அகாசுரன் முற்பிறவி

 




அகாசுரன் முற்பிறவி


ஆதாரம் :- கர்க சம்ஹிதை


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஸ்ரீ நாரதர் கூறுகினார் 'அரசே ஒருநாள் ஆயர்ச் சிறுவருடன் கன்றுகளை மேய்த்தவாறு காளிந்தியின் கரையருகே ஒரு அழகான இடத்தில் ஸ்ரீ ஹரி குழந்தைகளுக்கு உரியதான விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருந்தார். அச்சமயம் அகாசுரன் என்னும் பெரிய அசுரன்  தன் உருவத்தை (பாம்பு போல்) தரித்து பயங்கரமான வாயைத் திறந்து வைத்துக்கொண்டு வழியில் இருந்தான். தூரத்திலிருந்து ஏதோ மலை குகை என்று எண்ணும்படி காட்சியளித்தது. வ்ருந்தாவனத்தில் அதைக்கண்ட கோப பாலர்கள் கைதட்டியவாறு கன்றுகளோடு அதன் வாயினுள் புகுந்து விட்டனர். அவர்களனைவரின் பாதுகாப்பிற்க்காக பலராமருடன் ஶ்ரீ கிருஷ்ணரும் அகாசுரனது வாயில் புகுந்து விட்டார்.



சர்ப்பரூபம் தரித்த அந்த அசுரன் கன்றுகளையும் ஆயர்ச் சிறுவரையும் விழுங்கிவிட தேவர்களிடையே ஹாஹாகாரம் (உரத்த கோலாஹல ஒலி) எழுந்தது. அசுரர்கள் மகிழ்ச்சியுற்றனர். அச்சமயம் ஸ்ரீ கிருஷ்ணன் அகாசுரன் வயிற்றில் தனது விராட் ஸ்வரூபத்தைப் பெருக்கலானார். இதனால் அகாசுரன் ப்ராணன் தடுக்கப்பட்டு, அதன் தலையைப் பிளந்து கொண்டு வெளியேறியது. மிதிலை மன்னா, பின் பாலகர்களுடனும் கன்றுகளுடனும் ஸ்ரீ கிருஷ்ணன் அகாசுரன் வாயிலிருந்து வெளியே வந்தார். இறந்த சிறுவர்களையும் கன்றுகளையும் மாதவன் தனது அருட் பார்வையால் கடாக்ஷித்து உயிர்பெறச் செய்தார். அகாசுரனின் ஜீவன் கருமேகத்தில் மின்னல் நுழைவதைப்போல கனஷ்யாமரின் தாமரை பாதத்தில் புகுந்துவிட்டது. மன்னா, தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். தேவரிஷி நாரதர் மூலம் இந்தக் கதையைக் கேட்ட மிதிலை மன்னன் " பகவான் ஸ்ரீகிருஷ்ணனோடு லயித்த இந்த அசுரன் முற்பிறவியில் யாராக இருந்தான் ?  இந்த அசுரன் பகைமை கொண்டதன் காரணமாக சீக்கிரமே ஸ்ரீ ஹரியை அடைந்தது எவ்வளவு வியப்பிற்குரிய விஷயம்  என்று ஆச்சரியம் அடைந்தார்.



ஸ்ரீ நாரதர் கூறினார்: 'அரசே! சங்காசுரனுக்கு அகன் என்ற பெயர்பெற்ற மகன் இருந்தான். அவன் வாலிபத்தில் மிக அழகாக இருந்ததால் இன்னொரு காம தேவன் என்று கூறும்படி திகழ்ந்தான். ஒருநாள் மலைய பர்வதம் செல்லும் அஷ்டாவக்ர முனிவரைக் கண்ட அகாசுரன் பலமாகச் சிரித்து, 'இது என்ன குரூபம்' என்று கேலி செய்தான்.. முனிவர் அந்த துஷ்டனுக்குச் சாபமளித்து தீயவனே, நீ பாம்பாகிவிடு. ஏனென்றால் பூமண்டலத்தில் சர்ப்பஜாதி விகாரமானதும் கோணலாகச் செல்வதாகவும் உள்ளது என்று கூறினார். அதைக்கேட்ட அசுரனின் ஆணவம் கரைந்துவிட்டது முனிவரின் திருவடியில் விழுந்துவிட்டான். அவனை அந்த வருந்தத்தக்க நிலையில் கண்ட முனிவர் மகிழ்ந்து வரமளித்தபடி கூறினார். 'கோடிக்கணக்கான மன்மதர்களைக் காட்டிலும் அதிக அழகனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உன் வயிற்றில் பிரவேசிக்கும்போது இந்த சர்ப்ப ரூபத்திலிருந்து உனக்கு விடுதலை கிடைக்கும் . என்று வரமளித்தார்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more