புனித யாத்திரை ஸ்தலமான ஶ்ரீதாம் மாயாபூரில்
பகவான் ந்ரிஸிம்ஹ தேவரின் நித்திய லீலைகளில் சில . . . .
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
லீலை :1
பகவான் ந்ரிஸிம்ஹ தேவரின் பூஜாரி மிகவும் திடுக்கிடச்செய்யும் ஒரு கனவு கண்டார். அதில் கோவிலின் இயக்குநர் அந்த பூஜாரியைக் கூப்பிட்டு சிறிது டீசல் எண்ணெய் கொண்டு வரும்படி கூறினாராம்;
“நாம் பகவான் ந்ரிஸிம்ஹ தேவரை பலியிடப்போகிறோம்.” என்று கூறினார்.
“நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று பூஜாரி கத்தினார்.
“ஆமாம் நாம் பகவான் ந்ரிஸிம்ஹ தேவரை பலியிடப்போகிறோம்”.
“நீங்கள் அதைச் செய்ய முடியாது. அது பைத்தியக்காரத்தனம்!” - பூஜாரி.
“நீங்கள் டீசலை மட்டும் கொண்டுவாருங்கள். உங்களால் முடியுமா?”
“சரி நான் எண்ணெயைக் கொண்டு வருகிறேன். அதை வைத்து எதையும் செய்யக்கூடாது. அது அர்த்தமற்றது”
சிறிது நேரத்திற்குப்பிறகு பூஜாரி கோயிலுக்குத் திரும்பிவந்தார். ஒரு பெரிய நெருப்பினால் அனைத்தும் எரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து முழு அதிர்ச்சி அடைந்தார்; அங்கு ந்ரிஸிம்ஹ தேவரின் பாதங்களும் கணுக்கால்களும் மட்டுமே மிஞ்சியிருந்தன.
மறுநாள் அதிகாலையில் அவர் முதன்மை பூஜாரியை அணுகி, இந்த பயங்கரமான கனவிற்கு ஏதேனும் விளக்கம் கூற முடியுமா என்று வினவினார்;
பிறகு பூஜாரி கூறலானார். “ஒ! ஆமாம், நேற்றுதான் ஜலதானத்தின் ஆரம்பம் (சாலக்கிராம விக்ரஹங்கள் மீது நீரைச் சொட்டச் செய்யும் ஒரு மாத கால நிகழ்ச்சி), ஆனால் அதைக் கடைபிடிக்க மறந்து விட்டோம், எனவே ந்ரிஸிம்ஹ தேவர், உனக்கு உணர்த்தியிருக்கிறார், எனவே உஷ்ணத்தில் எரிந்து கொண்டிருப்பதாகவும், நீ உடனே “ஜல- தான்” துவங்க உதவ வேண்டும் என்றும் குறிப்பாக உணர்த்தியுள்ளார். நாங்கள் அதை உடனே துவங்கினோம்.”
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment