உபாக்யானே உபதேசம்
( ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி )
🍁🍁🍁🍁🍁🍁🍁
வெடித்து போன தவளை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஒரு குளத்தில் தவளையொன்று தனது மகன் தவளையுடன் வசித்து வந்தது. ஒரு நாள் மகன் தவளை குளக்கரையில் ஒரு யானையைக் காண நேர்ந்தது. உடனே குளத்திர்குத் திரும்பிய அந்த தவளை தன் தாயிடம் உற்சாகமாக, "அம்மா நான் இன்று ஒரு பெரிய விலங்கைப் பார்த்தேன்" என்றது.
அதற்கு அதன் தாய், அப்படியா!! அது எவ்வளவு பெரியதாக இருந்தது?
அதற்கு குழந்தை தவளை, " ஓ அது உங்களை விட பெரியது!'' என்றது.
அப்போது அந்த தாய் தவளை தனது உடலை ஊதி பெருக்கிக் கொண்டு (உப்பியபடி) "இவ்வளவு பெரியதா?' என்றது.
அதற்கு மகன் தவளை, "இல்லையம்மா இதை விட பெரியது" என்றது.
மறுபடியும் தாய் தவள இன்னும் அதிகமாக அதன் உடல உப்பி வைத்தபடி, "இவ்வளவு பெரிதாக இருந்ததா? என்றது.
உடனே மகன் தவளை, "ஓ இல்லையம்மா இதை விட பெரியது" என்றது. இப்பொழுது தாய் மேலும் தனது உடல உப்பிக்காட்டியது. இவ்வாறாக திரும்ப திரும்ப செய்யவும் மகன் தவளை, "இல்லை இல்லை இதை விட பெரியது என்றது. இதனால் மேலும் மேலும் தனது உடலை தனது சக்திக்கு அப்பாற்பட்டு உப்பிக் காட்டிய தாய் தவளையின் உடல் ஒரு கட்டத்தில் பலத்த சப்தத்துடன் வெடித்தது.
ஒரு சாதாரண உயிர்வாழி உலகிலேயே தான் தான் மிகவும் உயர்ந்தவன் என்றும் தனக்குத் தானே தான் "பர பிரஹ்மன்" (பர - மிக உயர்ந்த, பிரஹ்ம - பூரணம்) என்று கூறிக் கொள்கின்றான். அவன் தனக்கு சமமானவரோ அல்லது தன்னை விட உயர்ந்தவரோ இல்லை என்று பக்தி சேவையில் ஈடுபட்டிருக்கும் சில அமைப்புக்களைக்கூட அவன் தவறாகப் புரிந்து கொள்கிறான். பக்தித் தொண்டில் பக்குவமடைந்து முக்தியடைந்த ஆத்மாக்களுடன் தானும் சமம் என்று ஆடம்பரமாக நினைத்துக் கொள்கிறான். அவனது இந்த பொய் அஹங்காரத்தின் காரணமாக இக்கதையில் வரும் தவளை போல முடிவில் அழந்து போகின்றான்.
குறிப்பு: "வெடித்துப் போன தவளை" எனும் இக்கதையை விவரிப்பதன் மூலம் ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாதா அவர்கள், "ஒருவன் பெரிய மனிதனாக இருப்பதை விட நல்ல மனிதனாக இருப்பது சிறந்தது" என்று நமக்கு அறிவுறித்துகின்றார். "நானே பிரம்மன், நானே சித்திகள் வாய்க்கப்பட்டவன், நானே வைஷ்ணவன், நானே பண்டிதன், நானே தன்னை உணர்ந்தவன்" இந்த வகையான தவறான பொய் அஹங்காரமே ஆத்மா வீழ்ச்சியடைவதற்கும், பற்றுதலுக்கும் மூல காரணமாக அமைகின்றது. ஆனால் பகவான் ஸ்ரீ ஹரியின் மீதுள்ள தூய பக்தியினால் புத்துயிரூட்டப்பட்ட பக்தன் தன்னை இந்த பெளதிக இயற்கயின் அதிபதி என்றோ, அதன் அனுபவிப்பாளன் என்றோ ஒரு போதும் கருதுவதில்லை. பக்தர்கள் தங்களை ஆன்மீக குரு மற்றும் அனைத்து வைஷ்ணவர்களின் பாதத் தூளிக்கு சமமானவன் என்பது எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களின் இதயம் எப்போதும் பணிவுடனேயே இருக்கும். ராவணன் ஒருபோதும் பகவான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாக முடியாது. அது போல ஒரு உயிர்வாழி ஒரு போதும் "பரபிரஹ்மன்" ஆக முடியாது.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment