ஓஹே, வைஷ்ணவ தாகுர தோயார சாகர
(அருளியவர் :- ஶ்ரீல பக்தி வினோத தாகூர்)
🔅🔅🔅🔅🔅🔅
(1)
ஓஹே வைஷ்ணவ தாகுர தோயார சாகர
ஏ தாஸே கோருணா கோரி
தியா-பத-சாயா சோதோ ஹே ஆமாயா
தோமார சரண தோரி
மொழிபெயர்ப்பு
(1) பெருமதிப்பிற்குரிய வைஷ்ணவ தாகூரே, கருணையின் கடலே, என் மீது கருணைக் காட்டுவீராக. உமது திருவடி நிழலைக் கொண்டு இந்த சேவகனைத் தூய்மைப்படுத்துவீராக, நான் உமது திருவடிகளைப் பற்றிக் கொண்டுள்ளேன்.
(2)
சய பேக தோமி சய தோஷ சோதி
சய குண தேஹோ தாஸே
சய சத்-சங்க தேஹோ ஹே ஆமாரே
போசேசி சங்கேர ஆசே
மொழிபெயர்ப்பு
உமது தாஸனான எனது ஆறு உந்துதல்களைக் * கட்டுப்படுத்தி, ஆறு தவறுகளைத் தூய்மைப்படுத்தி, ஆறு நற்குணங்களை* எனக்கு அளிப்பீராக. ஆறு விதமான சத்சங்கத்தினையும் எனக்கு அளிப்பீராக. உமது சங்கத்தைப் பெறும் நோக்கத்துடன் நான் இங்கு அமர்ந்துள்ளேன்.
(3)
ஏகாகி ஆமார, நாஹி பாய பல
ஹரி நாம சங்கீர்தன
துமி கிருபா கோரி ஷ்ரத்தா பிந்து தியா
தேஹோ கிருஷ்ண நாம தனே
மொழிபெயர்ப்பு
தனிமையில் ஹரி நாம ஸங்கீர்த்தனம் புரிய எனக்கு பலமில்லை. எனவே, ஒரு துளி நம்பிக்கையை வழங்கி, கிருஷ்ண நாமம் என்னும் பெரும் செல்வத்தை எனக்கு கருணையுடன் வழங்குங்கள்.
(4)
கிருஷ்ண சே தோமார, கிருஷ்ண திதே பாரே
தோமார சகதி அசே
ஆமி தோ காங்கல, கிருஷ்ண கிருஷ்ண போலி
தா தவ பாசே பாசே
மொழிபெயர்ப்பு
கிருஷ்ணர் தங்களுடையவர், அவரை என்னிடம் தருவதற்கான சக்தி தங்களிடம் உள்ளது; நானோ இழிவடைந்தவன். எனவே, "கிருஷ்ண! கிருஷ்ண!" என்று கூவிய வண்ணம் தங்களது பின்னால் ஓடி வருகின்றேன்.
பதம் 2 குறிப்பிட்டுள்ள
1) ஆறு உந்துதல்கள்
2) ஆறு தவறுகள்
3) ஆறு நற்குணங்கள்
4)ஆறு விதமான சத்சங்கம்
விரிவான விளக்கம் 👇
🌼🌼🌼🌼🌼🌼
*ஆறு உந்துதல்கள்: பேச்சு, மனம், கோபம், நாக்கு, வயிறு, பாலுறுப்பு ஆகியவற்றின் தூண்டுதல்கள்.
ஆறு தவறுகள்: தேவைக்கு அதிகமாக உண்ணுதல் அல்லது செல்வம் சேகரித்தல், பௌதிக நன்மைக்காக பெருமுயற்சி செய்தல், பௌதிக விஷயங்களைப் பற்றிய தேவையற்ற பேச்சு, சாஸ்திர நியமங்களில் அதிக பற்றுதல் கொண்டிருத்தல் அல்லது அவற்றைப் புறக்கணித்தல், உலக வாழ்வில் விருப்பம் கொண்டுள்ள நபர்களுடன் சங்கம் கொள்ளுதல், மற்றும் பௌதிகப் பொருட்களுக்கான பேராசை.
ஆறு நற்குணங்கள்: உற்சாகம், பொறுமை, நம்பிக்கை, பக்தித் தொண்டிற்கு சாதகமான செயல்களைச் செய்வதில் உறுதி, அபக்தர்களின் சங்கத்தைத் துறப்பதில் திடமான நிலை, மற்றும் பூர்வீக ஆச்சாரியர்களின் அடிச்சுவடுகளை எப்போதும் பின்பற்றுவதற்குத் தேவையான ஒழுக்கம்.
5 ஆறு சத்சங்கம்: அன்பளிப்புகளை வழங்குதல், அன்பளிப்புகளைப் பெறுதல், பக்தித் தொண்டுகுறித்த இரகசியமான வினாக்களை எழுப்புதல். இரகசியமான கருத்துக்களைப் பகிருதல், பிரசாதம் ஏற்றல், மற்றும் பிரசாதம் வழங்குதல்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment