அர்சா-விக்ரஹ அவதாரம்

 


பக்தி யோகி, கிருஷ்ணரது விக்ரஹத்தினை வழிபாட்டிற்குரியதாக ஏற்கிறான், அதன் மூலம், உடல் சார்ந்த எண்ணங்களை மனதில் தாங்கியுள்ள மனிதனும் ஆன்மீகத்தில் ஈடுபட முடியும். பரம புருஷ பகவானை அவரது ரூபத்தின் மூலம் கோவிலில் வழிபடுவது சிலையை வழிபடுவதாகாது. ஸகுண வழிபாடு (பரமனை குணங்களுடன் வழிபடுதல்), நிர்குண வழிபாடு (குணங்களற்ற பரமனை வழிபடுதல்) ஆகிய இரண்டிற்குமான ஆதாரங்கள் வேத இலக்கியங்களில் உள்ளன. ஆலயத்திற்குள் விக்ரஹத்தை வழிபடுதல் ஸகுண வழிபாடாகும், ஏனெனில், பகவான் பௌதிக குணங்களின் மூலம் அங்கே தோற்றமளிக்கின்றார். கல், மரம் அல்லது ஓவியம் போன்ற பௌதிக குணங்களின் மூலம் தோற்றமளிக்கும் போதிலும், பகவானது ரூபம் உண்மையில் பொளதிகமல்ல. இது பரம புருஷரின் பூரண தன்மையாகும்.

பண்படாத உதாரணம் ஒன்று இங்கு கொடுக்கப்படலாம். தெருவிலே நாம் சில தபால் பெட்டிகளை பார்க்கிறோம். நமது கடிதங்களை அந்தப் பெட்டிகளில் இட்டால், அவை செல்ல வேண்டிய இடத்திற்கு எவ்விதமான சிரமமும் இன்றி இயற்கையாகவே செல்கின்றன. ஆனால் ஏதாவதோரு பழைய பெட்டியிலோ, அஞ்சலகத்தால் வைக்கப்படாத ஒரு போலிப் பெட்டியிலோ நமது கடிதத்தை இட்டால், அது போய் சேராது. அது போலவே அர்சா-விக்ரஹம் இறைவனது அதிகாரப்பூர்வமான தோற்றமாகும். இந்த அர்சா-விக்ரஹம் பரம புருஷருடைய ஓர் அவதாரம். இவ்வுருவத்தின் மூலமாக இறைவன் சேவையை ஏற்றுக்கொள்கிறார். அவர் சர்வ சக்திமான், அனைத்து சக்திகளும் உடையவர்; எனவே, கட்டுண்ட வாழ்விலிருக்கும் மனிதனின் வசதிக்காக, அவர் தனது அர்சா-விக்ரஹ அவதாரத்தின் மூலம் பக்தனுடைய சேவைகளை ஏற்றுக்கொள்கிறார்.

எனவே, பக்தனைப் பொறுத்தவரையில், பகவானை நேரடியாகவும் உடனடியாகவும் அணுகுவதில் சிரமம் ஏதும் இல்லை, ஆனால் ஆன்மீகத் தன்னுணர்விற்காக அருவத் தன்மையை பின்பற்றுபவர்களது வழி மிகவும் சிரமமானதாகும். அத்தகையோர் உபநிஷத்துகள் போன்ற வேத இலக்கியங்களின் மூலமாக பரமனின் தோன்றாத தன்மையினைப் புரிந்துகொள்ள வேண்டும், வேத மொழியினைக் கற்று எல்லையற்ற உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்—மேலும், இவையனைத்தையும் உணரவும் வேண்டும். இது சாதாரண மனிதனுக்கு அவ்வளவு சுலபமானது அல்ல. மாறாக, கிருஷ்ண உணர்வில் இருப்பவன், அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவின் வழிகாட்டுதலைப் பின்பற்றுதல், விக்ரஹத்தினை நெறிப்படி வழிபடுதல், இறைவனது பெருமைகளைக் கேட்டல், இறைவனுக்குப் படைக்கப்பட்ட உணவுப் பொருள்களை பிரசாதமாக உண்ணுதல் போன்ற எளிமையான வழிமுறைகளின் மூலம் பக்தித் தொண்டில் ஈடுபட்டு பரம புருஷ பகவானை மிகவும் சுலபமாக உணர்ந்து கொள்கிறான்

( பொருளுரை / பகவத் கீதை உண்மையுருவில் / அத்தியாயம் பன்னிரண்டு / பதம் 5)


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami


Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more