ஒரு குருவி கடற்கரையில் முட்டைகளை இட்டது, ஆனால் பெருங்கடல் அம்முட்டைகளைத் தனது அலைகளால் இழுத்துச் சென்றுவிட்டது. மிகுந்த வருத்தமுற்ற குருவி, தனது முட்டைகளைத் திருப்பித் தரும்படி கடலிடம் கேட்டது. அம்முறையீட்டினை கடல் கண்டு கொள்ளவேயில்லை. எனவே, குருவி கடலை வற்றச் செய்வது என்று முடிவு செய்தது. தனது சின்னஞ்சிறு அலகால் கடல் நீரை வெளியேற்ற ஆரம்பித்தது, அதன் இயலாத உறுதியைக் கண்டு எல்லாரும் சிரித்தனர். இச்செய்தி பரவ, இறுதியில் விஷ்ணுவின் மாபெரும் பறவை வாகனமான கருடன் இதனைக் கேட்டார். தனது சிறிய சகோதரிப் பறவையின்மீது கருணை கொண்ட அவர், குருவியைக் காண வந்தார். சிறு குருவியின் உறுதியினால் மனமகிழ்ந்த கருடன், உதவி செய்வதாக வாக்களித்தார். இவ்வாறாக, உடனடியாகக் குருவியின் முட்டைகளைத் திருப்பித் தரும்படியும் இல்லாவிடில் குருவியின் செயலைத் தான் செய்து விடுவேன் என்றும் கருடன் கடலை எச்சரித்தார். கடல் பயந்துபோய் குருவின் முட்டைகளைத் திருப்பிக் கொடுத்தது. இவ்வாறாக கருடனின் கருணையினால் குருவி மகிழ்வுற்றது.
அதுபோல, யோகப் பயிற்சி, குறிப்பாக கிருஷ்ண உணர்வில் செய்யப்படும் பக்தி யோகம், மிகவும் கடினமாகத் தோன்றலாம். ஆனால் யாரேனும் மிக்க உறுதியுடன் கொள்கைகளைப் பின்பற்றினால், கடவுள் நிச்சயமாக உதவுவார்; ஏனெனில், தனக்கு உதவிக் கொள்பவனுக்குக் கடவுள் உதவுகிறார்.
( ஶ்ரீல பிரபுபாதர் / பகவத் கீதை உண்மையுருவில் / அத்தியாயம் ஆறு / பதம் 24 / பொருளுரை )
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment