🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
கிருதயுகத்தில் ( சத்தியயுகத்தில்) ரேவதன் எனும் அரசன் துவாரவதீ எனும் கடல் சார்ந்த பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு நூறு குழந்தைகள். அவர்களில் மூத்தவன் தான் ககுத்மி. ககுத்மிக்கு ரேவதி என்ற மகள் இருந்தாள்.பேரழகியான அவள் எல்லா வித திறமை மற்றும் நற்குணங்கள் பெற்றிருந்தாள். அவளை ககுத்மி மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்தார். அவளது அறிவுக்கும், திறமைக்கும் , நற்குணங்களுக்கு நிகராக அந்த காலகட்டத்தில் எவரும் இல்லை.
பூமிக்கும், தேவலோகத்திற்கும் நேரடியாக செல்லும் சக்தியை வைவஸ்தவ மன்வந்தரத்தின் முதல் மகாயுகத்தினுடைய கிருத யுகத்தில் பிறந்தவர்கள் படைத்திருந்தனர். ககுத்மி தனது செல்ல மகளை தகுதிவாய்ந்த ஒருவருக்கு மணமுடிக்க விருப்பம் கொண்டு எல்லா திசைகளிலும் தேடினார். ஆனால் தனது மகளுக்கு ஏற்ற ஒருவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே ககுத்மி, தன்னுடைய மகள் ரேவதிக்கு சரியான மணாளன் யார் என்று அறிந்து கொள்வதற்காக பிரம்மலோகம் சென்றார். உடன் மகள் ரேவதியையும் அழைத்துச் சென்றார். அந்த நேரத்தில் பிரம்மா தியானத்தில் இருந்ததால், அவர்கள் பிரம்மலோகத்தில் 20 நிமிடம் காத்திருக்க வேண்டியிருந்தது. பிரம்மலோகத்தில் 20 நிமிடம் என்பது, பூலோகத்தில் பல யுகங்களுக்கு சமமாகும். அதன்படி பூலோகத்தில் வைவஸ்தவ மன்வந்தரத்தின் 28-வது மகா யுகத்தில் துவாபர யுகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது பிரம்ம தேவர் தவம் முடிந்து வந்ததும் ககுத்மி தனது மனக்குறையை பிரம்மாவிடம் தெரிவித்தார். பிரம்ம தேவர் அவரிடம், நீங்கள் இங்கு வந்து காத்திருந்த நேரத்தில் பூலோகத்தில் 27 மகாயுகங்கள் முடிந்து விட்டன. இப்போது பூலோகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் அவதரித்து லீலைகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதில் பகவான் பலராமர் உங்கள் மகளுக்கு ஏற்றவர்.அதனால் நீங்கள் இப்போது பூலோக சென்று அங்கு பலராமரை அணுகி உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள் என்றார்.
அவர்கள் பூலோகம் வந்தபோது, மனித இனம் பெருமளவில் மாற்றம் அடைந்திருந்தது. மற்ற மனிதர்களுடன் ஒப்பிடுகையில் ககுத்மியும் ரேவதியும் மிகப்பெரிய உருவத்தில் காட்சியளித்தனர். ககுத்மி பலராமரை அணுகி நடந்தவை அணைத்தும் கூறினார். மேலும் தனது பிரியமான மகளை திருமணம் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்தார். அவர்கள் நோக்கம் அறிந்த பகவான் பலராமர் திருமணத்திக்கு சம்மதம் தெரிவித்தார். பின்னர் பலராமர் ரேவதியின் தோளில் தனது கலப்பையை வைத்து இழுத்ததும் அவர் அந்த காலகட்டத்திற்கு ஏற்ற மனித உருவத்திற்கு மாறினாள். அதன்பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment