பானிஹாட்டி சிடா-தஹி திருவிழா

 


பானிஹாட்டி  சிடா-தஹி திருவிழா


( ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம், அந்திய லீலை, அத்யாயம் 6 / மொழிபெயர்ப்பு )


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் முக்கிய சீடர்களில் ஒருவராகவும் விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளில் ஒருவராகவும் விளங்குபவர் ரகுநாத தாஸ கோஸ்வாமி அவர்கள். மிகப்பெரிய செல்வந்த குடும்பத்தைச் சார்ந்த அவர், பகவத் பக்தியினால் ஆட்கொள்ளப்பட்டு, ஸ்ரீ சைதன்யரிடம் சரணடைய முனைந்தார். பல முறை வீட்டை விட்டு ஓடியபோதிலும், அவரது தந்தை தனது ஆட்களைக் கொண்டு அவரை மீண்டும்மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார்.


அச்சூழ்நிலையில், பானிஹாட்டி எனப்படும் இடத்தில், ஸ்ரீ நித்யானந்த பிரபுவின் கட்டளைப்படி, ரகுநாதர் தயிரையும் அவலையும் கொண்டு ஒரு வித்தியாசமான விருந்திற்கு ஏற்பாடு செய்தார். ரகுநாதரின் மீது திருப்தியுற்று நித்யானந்தர் கருணையைப் பொழிய, அக்கருணையினால் குறுகிய காலத்திலேயே ரகுநாதரால் ஸ்ரீ சைதன்யருடன் இணைய முடிந்தது.


ரகுநாதர் ஸ்ரீ நித்யானந்த பிரபுவின் கருணையினால் ஸ்ரீ சைதன்யரை அடைந்தார் என்பதை நினைவுகொள் வதற்காகவும் நாமும் அக்கருணையின் சிறு துளியைப் பருகுவதற்காகவும் ஆண்டுதோறும் அந்த பானிஹாட்டி சிடா–தஹி திருவிழா (அவல், தயிர் திருவிழா) விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஜுன் மாதம் 23 தேதியன்று உலகமேங்கும் கொண்டாடபடுகிறது.


(நித்யானந்த பிரபுவின் கட்டளையைப் பெற்றவுடன்) ரகுநாத தாஸர் உடனடியாகத் தனது ஆட்களை எல்லாவிதமான உணவு பதார்த்தங்களையும் வாங்கி வரும்படி கிராமத்திற்கு அனுப்பி வைத்தார். (52)


அவல், தயிர், பால், இனிப்புகள், சர்க்கரை, வாழைப் பழம் மற்றும் இதர உணவுப் பொருள்களை வாங்கி வந்த ரகுநாத தாஸர் அவற்றினை எல்லாவிடங்களிலும் பரப்பி வைத்தார். (53)


திருவிழா நடைபெறவிருப்பதைக் கேள்விப்பட்டு, எல்லா வகையான பிராமணர்களும் இதர கனவான்களும் அங்கு வரத் தொடங்கினர். எண்ணிலடங்காத மக்கள் அங்கே கூடினர். (54)


கூட்டம் அதிகரிப்பதைக் கண்டு ரகுநாத தாஸர் இதர கிராமங்களிலிருந்து மேலும் உணவுப் பொருள்களை எடுத்து வருவதற்கு ஏற்பாடு செய்தார். அவர் இருநூறு, நானூறு பெரிய மண்பானைகளையும் கொண்டு வந்தார். (55)


ஓரிடத்தில், அவலானது பெரிய பானைகள் ஒவ்வொன்றிலும் சூடான பாலில் ஊற வைக்கப்பட்டது. அதன் பின்னர் பாதி அவலானது தயிர், சர்க்கரை, மற்றும் வாழைப் பழங்களுடன் சேர்க்கப்பட்டது. (57)


மீதி பாதியானது கெட்டியான பாலுடன் கலக்கப்பட்டு சாங்பா–கலா என்னும் ஒரு வகையான வாழைப் பழத்துடன் கலக்கப்பட்டது. அதனுடன் சர்க்கரையும் நெய்யும் கற்பூரமும் சேர்க்கப்பட்டது. (58)


நித்யானந்த பிரபு தனது துணியினை மாற்றி புத்தாடையினை உடுத்திக் கொண்ட பின்னர், உயர்ந்த திட்டில் அமர்ந்தார், அவருக்கு முன்பாக ஏழு பெரிய பாத்திரங்களை பிராமணர் கொண்டு வந்தார். (59)


அந்த திட்டில் ஸ்ரீ நித்யானந்த பிரபுவின் முக்கியமான ஸங்கத்தினர்கள் அனைவரும் இருந்தனர், இதர முக்கியமான நபர்களும் அங்கு பிரபுவை சுற்றி வட்டமாக அமர்ந்தனர். (60)


திருவிழாவினைப் பற்றிக் கேள்விப்பட்டு, எல்லா வகையான பண்டிதர்களும் பிராமணர்களும் பூஜாரிகளும் அங்கு சென்றனர். பகவான் நித்யானந்த பிரபு அவர்களுக்கு மரியாதையளித்து அவர்களைத் தன்னுடன் உயர்ந்த திட்டில் அமரச் செய்தார். (64)


ஒவ்வொருவருக்கும் இரண்டு மண்பானைகள் வழங்கப்பட்டன. ஒன்றில் கெட்டியான பாலுடன் இருந்த அவலும், மற்றொன்றில் தயிருடன் இருந்த அவலும் வழங்கப்பட்டது. (65)


