ஷுசௌ தேஷே ப்ரதிஷ்டாப்ய
ஸ்தி ரம் ஆஸனம் ஆத்மன:
நாத்-யுச்சரிதம் நாதி-நீசம்
சைலாஜின-குஷோத்தரம்
தத்ரைகாக்ரம் மன: க்ருத்வா
யத-சித்தேந்த்ரிய-க்ரிய:
உபவிஷ்யாஸனே புஞ்ஜ்யாத்
யோகம்-ஆத்ம-விஷுத்தயே
மொழிபெயர்ப்பு
******************
யோகத்தைப் பயில, தனிமையான இடத்திற்குச் சென்று, நிலத்தில் தர்பைப்புல்லைப் பரப்பி, அதனை மான் தோலாலும் மென்மையான துணியினாலும் மறைக்க வேண்டும். இந்த ஆசனம் மிக உயரகமாவோ, தாழ்வாகவோ இல்லாமல் புனிதமான இடத்தில் அமைந்திருக்க வேண்டும். பின்னர், இதன்மேல் ஸ்திரமாக அமர்ந்து, மனம், புலன்கள் மற்றும் செயல்களைக் கட்டுப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்தி, இதயத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக யோகியானவன் யோகத்தைப் பயில வேண்டும்.
பொருளுரை
******************
"புனிதமான இடம்" என்பது புண்ணிய யாத்திரைத் தலங்களைக் குறிக்கின்றது. இந்தியாவில் யோகிகள் அனைவரும் (ஆன்மீகர்களும் பக்தர்களும்) வீட்டை விட்டு வெளியேறி, கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதிகள் ஓடும் பிரயாகை, மதுரா, விருந்தாவனம், ரிஷிகேஷ், ஹரித்வார் போன்ற புனிதத் தலங்களை அடைந்து, தனிமையில் யோகத்தைப் பயில்கின்றனர். ஆனால் இஃது அனைவருக்கும் சாத்தியமானதல்ல. குறிப்பாக மேலை நாட்டினருக்கு. மாநகரங்களில் இயங்கும் பெயரளவிலான யோகா மையங்கள், பௌதிக இலாபத்தைப் சேர்ப்பதில் வேண்டுமானால் வெற்றி பெலாமே தவிர, உண்மையான யோகப் பயிற்சிக்கு சற்றும் தகுதியற்றவை. தொல்லையிலிருந்து விடுபட்ட மனமும் தன்னடக்கமும் இல்லாத நபர் தியானத்தைப் பயில முடியாது. மேலும், தற்போதைய கலி யுகத்தில், மக்கள் குறைந்த ஆயுளுடனும், ஆன்மீகத்தில் நாட்டமில்லாமலும், எப்போதும் பற்பல கவலைகளுடனும் வாழ்கின்றனர். எனவேதான், ப்ருஹன்-நாரதீய புராணத்தில், ஆன்மீகத்தை உணர்வதற்கான ஒரே வழி இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பதே என்று கூறப்பட்டுள்ளது.
ஹரேர் நாம ஹரேர் நாம
ஹரேர் நாமைவ கேவலம்
கலௌ நாஸ்த்-யேவ நாஸ்த்-யேவ
நாஸ்த்-யேவ கதிர் அன்யதா
"போலித்தனமும், சச்சரவும் நிறைந்த இக்கலி யுகத்தில், விடுதலைக்கான ஒரே வழி இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பதே. இதைத் தவிர வேறு கதியில்லை, வேறு கதியில்லை, வேறு கதியில்லை."
(பகவத் கீதை உண்மையுருவில் / அத்தியாயம் ஆறு / பதங்கள் 11-12)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment