ஸ்ரீ வக்ரேஷ்வர பண்டிதர் பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மிகவும் பிரியமான சேவகர் ஆவார், கௌர-கணோத்,தேஷ தீபிகா வில், வக்ரேஷ்வர பண்டிதர் பகவான் நாராயணரிலிருந்து வரும் (வாசுதேவர், சங்கர்சனர், அனிருத்தர், மற்றும் பிரதியும்னர்) நான்கு விரிவாக்கங்களில் ஒன்றான அனிருதரின் அவதாரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வக்ரேஷ்வர பண்டிதரின் சீடர் கோபால குரு கோஸ்வாமியும் , கோபால குரு கோஸ்வாமியின் சீடரான தியான் சந்திரரும் அவர்கள் எழுதிய புத்தகங்களில் வக்ரேஷ்வர பண்டிதர், ஸ்ரீமதி ராதரானியின் நெருங்கிய தோழிகளான அஷ்ட-சகிகளில் ஒருவரான துங்கவித்யா-சகியின் அவதாரம் என்று கூறுகிறார். இந்த துங்கவித்யா சகி மிக சிறந்த பாடகரும் நேர்தியான நடனக் கலைஞருமாவார்.
வக்ரேஷ்வர பண்டிதர் நதியா மாவட்டம், திரிவேணிக்கு அருகிலுள்ள குப்தபரா என்னும் கிராமத்தில் பிறந்தார்.
அனுதினமும் ஸ்ரீவாச பண்டிதரின் வீட்டில் பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு சங்கீர்த்தன நிகழ்ச்சிகள் ,மற்றும் நாட்டிய நாடகங்கள் நடைபெறும். அதில் பங்கு கொண்டு நடித்தபோது, வக்ரேஷ்வர பண்டிதர் தலைமை நடனக் கலைஞர்களில் ஒருவராக இருந்தார், மேலும் அவர் தொடர்ந்து எழுபத்திரண்டு மணி நேரம் அற்புதமாக சங்கீர்த்தனத்திற்கு நடனமாடினார்.
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் நவதீப சங்கீர்த்தன லீலைகளில், வக்ரேஷ்வர பண்டிதர் அந்த குழுவில் ஒரு முக்கியமான பாடகராகவும் நடனக் கலைஞராகவும் இருந்தார்
ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் நவதீப லீலைகளில் வக்ரேஷ்வர பண்டிதரும் முக்கியமானவராவார் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு சன்யாசம் ஏற்றுக்கொண்ட பிறகு, அவருடன் ஜகந்நாத் பூரிக்கு வக்ரேஷ்வர பண்டிதரும் உடன் சென்றார். பூரியில் மகாபிரபு வசித்த காலத்தில், அவர் தொடர்ந்து பல சேவைகள் புரிந்து அவருடன் வாழ்ந்து வந்தார்.
வக்ரேஷ்வர பண்டிதரின் கருணையால், மகாப்பிரபுவின் கோபத்திலிருந்து வைஷ்ணவ அபராதம் செய்த, தேவானந்த பண்டிதர் விடுவிக்கப்பட்டார்.
தேவானந்த பண்டிதருக்கு கருணை புரிதல்
🔆🔆🔆🔆🔆🔆🔆
தேவானந்த பண்டிதர் ஶ்ரீமத் பாகவத செற்பொழிவாற்றுவதில் நிபுணராக இருந்தார். ஒரு நாள் ஸ்ரீவாச பண்டிதர் இவரின் சொற்பொழிவை கேட்க சென்றார். பாகவத புராணதில் ஆழ்ந்து தன் நிலை மறந்து கண்களில் ஆனந்த கண்ணீருடன் பரவச நிலை அடைந்தார். இதை கண்ட தேவானந்த பண்டிதரின் சிஷ்யர்கள் இவரின் பரவச பாவத்தை தவறாக புரிந்து கொண்டு ஏதோ சொற்பொழிவில் இடையூறு செய்கிறார் என்று எண்ணி ஸ்ரீவாச பண்டிதரை மண்டபத்தில் இருந்து வெளியேற்றினர்.. இந்த சம்பவம் தேவானந்தருக்கு முன்னால் நடைபெற்ற போதிலும், பக்த ஸ்வரூபமாக இருந்த பாகவதத்தை புறக்கணிக்கும் இந்த செயலிலிருந்து அவர் தனது மாணவர்களைத் தடுக்கவில்லை.. இச்செயலினால் தேவானந்த பண்டிதர் ஒரு சுத்த பக்தனின் அபராதத்திற்கு (தூய பக்தரை அவமதித்த குற்றத்திற்கு )ஆளானார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தன் பிரியமான பக்தனுக்கு ஏற்பட்ட அவமதிப்பை கேள்விப்பட்டு தனது பக்தர்களிடம் அறிவுரை வழங்கினார். பாகவத புராணத்தை படிப்பவர்களுக்கு பக்தரான பாகவதரை மதிக்க தெரியவில்லை என்றால் அவர்கள் அபராதிகள் (குற்றவாளிகள் ). . மேலும் பல ஜென்மங்கள் பாகவத புராணத்தை படித்தாலும் கிருஷ்ண ப்ரேமை அடைய மாட்டார்கள் என்றும் உரைத்தார். பக்தர்-பாகவதமும் புத்தக - பாகவதமும் வேறுபட்டவை அல்ல. பாகவத புத்தகத்தைப் புரிந்து கொள்ள, ஒருவர் முதலில் பக்தர்-பாகவதத்திற்கு உண்மையாக சேவை செய்ய வேண்டும். எனவே மகாபிரபு தேவானந்தரை புறக்கணித்து, அவருக்கு கருணை காட்டவில்லை.
இருவித பாகவதங்கள்
🔆🔆🔆🔆🔆🔆🔆
இருவித பாகவதங்கள் உள்ளன. ஒன்று புத்தக பாகவதம்; மற்றது பக்தரான பாகவதர். பக்தரெனும் பாகவதர், புத்தகம் எனும் பாகவதத்துக்குச் சமமானவராவார். ஏனெனில், பக்தரான பாகவதர் தமது வாழ்வை புத்தகமெனும் பாகவதத்திற்கு ஏற்ற முறையில் அமைத்துக் கொள்கிறார். மேலும் புத்தக பாகவதமானது, பரம புருஷ பகவானைப் பற்றிய தகவல்களும, பாகவதர்களாகிய பகவானின் தூய பக்தர்களைப் பற்றிய தகவல்களும் நிறைந்ததாக உள்ளது. பாகவதம் எனும் நூலும், பாகவதர் எனும் நபரும் முற்றிலும் ஒன்றானவையாகும். பக்தரான பாகவதர், பரம புருஷ பகவானின் நேரடியான பிரதிநிதியாவார். எனவே, பக்தரான பாகவதரை திருப்திப்படுத்துவதால் புத்தக பாகவதத்தினால் அடையும் நன்மையை நாம் பெற முடியும். பக்தரான பாகவதருக்கோ அல்லது புத்தக வடிவிலுள்ள பாகவதத்திற்கோ தொண்டு செய்வதன் மூலம் எப்படி ஒருவர் பக்தி வழியில் படிப்படியான முன்னேற்றத்தைப் பெறுகிறார் என்பதை மனித புத்தியால் புரிந்துகொள்ள இயலாது.
- ஶ்ரீமத் பாகவதம் 1.2.18 / பொருளுரை )
ஒரு நாள் மாலை வக்ரேஷ்வர பண்டிதர் குலியாவைச் சேர்ந்த ஒரு பக்தரின் வீட்டில், நாம சங்கீர்த்தனம் செய்ய வந்திருந்தார். இந்த செய்தியை அறிந்த தேவானந்த பண்டிதர் மிகவும் மகிழ்ச்சியுடன் அவ்விடம் விரைந்து சென்றார். வக்ரேஷ்வர பண்டிதருடைய பக்தி பரவசமான சங்கீர்த்தனம் மற்றும் நடனத்தையும் கண்டு நெகிழ்ந்தும் மனம் மகிழ்ந்தும் பரவச நிலையடைந்தார். இந்த அற்புதமான நடனத்தை காண பெரும் திரளாக மக்கள் கூடினர். தேவானந்தா பண்டிதர் தன் கையில் இருந்த கழியை சுழற்றி அவர் பரவசமான நடனத்திற்கு பங்கம் விழையாமல் பார்த்துக்கொண்டார்.
இப்படியாக, அன்று இரவு வக்ரேஷ்வர பண்டிதர் ஆறு மணி நேரம் சங்கீர்த்தனமும் நடனமும் செய்தார். அவர் நடனத்தை முடித்துவிட்டு உட்கார்ந்தபோது, தேவானந்தர் ஸ்ரீ வக்ரேஷ்வர பண்டிதரின் தாமரை திருவடிகளை சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். அவர் இந்த சேவையில் மகிழ்ச்சி அடைந்து, ஸ்ரீ கிருஷ்ணர் மீது பக்தி அடைய தேவானந்தரை ஆசீர்வதித்தார். அன்றிலிருந்து ஸ்ரீ வக்ரேஷ்வர பண்டிதரின் தயவால் தேவநந்தாவின் இதயத்தில் பக்தி எழுந்தது.
பின்னொரு சமயம் மகாபிரபு நதியா மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது தனது தாயையும், புனித நதியான கங்கையையும் தரிசனம் செய்யதார் , அப்போது அவரை கண்டு ஆசி பெற வந்த தேவநந்தரிடம் தூய பக்தரான வக்ரேஷ்வர பண்டிதரிடம் நீ உனது ஆத்மார்த்தமான சேவை செய்ததன் பலனாக முந்தைய அபராதங்கள் (குற்றங்கள்) அனைத்தையும் மன்னித்து ஆசீர்வதிக்கிறேன். என்றும் “நீங்கள் வக்ரேஷ்வர பண்டிதருக்கு இவ்வளவு சிறப்பாக சேவை செய்துள்ளதால், இன்று என்னை இங்கே காண முடிகிறது என்று கூறினார்.
வக்ரேஷ்வர் கிருஷ்ணரின் அந்தரங்க சக்தியின் வெளிப்பாடு மற்றும் உருவகம் ஆகையால், அவருக்கு நன்றாக சேவை செய்பவர், உடனடியாக கிருஷ்ணரின் தாமரை திருவடிகளை வந்தடைகிறார் . அதனால் தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வக்ரேஷ்வர பண்டிதரின் இதயத்தில் ஆனந்தமாக கொலுவிரிக்கிறார். வக்ரேஷ்வர் எங்கே, எப்போது நடனமாடுகிறாரோ, அந்த இடத்தில் கிருஷ்ணரே அவரை நடனமாட தூண்டுகிறார். இவ்வாறாக, ஸ்ரீ வக்ரேஷ்வர் எங்கெல்லாம் இருக்கிறாரோ , சங்கீர்த்தனம் செய்து ஆனந்தமாக நடனமாடுகிறாரோ அந்த இடம், புனித யாத்திரை ஸ்தலமும் ஸ்ரீ கிருஷ்ணார் நித்தியமாக வசிக்கும் வைகுண்டமுமே ஆகும்.
சாதுக்களின் மகிமை
🔆🔆🔆🔆🔆🔆🔆
ஸாது-ஸங்க ’ஸாது-ஸங்க- ஸர்வ-ஷாஸ்த்ரே கய
லவ-மாத்ர ஸாது-ஸங்கே ஸர்வ-ஸித்தி ஹய
“தூய பக்தரின் சங்கத்தை ஒரு க்ஷணம் பெற்றாலும் எல்லா சித்திகளையும் அடைய முடியும் என்று எல்லா வேத சாஸ்திரங்களும் உறுதியளிக்கின்றன
( ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / மத்ய லீலை / 22.054 )
சாதுக்களின் சங்கமில்லையெனில் ஒருவர் பக்தியில் முன்னேற்றம் அடைவதென்பது இயலாத காரியம்.
சாது சங்கத்தை கவனமாக பயன்படுத்தி ஆன்மீக வாழ்வில் முன்னேற்றமடைவோம்.
ஹரே கிருஷ்ணா !
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment