ஶ்ரீநிவாச ஆச்சாரியர்
வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
வாஞ்சா கல்பதருப யஷ் ச க்ருபா ஸிந்துப்ய ஏவ ச
பதிதானாம் பாவனேப்யோ வைஷ்ணவேப்யோ நமோ நம:
நிலையிழந்த ஆத்மாக்களிடம் கருணை மிக்கவர்களும், கற்பக விருட்சங்களைப் போன்று எல்லோரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்பவகர்களுமான பகவானின் வைஷ்ணவ பக்தர்கள் அனைவருக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்.
கதாதர பட்டாச்சாரியர் ஸ்ரீனிவாச ஆச்சாரியாரின் தந்தை
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
கதாதர பட்டாச்சாரியாரரும் அவரது மனைவி லட்சுமி ப்ரியாவும் "நிமாய் பண்டிட்" - பகவான் ஸ்ரீசைதன்ய மஹாபிரபு வின் மிகச் சிறந்த பக்தர்கள் ஆவர். ஒருமுறை கதாதர பட்டாச்சாரியார் பகவான் சைதன்யரை தரிசனம் செய்வதற்காக அவரது கிராமத்தை விட்டு மாயாப்பூருக்குச் செல்ல முடிவு செய்தார். அவ்வாறு செல்கையில் தனது நெருங்கிய நண்பர் கேஷவ பாரதி வசிக்கும் கட்வா என்ற சிறிய கிராமத்திற்கு சென்று பின் தன் பயணத்தை தொடரலாம் என்று திட்டமிட்டிருந்தார். அப்போது அவர் செல்லும் அதே வழியில் ஆயிரக்கணக்கான மக்கள் செல்வதைக் கண்டார்.
எனவே அவர் "நீங்கள் எல்லோரும் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்" என்று கேட்டார். அதற்கு அவர்கள் "நாங்கள் நிமாய் பண்டிதரை தரிசிப்பதற்காக கட்வாவிற்குச் சென்று கொண்டிருக்கிறோம்" என்று கூறினர். இதைக் கேட்டு கதாதர பட்டாச்சாரியார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இப்போது அவர் மாயாப்பூருக்கு செல்ல வேண்டியது இல்லை. தான் சென்று சேரும் இடமான கேசவ பாரதியின் வீட்டில் நிமாய் பண்டிதர் தங்கியிருப்பதை கேட்கும்போது அவருக்கு சந்தோஷம் மேலும் மேலும் அதிகரித்தது.
நிமாய் பண்டிட் சன்யாசம் ஏற்றல்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
கிராமத்தை அடைந்ததும் அங்கிருந்த மக்கள் அனைவரும் அழுது கொண்டிருப்பதைக் கண்டார். காரணத்தை வினவியபோது அவர்கள் தங்களுக்கு மிகவும் பிரியமான நிமாய், கேசவ பாரதியிடமிருந்து சந்நியாசம் ஏற்றிருப்பதாகக் கூறினர். சந்நியாசம் என்பது இவ்வுலக வசதிகள் அனைத்தையும் கைவிடுவது என்பதாகும். இதைக்கேட்ட கதாதர பட்டாச்சாரியார் சோகத்தில் ஆழ்ந்தார்.
அந்த கிராமத்தில் முடி திருத்துபவர் நிமாய் பண்டிதரின் சிரசில் உள்ள அழகான சுருட்டை சுருட்டையான முடிகளை சவரம் கொண்டிருப்பதைப் பார்த்தார். மழித்து முடித்ததும் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அவன் சத்தமாக அழுது கொண்டு கண்களிலுள்ள கண்ணீர் அவனது கன்னங்களில் வழிந்தோட முடி திருத்துபவற்றை கீழே எறிந்துவிட்டு, "இனிமேல் யாருக்கும் நான் சவரம் செய்யப்போவதில்லை" என்று சபதம் செய்தான். உலகியல் விஷயங்களை கைவிடுவதாக நிமாய் பண்டிதர் எடுத்த சபதம் அவரது பக்தர்களை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது. நீண்ட கறுத்த கேசத்துடன் கூடிய நிமாயை அவர்கள் மிகவும் விரும்பினார். சந்நியாசம் ஏற்று விட்டதால் நிமாய் இப்போது காட்டிற்குச் சென்று விடுவார் என்றும் மீண்டும் நாம் அவரை காண போவதில்லை என்றும் அவர்கள் நினைத்தார்கள். அந்த நாள் முதல் நிமாய் பண்டிதர் "ஸ்ரீகிருஷ்ண சைதன்யா" என்று அழைக்கப்பட்டார். அவரது ஆன்மீக குருவான கேசவ பாரதி அவர்கள் இந்த நாமத்தை அவருக்குச் சூட்டினார்.
