வதி அவர்களுக்கு எனது மரியாதைக்குரிய வணக்கத்தை அர்ப்பணிக்கின்றேன்.
தெய்வீக கருணையின் கடலும் கிருஷ்ண சம்பந்த விஞ்ஞானத்தை வழங்குபவருமான ஸ்ரீ வார்ஷபானவி தேவி தயித தாஸருக்கு (மன்னர் விருஷபானுவின் மகளான ஸ்ரீமதி ராதாராணியின் கருணையைப் பெற்ற சேவகருக்கு) எனது மரியாதைக்குரிய வணக்கத்தை அர்ப்பணிக்கின்றேன்.
ஸ்ரீ சைதன்யருடைய கருணா சக்தியின் ஸ்வரூபமும் ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் வழியில் ராதா-கிருஷ்ணரின் தெய்வீக அன்பினை வழங்குபவருமான தங்களுக்கு எனது மரியாதைக்குரிய வணக்கம்.
பகவான் சைதன்யருடைய வாணியின் ஸ்வரூபமும் வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களை விடுவிப்பவரும் ஸ்ரீல ரூப கோஸ்வாமியினால் நிலைநாட்டப்பட்ட சித்தாந்தத்திற்கு எதிரான கருத்துகளின் இருளை அகற்றுபவருமான தங்களுக்கு எனது மரியாதைக்குரிய வணக்கம்.
Comments
Post a Comment