பரம புருஷர் அனைத்திற்கும் முடிவான கர்த்தா என்றாலும் அவரது மூல ஆன்மீக நிலையில், பந்தப்பட்ட ஆத்மாக்களின் இன்ப துன்பத்திற்கோ, அல்லது பந்த மோட்சத்திற்கோ அவர் பொறுப்பாளி அல்ல. இவை இந்த ஜட உலகிலுள்ள ஜீவராசிகளின் கர்ம பலன்களால் விளைகின்றன. ஒரு நீதிபதியின் உத்தரவினால், ஒருவன் சிறையில் இருந்து விடுவிக்கப் படுகிறான் மற்றொருவன் சிறையில் அடைக்கப்படுகிறான். இந்த வெவ்வேறு மனிதர்களின் இன்ப துன்பங்களுக்கு அவரவர் சொந்த செயல்களே காரணம் என்பதால் இதற்கு நீதிபதி பொறுப்பாளி அல்ல. அரசாங்கமே முடிவாக உயர்ந்த அதிகாரம் உடையது என்றாலும், தனி நபர்களுக்குரிய தீர்ப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பல்ல. எனவே அரசாங்கம் எல்லா பிரஜைகளிடமும் சமமாகவே நடந்து கொள்கிறது. அதுபோலவே பரமபுருஷரும் அனைவருக்கும் சமமானவரவார். ஆனால் சட்டத்தையும் ஒழுங்கையும் காப்பாற்ற அவரது மேலான அரசாங்கம் பல்வேறு இலாக்காக்களைக் கொண்டுள்ளது. அவை ஜீவராசிகளின் செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன . இது தொடர்பாக கொடுக்கப்படும் மற்றொரு உதாரணம் என்னவெனில் சூரிய ஒளியின் காரணத்தினால் தான் குமுத மலர்கள் மலரவோ, மூடவோ. செய்கின்றன. இவ்வாறாக வண்டுகள் இன்புறுகின்றன , அல்லது துன்புறுகின்றன. அதனால் வண்டுகளின் இந்த இன்ப துன்பங்களுக்கு சூரிய ஒளியும், சூரிய கோலமும் பொறுப்பல்ல
(பொருளுரை/ ஶ்ரீமத் பாகவதம் 6.17.23)
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment