பிரலம்பாசுன் வதம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
கிருஷ்ணரும் பலராமரும் தங்கள் லீலைகளை நிகழ்த்திக் கொண்டி ருந்த ஸ்ரீ விருந்தாவனத்தில் கோடைக் காலம் கூட வசந்த காலத்தின் தன்மைகளைக் கொண்டிருந்தது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பலராமருடனும், ஆயர்குலச் சிறுவர்களுடனும் சேர்ந்து பல்வேறு கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். ஒருநாள் அவர்கள் அனைவரும் ஆட்டபாட்டங்களில் திளைத்திருந்தனர். அப்போது பிரலம்பன் என்னும் அசுரன் ஒரு ஆயர் குலச் சிறுவனைப் போல் தன்னை உருமாற்றிக் கொண்டு அவர்களுடன் கலந்து கொண்டான். எல்லாம் அறியவல்ல பகவான் கிருஷ்ணர் அவன் யார் என்பதைத் தெரிந்து கொண்டு, அவனைக் கொல்வதற்காக, அவனுடன் நண்பனைப் போல் பழகினான்
பிறகு கிருஷ்ணர், பலதேவரிடமும், ஆயர்குலச் சிறுவர்களிடமும் அவர்கள் அனைவரும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து விளையாட வேண்டும் என்று கூறினார். அனைத்துச் சிறுவர்களையும் இரண்டு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவிற்கும் கிருஷ்ணரும், பலராமரும் தலைவர்களாக இருப்பது என்றும், தோற்ற பிரிவை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றவர்களைத் தமது தோள்களில் சுமந்து செல்ல வேண்டு மென்றும் தீர்மானித்தனர். பலராமர் பிரிவைச் சேர்ந்த ஸ்ரீதாமனும் விருஷபனும் வெற்றி பெற்றவுடன் அவர்களைக் கிருஷ்ணரும், அவரது பிரிவில் உள்ள மற்றொரு சிறுவனும் தங்கள் தோள்களில் சுமந்தனர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் போட்டியிட்டு அவரை வெல்வது என்பது அத்தனை எளிதல்ல என்று நினைத்த பிரலம்பாசுரன் பலராமருடன் போட்டியிட்டு அவரால் தோற்கடிக்கப்பட்டான். பகவான் பலராமர் தனது தோள்களில் சுமந்து கொண்டு பிரலம்பாசுரன் மிகவும் வேகமாக நடக்கத் தொடங்கினான். ஆனால் பலராமர் சுமேரு மலையைப் போல் மிகவும் கனமாக இருந்தார், அதனால் அவரைச் சுமப்பது பிர வம்பாசுரனுக்கு மிகவும் சிரமமாக இருந்ததினால் அவன் தனது உண் மையான அசுர வடிவத்தினை எடுத்தான். இதனைக் கண்ட பலராமர் அசுரனது தலையில் தன் முஷ்டியினால் குத்தினார். அக்குத்தானது தேவேந்திரன் ஏவப்பட்ட வஜ்ராயுதம் மலைகளை உடைத்து நொறுக்கியது போல், பிரலம்பாசுரனின் தலையினை நொறுங்கச் செய்தது. அதனால் அவ்வசுரன் நிலத்தில் வீழ்ந்து இரத்தம் கக்கி மடிந்தான். பகவான் பலராமர் நலமாகத் திரும்பி வருவதைக் கண்ட ஆயர்குலச் சிறுவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் அவரைக் கட்டித் தழுவிக் கொண் டனர். வானத்தில் இருந்து தேவர்கள் அவர் மீது மலர்மாரி பொழிந்து அவரை வாழ்த்தினர்
கதையின் நீதி
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பிரலம்பாசுரன் நம் இதயத்தில் இருக்கும் காம இச்சைகளையும், பெயர் மற்றும் புகழுக்காக ஏங்கும் குணங்களையும் வெளிப்படுத்துவதாக பக்திவினோத தாகூர் குறிப்பிடுகிறார். பிரலம்பாசுரன் எப்படி ஆரம்பத்தில் நண்பனாக வேடமணிந்து கொண்டானோ, அதுபோல காம இச்சைகளும் ஆரம்பத்தில் அமிர்தமாகத் தோன்றி, பிறகு இறுதியில் விஷமாக மாறிவிடுகின்றன.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment