அரிஷ்டாசுரன்

 


அரிஷ்டாசுரன்

ஆதாரம் :- கர்க சம்ஹிதை


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஒருநாள் கோப பாலர்களிடையே பலசாலியான அரிஷ்டாசுரன் வந்தான் பூமியையும் ஆகாயத்தையும் எதிரொலிக்கச் செய்தான். கொம்புகளால் மலைத் தடவரைகளைப் பிளந்து கொண்டு வந்தான். அவனைக் கண்டதுமே கோப கோபியர் பயத்தால் இங்குமங்கும் ஓடலாயினர். அசுரர்களை அழிக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களுக்கு பயப்பட வேண்டாம் என்று கூறி அபயமளித்தான். மாதவன் அதன் கொம்புளைப் பிடித்து பின்னால் (இடித்துத்) தள்ளினான். அந்த அரக்கனும் ஸ்ரீ கிருஷ்ணனை இரண்டு யோஜனை தூரம்  தள்ளிவிட்டான் .கிருஷ்ணர் அவனுடைய வாலைப்பற்றி வாயு வேகத்தில் சுழற்றி, ஒரு குழந்தை கமண்டலுவை வீசி எறிவது போல பூமியில் அறைந்தார். 


அரிஷ்டாசுரன் மறுபடி எழுந்தான். கோபத்தால் அவன் கண்கள் சிவந்தன. அந்த மகா துஷ்ட வீரன் கொம்புகளால் சிவப்புப் பாறைகளை வேரோடு பெயர்த்து மேகத்தைப் போல கர்ஜித்தபடி ஸ்ரீ கிருஷ்ணனின் மீது விசினான். ஸ்ரீ கிருஷ்ணன் அந்தப் பாறையைப் பிடித்து திருப்பி அவன்மீதே அடித்தார். அந்த அடியில் அவன் சிறிது வியாகூலமடைந்தான். அவன் தன் கொம்புகளின் முன்பாகத்தால் பூமியை அடிக்க, அதனால் பூமியிலிருந்து நீர் கிளம்பலாயிற்று.ஸ்ரீ கிருஷ்ணன் அவனது கொம்புகளைப் பற்றி பலமுறை சுழற்றி காற்று தாமரையைத் தூக்கி எறிவதுபோல பூமியில் ஓங்கி அறைந்தார். உடனே அவன் காளை ரூபத்தை விட்டுவிட்டு பிராமண சரீரதாரியாகி ஸ்ரீகிருஷ்ணனின் திருவடித் தாமரைகளைப் பணிந்து குரல் தழுதழுக்க கூறினார்.  'பகவனே! நான் பிரகஸ்பதியின் சீடனான  வரதந்து எனும் பிராம்மணனாவேன். நான் பிருகஸ்பதியிடம் படிக்கச் சென்றிருந்தேன். அப்போது அவரை நோக்கி, கால்களைப் பரப்பிக்கொண்டு அவருக்கு எதிரே உட்கார்ந்து கொண்டேன். அதனால் அவர் கோபத்தில் நீ என் எதிரில் (கால்களைப் பரப்பி) காளையைப் போல் உட்கார்ந்திருக்கிறாய் இது குருவை அவமதிப்பதாகும். ஆகவே மூடா நீ காளையாகு என்று கூறினார். மாதவா அந்த சாபத்தால் நான் வங்கதேசத்தில் காளையாகிவிட்டேன். அசுரர்களின் சங்கத்தில் இருந்ததால் என்னிடம் அசுரத்வம் உண்டாகிவிட்டது. உங்கள் கருணையால் இப்போது நான் சாபத்திலிருந்தும், அசுர பாவத்தினின்றும் விடுபட்டேன். ஸ்ரீ கிருஷ்ணா, உங்களுக்கு நமஸ்காரம். பகவான் வாசுதேவனான தங்களை வணங்குகிறேன். பணிபவரின் துயர்தீர்கும் கோவிந்ததேவா தங்களுக்கு வணக்கம்.  இவ்வாறு கூறி பகவானை வணங்கி பிருகஸ்பதியின் சாக்ஷாத் சீடனான வரதந்து உலகை ஒளிரச் செய்தபடி வந்த விமானத்தில் ஏறி திவ்யலோகம் சென்றுவிட்டார். இந்த அரிஷ்டாசுரன் வதத்தை படிப்பவர்களின் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுவதாகும்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more