சந்நியாசம் ஏற்ற பிறகு நிமாய் பண்டிதரைப் பார்த்த கங்காதர பட்டாச்சாரியார் அவரைச்சுற்றி சுற்றி நடனமாடினார். அங்கும் இங்கும் ஓடினார், சிலநேரங்களில் சிரித்தார், சில நேரங்களில் அழுதார். எப்பொழுதும் அவர் 'கிருஷ்ண சைதன்ய' 'கிருஷ்ண சைதன்ய' என்று நாம உச்சாடனம் செய்தார். கிராமத்திற்கு திரும்பிய கங்காதர பட்டாச்சாரியாரை கிராமவாசிகள் அனைவரும் இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைத்து அவரை சைத்தன்ய தாஸ் என்று அழைத்தனர். சைதன்ய மகாபிரபு மீது உள்ள அன்பினால்தான் இவர் பைத்தியம் ஆகி விட்டார் என்று அவர்களுக்குத்தெரியும். விரைவில் கங்காதர பட்டாச்சாரியாரின் மனைவி ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு "ஸ்ரீனிவாஸ்" என்ற திருநாமத்தைச் சூட்டினர். அக்குழந்தை ஸ்ரீமதி ராதாராணியைப் போல் மிகவும் அழகாக இருந்தது. அவரது மேனியின் நிறம் உருக்கிய பொன் நிறத்தைப் போன்றிருந்தது. ஒரு சிறந்த மகாபுருஷருகான அனைத்து அடையாளங்களும் நிரம்பப் பெற்றிருந்தார். அவரது மார்பு விரிந்தும் கைகள் முழங்கால்களைத் தொட்டுக் கொணடுமிருந்தது. அவர் சைதன்ய மகாபிரபுவின் ஆற்றலின் அம்சம் அதாவது "கௌர சக்தியின் அவதாரம்" என்று கூறப்படுகிறது. அவர் தனது அன்பான பெற்றோர்களால் மிகக்கவனமாக வளர்க்கப்பட்டார். எல்லா நேரங்களிலும் மகா பிரபுவின் கதைகளைச் சொல்லியே வளர்த்தனர் . இதனால் அவர் வளர்கையில் அவருடைய ஒரே விருப்பம் மஹா பிரபுவை சந்திக்க வேண்டும் என்பதே.
ஜெகநாத் பூரிக்குச் செல்லுதல்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஸ்ரீநிவாசரின் இளமை பருவத்திலேயே அவரது தந்தையான கங்காதர பட்டாச்சாரியார் மறைந்தார். அவர் தனது 14ம் வயதில் ஜெகநாத் பூரிக்குச் சென்று ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவை சந்திப்பதற்கான அனுமதியை தன் தாயிடமிருந்து பெற்றார். அவ்வாறு செல்லும் வழியில் ஜெகன்னாத் பூரியில் இருந்து பிராமணர்கள் சிலர் வந்து கொணடிருந்தனர்.
அவர்களில் ஒருவரிடம், ' சைதன்ய மஹாபிரபு எப்படி இருக்கிறார்' என்று கேட்டார். அதற்கு அந்த பிராமணர் வருத்தம் தோய்ந்த கண்களுடன் மிகவும் பயங்கரமான அந்த செய்தியைக் கூறினார். பகவான் சைதன்யர் தனது லீலைகளை முடித்து விட்டு தனது நித்திய லோகத்திற்கு சென்று விட்டதாகக் கூறினார். இதனால் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளான ஸ்ரீநிவாசர் உடனே மயங்கி சரிந்தார். இவர் பகவானின் மிகச் சிறந்த பக்தர் என்பதை இந்த பிராமணர்கள் புரிந்துகொண்டனர். எனவே அவரை மிகுந்த மரியாதையுடன் கவனித்து சிகிச்சை அளித்தனர். அவர் எழுந்ததும் மீண்டும், பகவான் நம்மை விட்டுப் போய்விட்டாரே என்று நினைத்து அழுதார். கடைசிவரையில் மகாபிரபுவை சந்திக்க வேண்டும் என்ற அவரது மிகச்சிறந்த ஆசை நிறைவேறாமல் போனது. இனிமேல் நாம் வாழ்ந்து பிரயோஜனமில்லை என்று அவர் நினைத்தார். தான் இறந்து போக வேண்டும் என்று நினைத்தார். எனவே நிறைய விறகு கட்டைகளை சேகரித்து மிகப்பெரிய அளவில் அக்னி வளர்த்து அதில் இறங்க எத்தனித்த அந்த சமயத்தில் சைதன்ய மகாபிரபுவும் நித்யானந்த பிரபுவும் அவர் முன் தோன்றி அவரைத் தடுத்தனர். அவர்கள் ஸ்ரீனிவாசரிடம் "கவலை கொள்ள வேண்டாம்", "பௌதிகக் கண்களுக்கு நாங்கள் தெரியாவிட்டாலும் எப்பொழுதும் நாங்கள் உன்னுடனேயே இருப்போம் "என்று உறுதி அளித்தனர். மேலும் "ஜெகநாத் பூரியில் உள்ள அனைத்து பக்தர்களும் உனக்காக காத்திருக்கிறார்கள் அங்கு சென்று அவர்களது வழிகாட்டலின் கீழ் நீ இருப்பாயாக" என்றும் கூறினர். இறுதியாக பகவானைப் பார்க்கவேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறியது. எனவே அவரது இதயம் ஆனந்தத்தால் நிரம்பியது. இவ்வாறு அவர் ஜெகன்னாத் பூரிக்குத் திரும்பினார்.
கதாதர பண்டிதரை சந்தித்தல்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஜெகன்னாத் புரியை அடைந்ததும் ஸ்ரீனிவாசர் கதாதர பண்டிதரை ஸ்ரீ கோபிநாத் கோவிலில் சந்தித்தார். கதாதர பண்டிதர் மிகவும் பிரசித்தி பெற்றவர், ஏனென்றால் ஸ்ரீமத் பாகவதத்தை பல அழகான ராகங்களில் அவர் பாடுவார். இதை பகவான் சைதன்யர் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு மகிழ்வார்.
இதைக் கேள்வியுற்ற ஸ்ரீனிவாசர் கதாதரரிடமிருந்து ஸ்ரீமத் பாகவதத்தை கற்றுக் கொள்ள மிகவும் ஆர்வம் கொண்டார். ஆனால் கதாதரர் , "பகவான் சைதன்யர் இந்த உலகத்தை விட்டுச் சென்றுவிட்டார், இனிமேல் இனிமேல் என்னால் எதுவுமே செய்ய முடியாது" என்று கூறிவிட்டார். அவர் சைதன்ய மகாபிரபு வின் பிரிவுத் துயரால் மிகவும் வருந்திக் கொண்டிருந்தார். இதனால் அவர் எப்பொழுதும் அழுது கொண்டும் புலம்பிக் கொண்டும் இருந்தார். ஆனால் அவர் மிகுந்த கருணையுடன் தான் சொந்தமாக எழுதிய ஸ்ரீமத் பாகவதத்தின் ஒரு பிரதியை ஸ்ரீநிவாசரிடம் கொடுத்தார். அவை அனைத்தும் பனை ஓலைகளில் கையினால் எழுதப்பட்டவையாகும். அவற்றில் சில வாக்கியங்கள் அழிந்து போயிருந்தன. அதற்கு கதாதரர் சீனிவாசரிடம், " நானும் பகவான் சைதன்யரும் புனிதமான இந்த கிரந்தத்தை படிக்கும்போது பரவச மிகுதியினால் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழியம். அந்த கண்ணீர் துளிகள் இந்த வாக்கியங்களில் சிலவற்றை அழித்துவிட்டது" என்றார். மேலும் நீங்கள் வாங்கும் களத்திற்கு சென்று இந்தப் புத்தகத்திற்கான புதிய நகலை பாதுகாத்து வைக்கவேண்டும் என்று கூறினார்
அவர் வங்காளத்திற்கு செல்லும் முன் ஜெகன்னாத் புரியில் உள்ள சைதன்ய மஹாபிரபுவின் சகாக்களை சந்தித்தார். பின்னர் ஸ்ரீமத்பாகவதம் கிரந்த்தை எடுப்பதற்காக வங்காளத்திற்கு விரைந்தார். பின்னர் கதாதர பண்டிதரிடம் ஸ்ரீமத் பாகவதத்தை கற்க வேண்டும் என்பதற்காக ஜெகன்னாத் புரிக்கு வேகமாகத் திருப்பி வந்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் திரும்பி வருகையில் கதாதர பண்டிதர் இவ்வுலக லீலைகளை முடித்து விட்டு சென்று விட்டார் என்ற செய்தியை கேட்டார். ஆனால் மிகவும் கருணையுள்ள கதாதர பண்டிதர் தான் கைப்பட எழுதிய ஸ்ரீமத் பாகவதத்தை அவருக்கு கொடுத்துவிட்டு சென்றிருந்தார்.
ஸ்ரீநிவாசர் பெரும் துயரத்திற்கு ஆளானார். ஆனால் கதாதரர் பண்டிதர் அவரை ஒரு நோக்கத்திற்காக அனுப்பி இருப்பதை உணர்ந்தார். தாம் இவ்வுலகை விட்டுச் செல்ல ப் போவதை கதாதரப் ண்டிதர் அறிந்திருந்தார். ஆனால் அந்த நேரத்தில் அவர் மிகவும் நேசிக்கும் ஸ்ரீனிவாஸ் அவருடன் இருந்திருந்தால் அவரது இதையும் தாங்க முடியாத அளவுக்கு சோகத்தை அனுபவித்து இருக்கும்.
அதன்பிறகு கதாதர பண்டிதர் ஸ்ரீனிவாசரின் முன்பு தோன்றி, 'பயப்படாதே, நான் எப்போதும் உன்னுடனே இருப்பேன். நீ விருந்தாவனம் செல்ல வேண்டும் என்பது பகவானின் விருப்பம்." அங்கு சென்று ஸ்ரீல ரூப கோஸ்வாமி மற்றும் ஶ்ரீல ஸநாதன கோஸ்வாமிகளிடம் இருந்து சாஸ்திரங்களைப் படிப்பாயாக. அவர்கள் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் உனக்கு பயிற்சி அளிக்க வேண்டுமென்று அவர்களிடம் மஹாபிரபு நேரடியாக அறிவுறுத்தி இருக்கிறார். கால அவகாசம் இல்லையென்பதால் கதாதர பண்டிதர் ஸ்ரீனிவாசரை விருந்தாவனம் செல்ல அவசரப்படுத்தினார்.
விருந்தாவனம் செல்லும் வழியில்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஏற்கனவே கதாதர பண்டிதர் ஸ்ரீநிவாசரை விருந்தா வனத்திற்கு விரைந்து செல்லும்படி கூறியும், ஸ்ரீநிவாசர் வங்காளத்திற்குச் சென்று மஹாபிரபுவின் நெருங்கிய சகாக்கள் சிலரை சந்தித்தார் . ஸ்ரீனிவாசரை சந்தித்ததில் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அனைவரும் தங்களது ஆசீர்வாதங்களை அவருக்கு வழங்கினார்கள் . பின்னர் அவர் விருந்தாவனத்திற்கு விரைந்து சென்றார். ஆனால் மிகவும் தாமதமாக வந்து சேர்ந்தார். அவர் விருந்தாவனம் சென்று அடைவதற்கு சற்று முன்பே ஸ்ரீல சனாதன் கோஸ்வாமி 4 மாதத்திற்கு முன்பே இவ்வுலக லீலையை முடித்துச் சென்று விட்டார் என்ற செய்தியைக் கேட்டார். பின்னர் விருந்தாவனத்திற்கு அப்பாலுள்ள மதுராவைச் சென்றடையும் பொழுது அங்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஸ்ரீல ரூப கோஸ்வாமியும் இவ்வுலகை லீலைகளை முடித்து விட்டு சென்று விட்டார் என்ற செய்தியையும் கேட்டார்.
சிறுவனான ஸ்ரீநிவாசர் பைத்தியம் பிடித்தது போல் தரையில் விழுந்து அழுதான். இதையெல்லாம் பார்க்கும் போது அவருக்கு பல தடைகள் இருப்பதாக தோன்றியது. என்ன அவர் என்ன செய்தாலும் எ.ல்லாமே தோல்வியிலேயே முடிந்தது. அந்த சமயத்தில் ஸ்ரீனிவாசர் தான் இறந்து போக வேண்டும் என்று நினைத்தார். நினைத்த மாத்திரத்திலேயே சில ரேப கோஸ்வாமி மற்றும் ஸநாதன கோஸ்வாமியும் அவர் முன்பு தோன்றி, 'நீ விருந்தாவனத்திற்குச் சென்று .ஶ்ரீல கோபால பட்ட கோஸ்வாமி மற்றும் ஶ்ரீல ஜீவ கோஸ்வாமியின் அடைக்கலத்தை பெறுவாயாக"என்று கூறினர்
அவரது இரண்டு ஆன்மீக குருமார்களை சந்தித்தல்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
கோவிந்தஜி ஆலயத்தில் ஶ்ரீல ஜீவ கோஸ்வாமி அவர்கள் ஸ்ரீனிவாச ஆச்சாரியரை அன்புடன் வரவேற்றார். பின் இருவரும் சேர்ந்து தாமோதர ஆலயத்திற்குச் சென்றனர். அங்கு ஸ்ரீனிவாச ஆச்சாரியா கோபால பட்ட கோஸவாமிக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இறுதியாக ஸ்ரீனிவாச ஆச்சாரியர் இங்கு வருகை புரிந்ததால் இரண்டு கோஸ்வாமிகளும் மிகவும் மகிழ்ந்தனர். இவ்வாறாக ஸ்ரீமத் பாகவதத்தை படிப்பதற்காக ஶ்ரீல ஜீவ கோஸ்வாமி இடம் அனுப்பிவைக்கப்பட்ட கோபால பட்ட கோஸ்வாவாமி இடமிருந்து ஸ்ரீனிவாச ஆச்சாரியா தீட்சை பெற்றார். ஸ்ரீனிவாசா ஆச்சாரியர் நரோத்தமதாஸ் தாகூர் மற்றும ஷ்யாமானந்த பண்டிதரை சந்தித்தபொழுது அவர்கள் இருவரும் இவருக்கு மிக நெருக்கமான நண்பர்கள் ஆனார்கள்.
முதல் புத்தக விநியோகஸ்தர்கள்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஶ்ரீல ஜீவ கோஸ்வாமியின் இந்த மூன்று மாணவர்களும் மிகவும் கற்றறிந்தவர்கள் ஆகவும் கீழ்ப்படிதல் உள்ளவர்களாகவும் பணிவானவர்களாகவும் இருந்தனர். எனவே அவர்களுக்கென்று முக்கியமான சிறப்பான சேவைகள் வழங்கப்பட்டன. ஶ்ரீல ஜீவ கோஸ்வாமி அவர்களிடம் "விருந்தாவனத்து கோஸ்வாமிகளால் எழுதப்பட்ட இந்த புத்தகங்கள் அனைத்தையும் வங்காளத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். இதனால் அங்குள்ள பக்தர்கள் இதனை நகல் எடுத்து படித்து பயன் பெறுவார்கள்" என்றார். விலை மதிப்பற்ற இந்த புத்தகங்கள் மிகவும் கவனமாக அழகிய ஒரு மரத்தாலான ஒரு பெட்டியில் பாதுகாக்கப்பட்டு அதை ஒரு காளை வண்டியில் ஏற்றி, பத்து வலிமைமிக்க போர்வீரர்களால் கவனமாக பாதுகாக்கப்பட்டது. அவர்களது இந்த பயணம் நீண்ட மற்றும் மிகவும் பயங்கரமானதாக இருந்தது. கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், கொடிய மிருகங்களும் நிறைந்த காடுகளின் நடுவே அவர்களது பயணம் இருந்தது. இருப்பினும் ஶ்ரீ சைதன்ய மகாபிரபு வின் கருணையினால் அவர்களது பயணம் வங்காளத்தின் எல்லையை அடையும் வரை அனைத்தும் நன்றாகவே நடந்தது.
மன்னன் பிர்கம்பீர்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
வன விஷ்ணுபுருக்கு அருகிலுள்ள ஒரு நகரத்தை பிர்கம்பீர் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். அவர் ஒரு மிகப்பெரிய கொள்ளைக்காரர் மற்றும் ஒரு கொள்ளையர் குழுவை அவர் வழி நடத்தி வந்தார். அவ்வழியே செல்லும் பயணிகள் எவ்வளவு செல்வம் எடுத்துச் செல்கிறார்கள் என்பதை கணக்கிடக் கூடிய ஒரு நிபுணத்துவம் வாய்ந்த ஜோதிடரை அவர் தொடர்ந்து ஆலோசித்து வந்தார். ஜோதிடரின் சரியான கணிப்பின்படி மன்னன் தனது கொள்ளைக்காரர்களிடம் செல்வந்தர்களிடம் உள்ள செல்வங்களை கொள்ளை அடித்து வரும்படி கட்டளையிடுவான். இவ்விதமாக மன்னன் ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்து வந்தார்.
ஸ்ரீநிவாஸரும் அவரது சகாக்களும் அந்த ராஜ்ஜியத்தினுள்ள் நுழைந்த பொழுது அந்த ஜோதிடர் மன்னரிடம் " அவர்கள் விலைமதிப்பற்ற பல செல்வங்களை எடுத்து வருவதாகவும் அந்த செல்வங்களை எதனாலும் மதிப்பிடவே முடியாது என்றும் கணித்து கூறினார். மிகப்பெரிய அளவிலான செல்வங்கள் வந்திருப்பதால் தனது இன்பமும் விரிவடைய போகிறது என்று நினைத்த மன்னர் மகிழ்ச்சியடைந்தார். இதனால் மன்னன் தனது மிகவும் சாமர்த்தியமான கொள்ளையர்களிடம், "இன்றிரவு அங்கு செல்லுங்கள்!! அந்த பயணிகள் அயர்ந்து தூங்கும் போது அவர்களிடம் உள்ள விலைமதிப்பற்ற செல்வங்களைத் திருடி வாருங்கள்" என்று கட்டளையிட்டார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அந்த அழகிய மரத்தாலான பெட்டியை தூக்கிக்கொண்டு அவனது கொள்ளையர்கள் அரண்மனைக்கு திரும்பினார்கள். மன்னனும் பெட்டியை திறக்க ஆவலுடன் காத்திருந்தார். ஆனால் பெட்டியில் முழுவதுமாக நிரப்பப்பட்டு இருந்த புத்தகங்களை பார்த்த மன்னர் வெகுவாக ஏமாற்றம் அடைந்தார். அவர் ஆவலுடன் எதிர்பார்த்தது தங்கங்களையும் தங்க நகைகளையும் விலைமதிப்பற்ற கற்களையும் தான். புத்தகங்களை அல்ல. ஆனால் ஸ்ரீல ரூப கோஸ்வாமி அவர்களால் எழுதப்பட்ட அந்த அழகிய புத்தகங்களை மன்னன் தொட்டபோது அவருக்குள் ஒரு தாக்கம் ஏற்பட்டது. இந்தப் புத்தகங்கள் சாதாரண புத்தகங்கள் அல்ல , மிகவும் விசேஷமானது என்பதை அவர் புரிந்து கொண்டார். தான் அந்த புத்தகங்களை திருடியது மிகப் பெரிய குற்றம் என்று அவர் நினைத்தார்.
புத்தகங்களை பறிபோயின
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
இதற்கிடையில் பெரும் மனம் படைத்த அந்த பக்தர்கள் விழித்தெழுந்தார்கள். புத்தகங்கள் அனைத்தும் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். ஸ்ரீநிவாச ஆச்சாரியார் அழுதார். "எங்கே அந்தப் புத்தகங்கள்", " யார் அதை திருடினார்கள்", ஐயகோ!! "நாங்கள் என்ன செய்யப் போகிறோம்?" "விருந்தாவனத்து கோஸ்வாமிகள் எழுதிய அனைத்து விலைமதிப்பற்ற புத்தகங்களும் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தனவே, அவற்றை முறையாகப் பாதுகாக்கத் தவறி விட்டோமே " என்று புலம்பினார். தீவிரமாக புத்தகங்களைத் தேடிய பிறகு ஸ்ரீனிவாச ஆச்சார்யா தனது சகாக்களிடம் கெஞ்சி கேட்டார்.... " என் அன்பிற்கினிய ஷ்யாமானந்தா, நரோத்தமா, நீங்கள் இருவரும் வங்காளத்திற்கும் ஒரிசாவிற்கும் சென்று ஶ்ரீ சைதன்ய மகாபிரபுவின் செய்திகளை பிரச்சாரம் செய்யுங்கள். அதேநேரம் நான் இங்கு தேடலின் பணியைத் தொடர்கிறேன்". "என் அன்பான நண்பர்களே, நம் மூவரில் நானே மூத்தவன். இதனால் புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பை நானே ஏற்கிறேன் என்றார்".
கிருஷ்ண வல்லபா
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
அடுத்து வந்த நாட்களில் ஸ்ரீனிவாச ஆச்சாரியா 'கிருஷ்ணவல்லப' என்று அழைக்கப்பட்ட ஒரு பிராமணரின் வீட்டில் தங்கினார். அவர்கள் நல்ல நண்பர்களானார்கள். ஸ்ரீனிவாசாசாரி அவரிடம் தவறிப்போன புத்தகங்கள் குறித்து கூறினார். கிருஷ்ண வல்லபா எடுத்துரைத்தார், இந்த தேசத்தின மன்னன் திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம். எனினும் நீங்கள் சென்று அவரிடம் இதை நேரடியாக கேட்க முடியாது என்பதால் நான் ஒரு சிறந்த திட்டம் வைத்துள்ளேன் என்றார். விஷ்ணுகிருஷ்வல்லப மேலும் கூறினார்0,"அந்த மன்னன் ஒரு கொள்ளைக்காரன் ஆகயிருந்தாலும் அவன் ஸ்ரீமத் பாகவதம் கேட்பதில் மிகவும் ஆர்வம் உள்ளவனாவான். நாம் இப்போது அரண்மனைக்குச் செல்லலாம். அங்கு சென்று அந்த மன்னனின் மகிழ்ச்சிக்காக நீங்கள் ஸ்ரீமத் பாகவதத்தை உபன்யாசம் செய்யுங்கள். இவ்விதமாக அவரை நீங்கள் நேருக்கு நேராக பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்
நீதிமன்ற பண்டிதர் தோற்கடிக்கப்பட்டார்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
தாங்கள் வகுத்த திட்டத்தின்படி ஶ்ரீனிவாச ஆச்சார்யரும் அந்த பிராமணரும் மன்னரின் அரண்மனைக்கு சென்றனர். அங்கு பண்டிதர் வியாசாரியர் என்பவர் ஸ்ரீமத் பாகவதத்தை உபதேசித்துக் கொண்டிருப்பதை அமர்ந்து கேட்டனர். பாகவதம் பற்றிய அவரது விளக்கம் போலியாக இருந்தது. சிறிது நேரம் கழித்து ஸ்ரீனிவாச ஆச்சாரியரால் சகித்துக் கொள்ள இயலாமல் எழுந்து சவால் விடும்படியாக, "ஐயா மன்னிக்கவும், நீங்கள் சொல்வதில் உண்மை இல்லை.- உங்களது வார்த்தைகள் ஸ்ரீமத் பாகவதத்தின் சிறந்த ஆசாரியர்களின் போதனைகளை பிரதிபலிக்கவில்லை" என்றார்.
இதைக் கேட்டதும் வியாசாச்சாரியா மிகவும் கோபமடைந்து அவரிடம், "இதைவிட சிறப்பாக உங்களுக்கு இதற்கு விளக்கம் அளிக்க முடியுமேயானால் நீங்கள் ஏன் இங்கு வந்து இதற்கான விளக்கத்தை அளிக்கக கூடாது? எனறார்." இதற்காகத்தான் ஸ்ரீனிவாச ஆச்சார்யா காத்திருந்தார் பின் மன்னரின் அனுமதியுடன் அவர் இந்த வாய்ப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு ராஜாவின் முன் உள்ள ஆசனத்தில் அமர்ந்தார் ஸ்ரீநிவாஸ் ஆச்சாரியாரின் ஸ்ரீமத் பாகவதம் உபன்யாசம்
அவர் ஸ்ரீல ஜீவ கோஸ்வாமியிடமிருந்து கற்றறிந்த ஸ்ரீசைதன்ய மஹாபிரபு வின் தத்துவத்தை முன்வைத்துப் பேசினார். அவர் ஸ்ரீமத் பாகவதத்தை மிக அழகாகவும், நேர்த்தியாகவும் உபந்நியாசம் செய்ததால் அங்கிருந்த அனைவரும் முழுமையான ஆழ்நிலையை அடைந்தனர். இந்த பதங்களுக்கு இதுபோன்ற தெளிவான விளக்கத்தை அவர்கள் இதற்கு முன் கேட்டதே இல்லை. இதனால் முற்றிலும் அதை ரசித்து விரும்பினார்கள். மன்னர் இந்த உபன்யாசத்தில்பால் மிகவும் கவரப்பட்டார். அவர் ஸ்ரீனிவாச ஆச்சாரியாரின் தாமரை பாதத்தில் விழுந்து தன்னை அவரது சேவகராக ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சினார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஸ்ரீநிவாசர் மன்னரிடம் உதவி கோரினார். அவர் கூறினார் "நான் விருந்தாவனத்து கோஸ்வாமிகளால் எழுதப்பட்ட ஶ்ரீமத் பாகவத புத்தகங்களுடன் பயணம் செய்தேன். ஆனால் இப்பொழுது அந்த புத்தகங்களில் அனைத்தும் திருடப்பட்டு விட்டன. சோகமான குரலுடன் தொடர்ந்தார் புத்தகங்கள் இல்லாமல் எனது ஆன்மீக குருவிடம் திரும்பிச்செல்ல தயக்கப்படுகிறேன் எனறார். இதைக் கேட்டதும் மன்னர் வெட்டினார் நாம் யாருடைய புத்தகங்களை சிறிதேனும் என்பது இப்போது அவருக்கு புரிந்தது. பின்னர் மன்னன் ஸ்ரீநிவாஸரை தனது கருவூலத்திற்கு அழைத்துச் சென்று புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அந்த மரப்பெட்டியைக் காட்டினார்.
இந்த சம்பவத்தில் இருந்து ஒரு உயர்ந்த பக்தரிடம் இருந்து கூட பகவான் தனது சேவகர்களான பக்தர்களுக்கு எதிரான குற்றங்களைப் பொறுத்துக் கொள்வதில்லை என்பதையும், மனதினால் கூட இதுபோன்ற அபராதத்தை செய்யும் ஒரு பக்தரை அவர் தண்டிப்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம் ஒரு தூய பக்தர் பகவானிடம் இருந்து கிடைக்கும் இத்தகைய தண்டனையை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறார் என்பதையும் இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இது பகவானின் கருணையின் வெளிப்பாடாகவும் அவருடைய பக்தர்கள் மீது அவர் கொண்டுள்ள அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. இது அபராதம் செய்யக்கூடியவர்களுக்கும் அத்தகைய அபராதத்திற்கு காரணமாக இருப்பவர்களுக்கும் பொருந்தும். தூய பக்தரானவர் பகவான் தன்னை சரி செய்ததற்காகவும் மேலும் அபராதங்கள் செய்வதிலிருந்து தன்னை தடுத்தாட்கொண்டதற்காகவும் பகவானுக்கு நன்றி செலுத்துகிறார். மேலும் அவர் தனது இதயத்தினுள் மிகுந்த மகிழ்ச்சியையும் உணர்கிறார்
மன்னன் பிர்காம்பீர் தீட்சை பெறுதல்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
இழந்த புத்தகங்களைப் பார்த்த ஸ்ரீனிவாசர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மேலும் அவர் மன்னரிடம் புனித நீர், தூபம், புஷ்பங்கள், சாமரம் போன்ற வழிபாட்டிற்கு தேவையான பொருட்களை கேட்டார். ராஜா அதனைக் கொண்டு வந்த பிறகு ஸ்ரீனிவாசர் பாகவத கிரந்தங்களுக்கு ஆரத்தி எடுப்பதை பார்த்தார். சாஸ்திர விதிப்படி ஸ்ரீ்நிவாசா ஆச்சாரியார் வழிபாட்டு வஸ்துக்களை பாகவத கரந்தங்களுக்கு அர்ப்பணித்தார்.
பகவானின் தூய பக்தருடனான இந்த சந்திப்பு மன்னரின் வாழ்க்கை முறையை. முற்றிலுமாக மாற்றியது . இதனால் மன்னர் ஒரு வைஷ்ணவரானார். மன்னரை தனது சீடராக ஏற்ற சீனிவாச ஆச்சார்யார் அவருக்கு தீட்சை கொடுத்து வஙகாளத்திற்குச் செலவதற்கான் தனது பயணத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் தொடர்ந்தார். அங்கு சென்று அனைத்து வைணவர்களுக்கும் புத்தகங்களை வழங்கினார். அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அதனை பிரதி எடுத்து படித்து மகிழ்ந்தனர். பன்னர் தனது இல்லம் திரும்பி தனது குடும்பத்தினருடன் வாழ்ந்தார்.
அவரது பிற்கால வாழ்க்கை
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஸ்ரீனிவாசனின் தாய் அவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். அவரது விருப்பத்தை நிறைவு செய்யும் விதத்தில் 2 முறை ஶ்ரீனிவாஸரீ திருமணம் செய்து கொண்டார். ஒரு மனைவியின் பெயர் ஈஸ்வரி என்றும் அடுத்தவர் கௌரி பிரியா என்றும் அழைக்கப்பட்டார். அவர்களுக்கு நிறைய குழந்தைகள் பிறந்தன. பின்னாளில் தங்களுக்குத் தாங்களே சீடர்களாக இருக்கும்படியான அதிகாரப்பூர்வமாக பக்தர்களாக அவர்கள் இருந்தார்கள். குறிப்பாக அவரது மகள் ஹேமலதா தாக்கூராணி ஒரு பிரசித்தி பெற்ற பிரச்சாரகராக புகழ் பெற்றார். மேலும் அவர் நூற்றுக்கணக்கான பெண் மற்றும் ஆண் சீடர்களை ஏற்றுக்கொண்டார். பகவானின் தூய பக்தரான ஸ்ரீனிவாச ஆச்சாரியாரின் நம்பிக்கை சக்தி மற்றும் உறுதியை உலகிற்கு காட்டுவதன் மூலமாக பக்தர்களுக்கு ஒரு உற்சாகத்தை நம்மால் அளிக்க முடியும்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitamil
Comments
Post a Comment