சாதுர்மாஸ்ய காலம் என்பது ஆஷாட (ஜூன் - ஜூலை) மாதத்தில் வளர்பிறை ஏகாதசியான ஷயன ஏகாதசியிலிருந்து தொடங்கி, கார்த்திக (அக்டோபர் - நவம்பர் )மாதத்தின் வளர்பிறை ஏகாதசியான உத்தான ஏகாதசியன்று முடிகிறது. இந்த நான்கு மாத காலமானது சாதுர்மாஸ்யம் என்று அறியப்படுகிறது. வைஷ்ணவர்கள் சிலர் இதனை ஆஷாட மாதத்தின் பௌர்ணமி நாளிலிருந்து கார்த்திக மாதத்தின் பௌர்ணமி நாள் வரை அனுசரிக்கின்றனர். இதுவும் நான்கு மாத காலமாகும். சந்திர மாதங்களை வைத்துக் கணக்கிடப்படும் இந்த காலம் சாதுர்மாஸ்யம் எனப்படுகிறது. சூரிய மாதத்தில் பின்பற்றுவோர் சிராவண மாதத்திலிருந்து கார்த்திகை மாதம் வரை சாதுர்மாஸ்யத்தை அனுசரிக்கின்றனர். சூரிய மாதமோ சந்திர மாதமோ, ஒட்டுமொத்த காலமும் மழைக்காலத்தின்போது வருகிறது. சாதுர்மாஸ்யம் எல்லா தரப்பட்ட மக்களாலும் அனுசரிக்கப்பட வேண்டும். கிருஹஸ்தரா சந்நியாசியா என்பது பொருட்டல்ல. இதை அனுசரிப்பது எல்லா ஆஷ்ரமங்களுக்கும் கடமையாகும். இந்த நான்கு மாத காலத்தின்போது மேற்கொள்ளப்படும் விரதத்தின் உண்மையான குறிக்கோள் புலனுகர்ச்சியின் அளவை குறைத்துக் கொள்வதாகும். இது கடினமானதல்ல.
* இந்த விரத காலங்களில் அசைவம் உண்ணக்கூடாது
* சிரவண மாதத்தில் கீரை உண்ணக்கூடாது .
*பாத்ர மாத்தில் தயிர் உண்ணக்கூடாது .
*ஆஸ்வின மாதத்தில் பால் அருந்தக் கூடாது.
*கார்த்திக மாதத்தில் மீன் மற்றும் இதர அசைவ பொருட்களை உண்ணக் கூடாது. அசைவ உணவு என்பது மீன் மற்றும் மாமிசத்தினைக் குறிக்கின்றது. அதுபோலவே, மசூர் பருப்பும் உளுத்தம் பருப்பும் அசைவ உணவாகக் கருதப்படுகின்றன. இந்த இரண்டு பருப்புகளிலும் அதிகளவில் புரதச்சத்து உள்ளது. புரதம் அதிகமாகக் கொண்டுள்ள உணவுப் பொருட்கள் அசைவகமாகக் கருதப்படுகின்றன. மொத்தமாக பார்த்தால் சாதுர்மாஸ்யத்தின் நான்கு மாத காலத்தின்போது , புலனின்பத்திற்கான எல்லா உணவையும் கைவிடுவதற்குப் பயிற்சி செய்ய வேண்டும்.
( ஶ்ரீல பிரபுபாதர் / பொருளுரை / ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / மத்யலீலை 4.169 )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment