🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
யுதிஷ்டிர மஹராஜாவும் ஸ்வபஜா வால்மிகா என்ற ஸாதுவும்
( இந்த கதையானது ஜைமினி ரிஷி எழுதிய மஹாபாரதத்தில் உள்ளதாகும்)
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ராஜஸுய யாகம் நிறைவடைந்த பிறகு மஹாராஜா யுதிஷ்டிரர் பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு விதமான தானங்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தார். பிறகு அவர் பகவான் கிருஷ்ணரிடம் எனது சேவையில் அனைத்து பிராமணர்களும் வைஷ்ணவர்களும் திருப்தியடைந்தனரா என்பதை எவ்வாறு நான் அறிந்து கொள்வது என்று வினவினார். அதற்கு கருணையுள்ள பகவான், அவருடைய சங்கை ஒரு இடத்தில் வைத்து பின் கூறினார். விருந்தினர் அனைவரும் திருப்தியடைந்தனர் என்றால் இந்த சங்கு தானாகவே முழங்கும் என்றார். மஹராஜா யுதிஷ்டிரர் எல்லா பிராமண மற்றும் வைஷ்ணவ விருந்தினர்களுக்கும் மிகுந்த அக்கறையுடன் சேவைகள் செய்தார். ஆனால் முடிவில் அந்த சங்கானது முழங்கவில்லை. இதனால் மன்னர் என்ன தவறு நடந்திருக்கும் என்பதை அறிய விரும்பி பகவான் கிருஷ்ணரின் உதவியை பணிவுடன் வேண்டினாார். அதற்கு பகவான், நகருக்கு அப்பால் ஸ்வபஜா வால்மிகா என்ற மிகவும் பணிவான பக்தர் ஒருவர் வாழ்கிறார். அவர் தாழ்ந்த குலத்தை சேர்ந்தவர், இந்த ராஜஸுய யாகத்தில் அவர் முறையாக கவனிக்கப் படவில்லை என்றார். உடனே யுதிஷ்டிரர் பீமன் மற்றும் அர்ஜுனனை அனுப்பி அந்த பக்தரை உடனடியாகக் கண்டுபிடித்து நாளை அரண்மனைக்கு பிரசாதம் ஏற்பதற்கு அழைத்து வருமாறு கூறினார். பிறகு திரௌபதியிடம் வித விதமான பிரசாதங்களை உண்டாக்குமாறு கட்டளயிட்டார்.
பீமனும் அர்ஜுனனும் விரைவாகச் சென்று அவரைத் தேடினர். பின் தலைநகருக்கு வெளியே உள்ள வனத்தில் கண்டுபிடித்தனர். அவர் தீண்டத்தாகாத ஒரு கீழ் சாதி இனத்தவராவார். இரண்டு சகோதரர்களையும் கண்ட ஸ்வபஜா வால்மிகா உடனடியாகத் தனது பணிவான வணக்கங்களை அவர்களுக்கு அளித்தார். அவர் பிரார்த்தனைகள் செலுத்திவிட்டு அழுதபடியே கேட்டார், என்னை அரண்மனைக்கு அழைத்துச் செல்ல நீங்களே ஏன் வர வேண்டும், சேவகர்களை அனுப்பியிருக்காலேமே என்றார். ஆனாலும் மன்னரது சகோதரர்கள் இப்படி நேரடியாக வந்து சிரமம் மேற்கொண்டது அவ்வளவு சரியல்ல என்றார். பின் ஸ்வபஜா வால்மிகா அவர்களை வணங்கிவிட்டு அவர்களது உத்தரவிற்காக கூப்பிய கரங்களுடன் காத்திருந்தார்.
பீமன் கூறினார், நமது ஹஸ்தினாபுர சக்கரவர்த்தி அவர்கள் உங்களை நாளை பிரசாதம் ஏற்பதற்கு தாமதம் இன்றி அரண்மனைக்கு வருகை புரிய அழைப்பு விடுத்திருக்கின்றார் என்றார். பீமனின் இந்த வார்த்தையைக் கேட்டதும் ஸ்வபஜா வால்மிகா அழத் தொடங்கினார். அவர் கூறினார், என்னைப் போன்ற நபர் மன்னரின் அரண்மனையில் பிரசாதம் ஏற்பதென்பது எப்படி சாத்தியமாகும். பின் அவர், நான் ராஜஸுய யாகத்தின் போது அங்கு பிரசாதம் உண்டேன், அதாவது அங்கு பிரசாதம் ஏற்றபின் வீசப் பட்ட இலைகளிலிருந்த எல்லா வைஷ்ணவர்கள், பிராமணர்கள், முனிவர்கள் மற்றும் ரிஷிகளின் உச்சிஷ்டத்தை உண்டதை விபரமாக மிகவும் பணிவுடன் அவர்களிடம் கூறினார். அதில் அவர் மிகுந்த திருப்தியடைந்திருப்பதாக தெரிவித்துக் கொண்டு என்னை பிரசாதம் ஏற்க அரண்மனைக்கு அழைக்க வேண்டாம் என்றும் அதற்குத் தகுதியானவன் நான் அல்ல என்றும் பணிவோடு கேட்டுக் கொண்டார். எனினும் பீமசேனன் நாளை கண்டிப்பாக அரண்மனைக்கு வந்தேயாக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அடுத்த நாள் மிகுந்த பணிவோடும், பயத்தோடும் ஸ்வபஜா வால்மிகா அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். முதலில் தனது பணிவான வணக்கங்களை ராஜ குடும்ப அங்கத்தினர் அனைவருக்கும் அவர் செலுத்தினார். மஹாராஜா யுதிஷ்டிரர் அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று அவரது பாதங்களை கழுவ விரும்பினார். ஸாதுவான ஸ்வபஜா வால்மிகா மிகுதியான தர்ம சங்கடத்துடன் வேண்டாம் என்று மறுத்தார்.
இதற்கெல்லாம் நான் தகுதியானவனல்ல என்று கூறினார். பின் ஸ்வபஜா வால்மிகா அவரின் மிகவும் போற்றதக்க பரம புருஷ பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு மீண்டும் மீண்டும் தனது வந்தனங்களை தெரிவித்தார்.
பகவான் கிருஷ்ணரின் கூற்றிற்கிணங்க யுதிஷ்டிரர் பணிவான ஸாதுவான ஸ்வபஜா வால்மிகாவின் பாதங்களைக் கழுவினார். பின் அவர் அமர்வதற்கு நேர்த்தியான இருக்கை அளிக்கப்பட்டு பல விதமான பிரசாதங்கள் பரிமாறப்பட்டன. திரௌபதி தன் கையாலேயே விதவிதமான பதார்த்தங்களை சமைத்திருந்தாள். அத்தனை வகைகளும் ஸ்வபஜா வால்மிகாவின் முன் பரிமாறப்பட்டது. ஆனால் எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக ஸ்வபஜா வால்மிகா அனைத்து வகையான அதாவது இனிப்பு, துவர்ப்பு, கசப்பு என எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து பின் உண்ணத் துவங்கினார். இதை எல்லாம் பார்த்திருந்த திரௌபதி அவ்வளவாக மகிழ்ச்சியடையவில்லை. அவள் அதை சமைப்பதற்கு முழு நாளையும் செலவு செய்திருந்தாள், ஸ்வபஜா வால்மிகா ஒவ்வொரு பதார்த்தத்தையும் தனித்தனியாக சுவைப்பதற்குப் பதில் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து சாப்பிட்டார். இதைப் பார்த்த திரௌபதி இந்த சாதுவிற்கு நாகரீகமாக பிரசாதத்தை ஏற்க தெரியவில்லையே என்று எண்ணினாள்.
ஸாதுவான ஸ்வபஜா வால்மிகா உண்டு முடித்ததும் மஹாராஜா யுதிஷ்டிரர் அவருக்குப் போதுமான அளவு தானங்களை வழங்கி மரியாதையுடன் அனுப்பி வைத்தார். அவர் சென்ற பின்னும் சங்கு இன்னும் முழங்கவில்லை. பெரும் பதட்டத்திற்குள்ளான யுதிஷ்டிர மஹராஜா பகவான் ஶ்ரீ கிருஷ்ணரிடம் ஏன் இவ்வாறு நடந்தது என்று கேட்டார். அதற்கு பகவான், யாரோ ஒருவர் ஸ்வபஜா வால்மிகாவிற்கு குற்றமிழைத்திருக்கின்றார்கள் என்றார். எல்லோரும் இதைக் கேட்டு நிசப்தமானார்கள். பாண்டவர்கள் ஐந்து பேரும் கூறினார்கள், 'நாங்கள எந்த குற்றமும் இழைக்கவில்லை திரௌபதி அமைதியாக இருந்தாள். இறுதியில் அவள் கூறினாள், 'நான் மிகுந்த சிரமப்பட்டு சமைத்தேன், ஆனால் அந்த ஸ்வபஜா வால்மிகா ஒவ்வொரு பதார்த்தங்களை தனிதனியாக சுவைக்காமல் அணைத்தையும் ஒன்றாகப் பிசைந்து சாப்பிட்டார். இச்செயலால் நான் எனது மனதினால் அவரை தவறாக நினைத்தேன் என்றாள்.
பகவான் கிருஷ்ணர் கூறினார், அப்படியானால் அவரை திரும்பவும் அழைத்து ஏன் அவ்வாறு செய்தீர்கள், எங்களைப் போன்று ஏன் ஒவ்வொன்றையும் தனித் தனியாக உண்ணவில்லை என்று கேளுங்கள் என்றார். எனவே ஸ்வபஜா வால்மிகா மறுபடியும் அழைத்துவரப்பட்டார்.
மஹராஜா யுதிஷ்டிரர் அவரிடம் ஏன் நீங்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து உண்டீர்கள்? அவ்வாறு நீங்கள் உண்டதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா? என்று கேட்டார்.
அதற்கு ஸ்வபஜா வால்மிகா கைகளைக் கட்டிக்கொண்டே அவர்களுக்கு பதிலளித்தார். "பிரசாதம் என்பது பகவானின் கருணையாகும். ஏற்கனவே பகவானால் அது அனுபவிக்கப்பட்டு விட்டது. ஏனெனில் அவரே அனுபவிப்பாளர். நான் இல்லை, நான் அவரது சேவகன். அவர் ஏற்ற மிச்சத்தை நான் ஏற்பதில் மரியாதையுடனும், எந்த குற்றமும் இழைத்துவிடாமலிருப்பதில் கவனத்துடனும் இருந்தேன். அப்படி ஏற்கும் போது இது எனக்குப் பிடித்திருந்தது, இது பிடிக்கவில்லை என்று நான் அதை அனுபவித்து சொல்லக் கூடாது. ஏனெனில் நான் அனுபவிப்பாளன் அல்ல. உதாரணமாக இந்த சட்னி எனக்குப் பிடிக்கவில்லை என்றால் நான் அதை சாப்பிட மாட்டேன், அது போல இந்த இனிப்பு எனக்குப் பிடிக்கிறதென்றால் அதை நான் நிறைய சாப்பிடுவேன். இப்போது கூறுங்கள், நான் ஏதாவது தவறு இழைத்து விட்டேனா?. அவரின் இந்த பக்திப் பூர்வமான பதில் பாண்டவர்களின் கண்களைத் திறந்தது. மஹராஜா யுதிஷ்டிரர் மற்றும் திரௌபதி முதற்கொண்டு அனைவரும் தமது தவறுக்கு அவரிடம் மன்னிப்புக் கோரினர். அதற்குப் பிறகு அந்த சங்கானது மிகுந்த சப்தத்துடன் முழங்கி மன்னரின் யாகம் முழுமையான வெற்றியே என்பதை உறுதிப்படுத்தியது.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment