பகவத்கீதையில் பகவான், ஒருவன் பிற எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டு தம்மையே சரணடைய வேண்டும் என்று கூறுகிறார் அதில் சரண்புகுந்த ஆத்மாக்களை அவர் எல்லாவிதமான பாவச் செயல்களில் இருந்தும் காத்தருள்வார் என்று கூறுகிறார்.
ஶ்ரீல ரூபகோஸ்வாமி, அவர்கள் பாவச் செயல்களினால் உண்டாகும் துன்பங்களுக்கு, அப்பாவங்களும், முற்பிறப்பில் செயத பாவங்களுமே காரணம் என்று கூறுகிறார். பொதுவாக ஒருவன் அறியாமையினாலேயே பாவச் செயல்களில் ஈடுபடுகிறான் அதனால் பாவங்களில் இருந்து தப்புவதற்கு அறியாமை ஒரு பரிகாரம் ஆகிவிட்டது. பாவச் செயல்கள் இரு வகைப்படும் அவை முதிர்ந்த பாவச்செயல்கள், மற்றும் முதிராத பாவச் செயல்கள் . எந்தப் பாவச் செயல்களின் காரணமாக நாம் இப்பொழுது துன்பம் அனுபவித்து கொண்டிருக்கிறோமோ அவை முதிர்ந்த பாவச்செயலாகும். நம்மிடம் சேர்ந்திருக்கும் பாவச் செயல்களின் காரணமாக நாம் இன்னும் துன்பம் அனுபவிக்க வில்லை என்றால் அவை முதிராத பாவச்செயலாகும். இதற்கு உதாரணமாக பல குற்றங்களைச் செய்த ஒருவன் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பதை கூறலாம். இப்போது அவன் கண்டுபிடிக்கப்பட்டவுடன் சிறைவாசம் அவனுக்கு காத்துக் கொண்டிருக்கிறது ஆகையால் நமது சில பாவச் செயல்களின் காரணமாக எதிர்காலத்தில் துன்பம் அனுபவிப்பதற்கு நாம் இப்போது காத்துக் கொண்டிருக்கிறோம். நமது முதிர்ந்த சில பாவச் செயல்களின் காரணமாக நாம் இப்பொழுது துன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்..
இவ்வாறு பாவச் செயல்களும் அவற்றோடு ஒருங்கிணைந்த துன்பங்களும் என்று ஒரு சங்கிலித்தொடர் இருக்கின்றது. இப்பாவங்களின் காரணமாக பந்தப்பட்ட ஆத்மா பிறவிகள்தோறும் துன்பம் அனுபவித்து கொண்டிருக்கின்றான். இப்பிறப்பில் அவன் தனது முற்பிறப்பின் பாவச் செயல்களினால் துன்புறுகிறான். இதனிடையே அவன் தனது மறுபிறப்பில் துன்பம் அனுபவிப்பதற்காக இப்பிறப்பில் மேலும் பாவங்கள் செய்து கொண்டிருக்கின்றான். முதிர்ந்த பாவச்செயல்கள், ஒருவன் தீராத பிணியினால் வருந்தினாலோ, ஒருவன் சட்டச்சிக்கலுக்கு ஆளானாலோ, ஒருவன் தாழ்ந்த குலத்தில் பிறந்ததாலோ, ஒருவன் கல்வியறிவற்ற வனாக இருந்தாலோ ஒருவன் பார்கச் சகிக்காத அழகற்றவனாக இருந்தாலோ அவற்றிலெல்லாம் காணப்படுகின்றன.
நமது முந்தைய பாவச் செயல்களின் விளைவினால் நாம் இப்போது வருந்திக் கொண்டிருக்கின்றோம். நமது இன்றைய பாவச் செயல்களினால் எதிர்காலத்தில் நாம் வருந்து நேரிடலாம். ஆனால் பாவச் செயல்களின் விளைவுகள் அனைத்தும் நாம் கிருஷ்ண உணர்வு பெற்றோமென்றால் உடனே செயலிழந்து விடும். இதனை ஶ்ரீல ரூபகோஸ்வாமி ஸ்ரீமத் பாகவதம் பதினோராம் காண்டம், பதினாலாம் அத்தியாயம் ஸ்லோகம் 19 இல் எடுத்துக்காட்டுகிறார். இச்ஸ்லோகம் பகவான் கிருஷ்ணர் உத்தவருக்கு அருளிய உபதேசம் பற்றியதாகும். அதில் பகவான் கூறுகிறார் "அன்பார்ந்த உத்தவரே , எனக்கு செய்யும் பக்தி தொண்டு கொழுந்துவிட்டெரியும் நெருப்பாகும். அது அதிலிடப்படும் எண்ணற்ற விறகுகளை எரித்துச் சாம்பலாக்கி விடும்" என்று. இதன் பொருள் என்னவெனில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு அதில் விடப்படும் ஏராளமான விறகுகளை எரித்து சாம்பலாக்கி விடும். அதேபோல பகவானுக்குச் செய்யும் பக்தித் தொண்டு பாவச்செயல்கள் என்னும் விறகுகள் அனைத்தையும் எரித்து சாம்பலாக்கி விடும்.
ஒருவன் தனது முன்வினைப்பயன் காரணமாக பிராமணகுலத்திலோ அல்லது நாயை தின்னும் புலைக் குலத்திலோ பிறக்கிறான். புலைக் குலத்தில் பிறந்ததனால் அவனது முந்தைய செயல்கள் அனைத்தும் பாவச் செயல்கள் எனலாம். ஆனால் அதே மனிதன் பக்தி தொன்டில் ஈடுபட்டுப் பகவானின் புனித நாமங்களை ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே - என்று ஓதினானென்றால் அவன் உடனை வேள்விச் சடங்குகளைச் செய்வதற்குத் தகுதியுடையவனாகிறான். அதோடு அவனது பாவச் செயல்களின் பலன்கள் எல்லாம் உடனே மட்டுப்படுத்தப்படுகின்றன.
(ஶ்ரீல பிரபுபாதர் / பக்தி ரசாம்ருத சிந்து/ அத்யாயம் ஓன்று)
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment