🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
சைதன்ய மஹாபிரபுவின் மீதி உணவை நாராயணி நித்தியமாக உண்கிறாள். ஸ்ரீல விருந்தாவன தாஸ தாகூர் அவளது கருவிலிருந்து பிறந்தவர்.
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் எல்லா சகாக்களையும் அவர்களது முந்தைய தோற்றத்தினையும் விவரிக்கக்கூடிய கவி கர்ணபூரரால் எழுதப்பட்ட கௌரக ணோத்தேஷதீபிகா என்னும் நூலின் 43ஆவது ஸ்லோகத்தில், நாராயணியைக் குறித்து பின்வரும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது:
அம்பி காயா: ஸ்வஸா யாஸீன் நாம்னா ஸ்ரீல- கிலிம்பி கா
க்ருஷ்ணோச்சி ஷ்டம் ப்ரபுஞ்ஜானா ஸேயம் நாராயணீ மதா
பகவான் கிருஷ்ணர் குழந்தையாக இருந்தபோது, அவர் அம்பிகை என்னும் பெண்ணால் பராமரிக்கப்பட்டார், அவளது தங்கையின் பெயர் கிளிம்பிகை. சைதன்ய மஹாபிரபுவின் அவதார காலத்தில், அதே கிளிம்பிகை, ஸ்ரீவாஸ தாகூருடைய சகோதரரின் மகளாக நாராயணி என்ற பெயரில் தோன்றினாள்; அவள் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவால் மீதம் வைக்கப்பட்ட உணவினை உண்பது வழக்கம். பிற்காலத்தில் அவள் பெரியவளாகி திருமணம் செய்த பின்னர், அவளது கருவிலிருந்து ஸ்ரீல விருந்தாவன தாஸ தாகூர் பிறந்தார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தரொருவர் பகவானுக்கு அவர் செய்யக்கூடிய பக்தித் தொண்டின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறார்; இவ்வாறாக, ஸ்ரீல விருந்தாவன தாஸ தாகூரை நாராயணியின் மகனாக நாம் அறிகிறோம்.அவர் வழங்கிய சைதன்ய மஹாபிரபுவின் லீலைகள் (ஶ்ரீ சைதன்ய பாகவதம்) எவ்வளவு அற்புதமானவை! மூவுலகில் அதனை யார் கேட்டாலும், அவர் தூய்மையடைகிறார்.
ஸ்ரீ விருந்தாவன தாஸ தாகூரின் எழுத்துகளின் மூலமாக, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தாமே தமது திருவாயிலிருந்து பேசியதுபோன்று தோன்றுமளவிற்கு இந்நூலின் (ஶ்ரீ சைதன்ய பாகவதம்) விஷயங்கள் மிகவும் பக்குவமாக உள்ளன. ஸ்ரீ சைதன்ய-பாகவதத்தினைக் கேட்டால், மாபெரும் நாஸ்திகன்கூட உடனடியாக மாபெரும் பக்தனாக மாறுகிறான்.நான் விருந்தாவன தாஸ தாகூரின் தாமரைத் திருவடிகளில் கோடிக்கணக்கான நமஸ்காரங்களை அர்ப்பணிக்கின்றேன். எல்லா வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களையும் விடுவிப்பதற்கான அத்தகு அற்புதமான நூலை வேறு யாராலும் எழுத இயலாது.
ஜெய் ஶ்ரீல விருந்தாவன தாஸ தாகூர்🙏
ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / 1.8.38-42 )
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram செயலி
🍁🍁🍁🍁🍁🍁
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal
🍁🍁🍁🍁🍁🍁
வலைதளம் / website
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
https://www.suddhabhaktitamil.com/?m=1
Comments
Post a Comment