ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் ஏழாம் காண்டம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பாகம் 6
கர்பத்தில் பிரகலாதர் கற்றது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இரண்யகசிபு தன் இராஜ்யத்தை விட்டுவிட்டு, கடுந்தவம் புரிவதற்காக மந்தராசல மலைக்குச் சென்றபொழுது, எல்லா அசுரர்களும் இங்குமங்குமாக ஓடி ஒளிந்தனர். அப்பொழுது இரண்யகசிபுவின் மனைவியான கயாது கர்பவதியாக இருந்தாள். அவள் இன்னுமொரு அசுரனைக் கருவில் சுமந்து கொண்டிருக்கிறாள் என்று தவறாக எண்ணிய தேவர்கள் அவளை சிறைப்பிடித்தனர். குழந்தை பிறந்த உடனேயே அதைக் கொன்றுவிட வேண்டும் என்பது அவர்களுடைய திட்டம். அவர்கள் கயாதுவை சுவர்க்க லோகங்களுக்கு அழைத்துச் செல்லும்பொழுது, வழியில் அவர்களைச் சந்தித்த நாரத முனிவர், அவர்களைத் தடுத்து நிறுத்தி, இரண்யகசிபு திரும்பி வரும்வரை அவளைத் தமது ஆசிரமத்தில் வைத்திருக்க அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். ஆசிரமத்தை அடைந்த கயாது, கர்பத்திலுள்ள தன் குழந்தைக்குப் பாதுகாப்பு அளிக்கும்படி வேண்டினாள். நாரதரும் குழந்தையைக் காப்பதாக உறுதியளித்து விட்டு, அவளுக்கு ஆத்ம ஞானத்தை உபதேசித்தார். பிரகலாத மகாராஜன் சிறு குழந்தையாக கர்பத்தினுள் இருந்த போதிலும், நாரதரின் அவ்வுபதேசங்களைக் கேட்கும் வாய்ப்பை நன்கு பயன் படுத்திக் கொண்டார். ஆன்மீகமான ஆத்மா உடலிலிருந்து வேறுபட்டதாகும். ஜீவராசியின் ஆன்மீக ரூபத்தில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. தேகாபிமானத்திற்கு மேற்பட்ட ஒருவன் பரிசுத்தனும், ஆன்மீக அறிவைப் பெறும் தகுதியுடையவனுமாவான். ஆன்மீக அறிவு எனப்படும் இது பக்தித் தொண்டாகும். இவ்வாறாக கர்பத்தில் இருந்த பிரகலாத மகாராஜன், நாரத முனிவரிடமிருந்து பக்தித் தொண்டைப் பற்றிய உபதேசத்தைப் பெற்றார். உண்மையான ஓர் ஆன்மீக குருவிடம் உபதேசங்களைப் பெற்று பகவானின் சேவையில் ஈடுபடும் ஒருவன், மாயையின் பிடியிலிருநூது விடுபட்டு, அறியாமையும், பௌதிக ஆசைகளும் அகலப் பெற்றவனாய் உடனேயே முக்தியை அடைகிறான். பரமபுருஷரிடம் தஞ்சமடைந்து எல்லா பௌதிக ஆசைகளிலிருந்து விடுபடுவதே ஒவ்வொருவருக்கும் உள்ள கடமையாகும். எத்தகைய பௌதிக நிலையில் இருப்பவனாலும் இந்த பூரணத்துவத்தை அடைய முடியும். பக்தித் தொண்டானது, பௌதிக செயல்களான தவம், விரதம், அஷ்டாங்க யோகம், மதச் சார்பு ஆகியவற்றைச் சார்ந்ததல்ல. இவற்றில் எதுவுமே இல்லையென்றாலும், ஒரு தூய பக்தரின் கருணையினால் ஒருவன் பக்தித் தொண்டைப் பெற முடியும்.
தொடரும் . .
நாளை ..
பகவான் நரசிம்மர் அசுர ராஜனைவதம் செய்தல்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment