உண்மையான வைரம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஒரு வணிகர் நல்ல ஒட்டகம் ஒன்றை சந்தையில் வாங்க விரும்பினார். ஒட்டகத்தை பார்த்ததும் அதை விற்க வந்தவரிடம் அதன் விலையை பேசி முடிக்க ஆரம்பித்தார்.
வணிகருக்கும்,ஒட்டகம் விற்பனையாளருக்கு இடையில் நடந்த நீண்ட பேரம் பேசுதலுக்குப் பிறகு ஒருவழியாக ஒட்டகத்தை வாங்கி அதைத் தன் வீட்டிற்கு ஓட்டி வந்தார்.
வீட்டை அடைந்ததும் தன் வேலைக்காரனிடம் ஒட்டகத்தின் சேனத்தை எடுக்குமாறு கூறினார்.
வேலைக்காரன் சேனத்தின் அடியில் பளபளக்கும் பை ஒன்று இருப்பதையும் அதனுள் விலைமதிப்பற்ற வைரக்கற்கள் நிறைந்து இருப்பதையும் கண்டான்.
அவன் தன் முதலாளியிடம் சத்தமாக, "முதலாளி ஐயா, நீங்கள் ஒட்டகம் தானே வாங்கினீர்கள், ஆனால் இங்கு பாருங்கள் அதனுடன் இலவசமாக என்ன வந்திருக்கிறது என்று". என்றான்.
வணிகரும் வேலைக்காரனின் கையில் இருந்த அந்த வைரங்கள் சூரிய ஒளியிலும் பளபளப்புடன் பிரகாசிப்பதை கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்.
பின் வணிகர் கூறினார், "நான் ஒட்டகத்தை தான் வாங்கினேன், வைரத்தை அல்ல, எனவே இதை உடனே திருப்பிக் கொடுக்க வேண்டும்"என்றார்.
வேலைக்காரன் தன் மனதினுள் நம் முதலாளி எவ்வளவு முட்டாளாக இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டான்.
அவன் கூறினான், இதன் உரிமையாளர் யார் என்று யாருக்கும் தெரியாது என்றான். ஆனால் வணிகர் இதற்கு செவி சாய்க்கவில்லை. அவர் உடனடியாக சந்தைக்குப் போய் அந்த பையை ஒட்டக வியாபாரியிடம் திருப்பி கொடுத்தார்.
ஒட்டக வியாபாரி மகிழ்வுடன், நான் இதனை சேனையின் அடியில் மறைத்து வைத்திருந்ததை மறந்து போய்விட்டேன் மிக்க நன்றி இதில் ஏதாவது ஒரு வைரத்தை வெகுமதியாக நீங்கள் தேர்வு செய்யலாம் என்றார்.
அதற்கு அந்த வணிகர் நான் ஒட்டகத்திற்கு சரியான விலை கொடுத்து வாங்கியுள்ளேன். அதனால் எனக்கு எந்த பரிசுப் பொருளும் தேவையில்லை என்றார்.
வணிகர் மறுக்க மறுக்க ஒட்டக வியாபாரியோ வற்புறுத்திக் கொண்டேஇருந்தார். கடைசியாக அவர் சிரித்துக் கொண்டே சொன்னார், உண்மையைச் சொன்னால் இந்தப் பையைத் தூக்கிக் கொண்டு வர முடிவு செய்த போது மிக அருமையான இரண்டு வைரங்களை ஏற்கனவே நான் எடுத்து வைத்துள்ளேன்.
அவர் இவ்வாறு பேசியதைக் கேட்ட ஒட்டக வியாபாரி கோபமடைந்து பையிலிருந்த வைரங்களை வெளியே எடுத்து எண்ணத் தொடங்கினார்.
பிறகு ஒரு பெருமூச்சுடன் என்னுடைய வைரங்கள் அனைத்தும் இங்கே உள்ளன. எனவே நீங்கள் வைத்து இருப்பவையாக கூறியவை எவற்றை? என்றார்.
வணிகர் கூறினார், "என் நேர்மை மற்றும் என் சுயமரியாதை" என்றார்.
ஒட்டக விற்பனையாளர் ஊமை ஆனார்.
அவர் கூறிய இந்த இரண்டு வைரங்களில் ஏதேனும் ஒன்று நம்மிடம் உள்ளதா என்று நமக்குள்ளே நாம் தேடிப் பார்க்க வேண்டும்.
எவர் ஒருவர் இரண்டு வைரங்களான நேர்மை மற்றும் சுயமரியாதையை கொண்டிருக்கிறார்களோ அவரே இவ்வுலகின் மிக பெரிய செல்வந்தர்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
Comments
Post a Comment