மற்ற மக்கள் அனைவரும் குழுக்களாக தரையில் அமர்ந்திருந்தனர். எவ்வளவு மக்கள் அங்கிருந்தனர் என்பதை யாராலும் எண்ண முடியவில்லை. (66)


அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு மண்பானைகள் வழங்கப்பட்டனஶீஒன்றில் தயிரில் ஊற வைக்கப்பட்ட அவலும், மற்றொன்றில் கெட்டியான பாலில் ஊற வைக்கப்பட்ட அவலும் இருந்தது. (67)


திட்டில் இடம் கிடைக்காத சில பிராமணர்கள் தங்களுடைய இரண்டு மண்பானைகளுடன் கங்கைக் கரைக்குச் சென்று தங்களுடைய அவலை அங்கே ஊற வைத்தனர். (68)


கங்கைக் கரையில்கூட இடம் கிடைக்காத மற்றவர்கள் நீரினுள் இறங்கி தங்களுடைய இருவகையான அவலை உண்ணத் தொடங்கினர். (69)


இவ்வாறாக, சிலர் திட்டில் அமர்ந்திருந்தனர், சிலர் திட்டுக்கு கீழே தளத்தில் அமர்ந்திருந்தனர், வேறுசிலர் கங்கைக் கரையில் இருந்தனர்; இருபது ஆட்களின் மூலமாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு பானைகள் வழங்கப்பட்டன. (70)


ஒவ்வொருவருக்கும் அவல் பரிமாறப்பட்டபோது, பகவான் நித்யானந்த பிரபு தனது தியானத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை அங்கு வரவழைத்தார். (77)


நித்யானந்த பிரபு என்ன செய்கிறார் என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும், மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த சிலரால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அங்கு இருப்பதைக் காண முடிந்தது. (82)


நித்யானந்த பிரபு ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிற்கு ஓர் இடத்தினை வழங்கி அங்கே அவரை அமரச் செய்தார். அதன் பின்னர், இரு சகோதரர்களும் ஒன்றாக இணைந்து அவலை உண்ணத் தொடங்கினர். (84)


ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தன்னுடன் உணவருந்துவதை கண்ட பகவான் நித்யானந்த பிரபு மிகவும் மகிழ்ச்சியுற்று பலவிதமான பிரேமையினை வெளிப்படுத்தினார். (85)


பகவான் நித்யானந்த பிரபு கட்டளையிட்டார், “நீங்கள் அனைவரும் ஹரியின் திருநாமத்தினை உச்சரித்தபடி உண்ணுங்கள்.” உடனடியாக, “ஹரி, ஹரி” என்னும் திருநாமம் பேரொலியாக எழுந்து பிரபஞ்சம் முழுவதையும் நிரப்பியது. (86)


எல்லா வைஷ்ணவர்களும் “ஹரி, ஹரி” என்று திருநாமங்களை உச்சரித்தபடி உணவருந்தியபோது, கிருஷ்ணரும் பலராமரும் தங்களுடைய நண்பர்களான இடைச் சிறுவர்களுடன் யமுனைக் கரையில் எவ்வாறு உணவருந்தினர் என்பதை அவர்கள் அனைவரும் நினைவுகூர்ந்தனர். (87)


பல்வேறு கிராமங்களில் கடைகளை வைத்திருந்த வர்கள் திருவிழாவினைப் பற்றிக் கேள்விப்பட்டபோது, அவர்களும் அங்கே அவல், தயிர், இனிப்பு, மற்றும் வாழைப்பழங்களை விற்பதற்காக வந்தனர். (91)


அவர்கள் எல்லா வகையான உணவுகளையும் கொண்டு வந்தபோது, ரகுநாத தாஸர் அவையனைத் தையும் வாங்கிக் கொண்டார். பொருட்களுக்கான விலையினை அவர்களுக்கு வழங்கிய பின்னர், அதே உணவினைக் கொண்டு அவர்களுக்கும் உணவளித்தார். (92)


இந்த கேளிக்கையான விஷயங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை பார்ப்பதற்காக வந்தவர் களும்கூட அவல், தயிர் மற்றும் வாழைப்பழங்களுடன் உணவளிக்கப்பட்டனர். (93)


பகவான் நித்யானந்த பிரபு உண்டு முடித்த பின்னர் அவர் தனது கரங்களையும் வாயினையும் கழுவிவிட்டு, நான்கு பானைகளில் மீதமிருந்த உணவினை ரகுநாத தாஸருக்கு வழங்கினார். (94)


பகவான் நித்யானந்த பிரபுவினால் மீதம் வைக்கப்பட்ட உணவினைப் பெற்ற பின்னர், ரகுநாத தாஸர் பெரிதும் மகிழ்ச்சியுற்று அதில் ஒரு பகுதியினைத் தான் உண்டு, மீதி பகுதியினை தனது சொந்த ஸங்கத்தினர்களுக்கு மத்தியில் விநியோகம் செய்தார். (99)


பகவான் நித்யானந்த பிரபுவினால் பெரிதும் கொண்டாடப்பட்ட சிடா–ததி மஹோத்ஸவ லீலையினை இவ்வாறாக விவரித்துள்ளேன். (100)



( ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம், அந்திய லீலை, அத்யாயம் 6 / மொழிபெயர்ப்பு )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


Telegram


🍁🍁🍁🍁🍁


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇


https://t.me/suddhabhaktitamil


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/udvegakathaigal


Whatsapp :- 


🍁🍁🍁🍁🍁


https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR


உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏



Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more