🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
சாம்பன் திருமணம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஜாம்பவதியின் பிரிய மகனான சாம்பன், துரியோதனன் மகள் லக்ஷ்மணையை அவளது சுயம்வரக் கூட்டத்திலிருந்து எடுத்துச் சென்றார். இதற்குப் பதிலாக, கௌரவர்கள் கூட்டு சேர்ந்து அவரைச் சிறைபிடிக்க வந்தனர். தனியொருவராக கொஞ்சநேரம் அவர்களைத் தடுத்து நிறுத்தியபின், ஆறு கௌரவ வீரர்கள் அவரது தேரையும், வில்லையும் உடைத்து அவரைக் கைப்பற்றினர். பிறகு அவரையும் ல்ஷ்மணையையும் அஸ்தினாபுரத்திற்கு எடுத்துச் சென்றனர்
சாம்பன் சிறைப்படுத்தப்பட்டதைக் கேட்ட உக்ரசேன மன்னர் அவர்களைப் பழிவாங்க யாதவர்களை வரவழைத்தார் கோபங் கொண்ட அவர்கள் போருக்குத் தயாராயினர். ஆனால் குரு மற்றும் யது வம்சங்களுக்கிடையில் போர் மூள்வதைத் தடுக்க எண்ணி, பகவான் பலராமர் அவர்களை சமாதனப்படுத்தினார். பகவான் சில பிராமணர்களுடனும், யாதவ முதியோர்களுடன் அஸ்தினாபுரம் சென்றார்
யாதவ குழுவினர் நகருக்கு வெளியில் கூடாரம் அமைத்துத் தங்கினர். திருதராஷ்டிரரின் எண்ணத்தை அறிந்துவர பலராமர் உத்தவரை அனுப்பினார். கௌரவ சபைக்குச் சென்ற உத்தவர், பகவான் பலராமரின் வருகையை அறிவித்தார். கௌரவர்களும் உத்தவரைப் பூஜித்து பகவானுக்கு அர்ப்பணிக்க மங்களகரமான பொருட்களை எடுத்துக் கொண்டு அவரைக் காணச் சென்றார். கௌரவர்கள் சடங்குகளும், காணிக்கைப் பொருட்களாலும் பலராமரைக் கௌரவித்தனர். ஆனால் சாம்பனை விடுவிக்க வேண்டுமென்ற உக்ரசேனரின் உத்தரவை அவர் கூறியதும் அவர்கள் கோபாவேசம் அடைந்தனர். "யாதவர்கள் கௌர வர்களுக்கு உத்தரவிடுவது ஆச்சரியமாக உள்ளது. இது, ஒருவனுடைய செருப்பு அவருடைய தலைமேல் ஏற முயல்வதைப்போல் உள்ளது யாதவர்கள் தங்களுடைய அரியாசனங்களை எங்களிடமிருந்தல்லவா பெற்றார்கள். இருப்பினும், இப்பொழுது அவர்கள் தங்களை எங்களுக்குச் சமமாகக் கருதுகிறார்கள். இனி அரசுரிமைகளை அவர்களுக்கு நாம் அளிக்கப் போவதில்லை" என்று அவர்கள் கூறினர்.
இவ்வாறு கூறியபின் கௌரவ உயர் அதிகாரிகள் தங்கள் நகருக்குத் திரும்பினர். அகந்தையால் திமிர்பிடித்த அவர்களுக்கு மிருகத்தனமான தண்டனை அளிப்பதன் மூலம் மட்டுமே அவர்களைச் சமாளிக்க முடியும் என்று பகவான் பலதேவர் முடிவு செய்தார். இவ்வாறாக பகவான் கௌரவர்கள் அனைவரையும் பூமியிலிருந்து அகற்றிவிட விரும்பி, தமது கலப்பை ஆயுதத்தால் அஸ்தினாபுரத்தை கங்கையை நோக்கி இழுக்கத் துவங்கினார். தங்கள் நகரம் நதியில் விழப்போகும் ஆபத்து நெருங்கி விட்டதைக் கண்ட கௌரவர்கள், பயந்துபோய் சாம்பனையும், லஷ் மணையையும் பகவான் பலராமர் முன் அழைத்து வந்து, அவரை துதித்துப் போற்றினர். பிறகு, "பகவானே, உங்களுடைய நிஜ மகிமையை அறியாத எங்களை மன்னித்தருளுங்கள்" என்று அவர்கள் பிரார்த்தனை செய்தனர்
பலராமரும் கௌரவர்களுக்கு தீங்கிழைக்க மாட்டேன் என்று உறுதியளித்தார். துரியோதனன் தன் மகளுக்கும், புதிய மருமகனுக்கும் பல்வேறு திருமணப் பரிசுகளை அளித்தான். பிறகு துரியோதனன் யாதவர்களுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து, சாம்பனையும், லஷ்மணையையும் அழைத்துக் கொண்டு துவாரகைக்குத் திரும்பும்படி பகவான் பலதேவரை வேண்டிக் கொண்டான்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment