ஶ்ரீராமனின் சகோதரன் பரதனின் மகிமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
அயோத்தியை ஆண்ட தசரத மன்னனுக்கு 3 மனைவியர்கள் (கௌசல்யா, கைகேயி, சுமித்திரை) மூவரிலும் தசரத மன்னனின் அன்பிற்கு அதிகம் பாத்திரமானவர் "கைகேயி". அவளுடைய மகன் பரதன். "மந்தரை" என்னும் கூனியால் ஏவப்பட்டு கைகேயி மூத்தவனாகிய ஶ்ரீ ராமனுடைய பட்டாபிஷேகத்தை முடங்கி விட்டாள். தனக்கு மன்னன் கொடுத்திருந்த இரண்டு வரத்தை அத்தருணத்தில் கேட்டு இராமன் காட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் பரதனே நாட்டை ஆளவேண்டும் என்றும் கேட்டு அந்த இரண்டு வரங்களையும் பெற்றாள். தந்தையின் வரம் பொய் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தானே முன்வந்து வனம் சென்றார் இராமன். பரதனை அரசனாக்கி கண்டு மகிழ கைகேயி தயாராக இருந்தாள். அந்த நிலையில் பரதன் ஆனந்தமாக அரியாசனம் ஏறுவதற்கு பதிலாக பெற்றெடுத்த அன்னையின் மீது சீறி விழுந்தான். "அம்மா நீ ஒரு பெண்ணாகியதால் உன்னை கொலை செய்யாமல் விடுகிறேன்". என்று தாயின் மீது சினம் கொண்டான். அண்ணனை அழைத்து வந்து அரியாசனம் ஏற்றி வைப்பேன். அண்ணன் வராவிடில் நானும் இந்த அயோத்தி நகர் வர மாட்டேன் என வீர சபதம் எடுத்தான். அண்ணனை அழைத்து வரவேண்டும் என்று காட்டிற்கு சென்றான். ஆனால் அண்ணன் ஊர் திரும்பி வரமாட்டேன் என்று கூறிவிட்டார் விட்டான்.
அதனால் அவரது அறிவுரைகளை பெற்று அவனது பாதுகைகளை சிரசில் ஏந்தி நாடு திரும்பினான். மேலும் அண்ணனிடம் "அண்ணா 14 வருடம் வனவாசம் முடிந்த மறு கணம் நீ வந்து சேரவில்லை என்றால் நான் உயிர் வாழமாட்டேன்" என்று உரைத்தான். நாடு திரும்பிய பரதன் அயோத்திக்குப் செல்லவில்லை. நந்தி கிராமம் என்ற ஊரில் தங்கி விட்டான். கானகம் சென்ற அண்ணன் எவ்விதம் வாழ்கிறானோ அதே போல் தானும் ஆடை ஆபரணங்களைக் களைந்து, ஜடாமுடி தரித்து, காய் கனிகளை தின்று வெறும் தரையில் படுத்து உறங்கி வாழ்ந்தான். அரியணையில் அண்ணனின் பாதுகைகளை ஏற்றி வைத்து, அண்ணனின் பிரதிநிதியாக தன்னை பாவித்து, அந்த கிராமத்திலிருந்தே அரசாட்சியை ராமனின் அறிவுரைப்படி செம்மையாக நடத்தி வந்தான். இப்படி இருக்கையில் ஆண்டுகள் 14 ம் சென்றன. அண்ணன் வர காணாத பரதன் கானகத்தில் ராமனுக்கு ஆபத்து வந்துவிட்டது என்று கருதினான். அழுது புரண்டான். தனது சபதத்திற்கு ஏற்ப தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள உறுதி பூண்டான். சிதை தயாராகியது. நெருப்பில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ள தீர்மானித்துக் கொண்டான். அந்நேரத்தில் ராமதூதன் ஆகிய "ஆஞ்சநேயன்" வந்து ராமன் வரும் செய்தியை அறிவித்ததும் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தான். அண்ணனிடம் இத்தனை பக்தியும், அன்பும், பாசமும் உடைய சகோதரன் "பரதனை" போல் வேறு யாருமில்லை.
Comments
Post a Comment