ஶ்ரீமத் பகவத்கீதையின் வரலாறு

 



ஶ்ரீமத் பகவத்கீதையின் வரலாறு


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


ஸ்ரீ-பகவான் உவாச

இமம் விவஸ்வதே யோகம்

ப்ரோக்தவான் அஹம் அவ்யயம்

விவஸ்வான் மனவே ப்ராஹ

மனுர் இக்ஷ்வாகவே (அ)ப்ரவீத்


மொழிபெயர்ப்பு


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


புருஷோத்தமரான முழு முதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: அழிவற்ற இந்த யோக விஞ்ஞானத்தை நான் சூரிய தேவனான விவஸ்]வானுக்கு உபதேசித்தேன். விவஸ்]வான் மனித குலத் தந்தையான மனுவுக்கும், மனு, இக்ஷ்வாகு மன்னனுக்கும் இதனை முறையே உபதேசித்தனர்.


பொருளுரை


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


பகவத் கீதை, சூரிய கிரகத்திலிருந்து தொடங்கி, அனைத்து கிரகங்களின் மன்னர்களுக்கும் பன்நெடுஞ்காலத்திற்கு முன்பே உபதேசிக்கப்பட்டது என்ற சரித்திரத்தை இங்கு நாம் காண்கிறோம். எல்லா கிரகங்களின் மன்னர்களும் குடிமக்களைக் காக்க வேண்டியவர்கள்; எனவே, மக்களை ஆள்வதற்காகவும் அவர்களை காமம் என்னும் பௌதிக பந்தத்திலிருந்து பாதுகாப்பதற்காகவும், அரசு குலத்தோர் அனைவரும் பகவத் கீதையின் விஞ்ஞானத்தை அறிந்து கொள்வது அவசியம். முழுமுதற் கடவுளுடன் நித்திய உறவை வளர்க்கக் கூடிய ஆன்மீக ஞானத்தைப் பயில்வதே மனிதப் பிறவியின் நோக்கமாகும். மேலும், எல்லா கிரகங்களிலும் எல்லா நாட்டிலும் உள்ள அனைத்து தலைவர்களும் கல்வி, பண்பாடு, மற்றும் பக்தியின் மூலம் குடிமக்களுக்கு இந்த ஞானத்தைக் கற்றுத் தர கடமைப்பட்டுள்ளார்கள். வேறு விதமாகக் கூறினால், எல்லா தேசத் தலைவர்களும் கிருஷ்ண உயர்வின் விஞ்ஞானத்தைப் பரப்புவதற்குக் கடமைப்பட்டுள்ளார்கள். அதன் மூலம், மனிதப் பிறவியின் வாய்ப்பை உபயோகப்படுத்திக் கொள்ளும் மக்கள், இம்மாபெரும் விஞ்ஞானத்தினால் வெற்றிப் பாதையில் முன்னேறுவர்.


இந்த யுகத்தின் சூரியதேவனுக்கு, விவஸ்]வான் (சூரியனின் மன்னன்) என்று பெயர். சூரியக் குடும்பத்திலுள்ள அனைத்து கிரகங்களுக்கும் சூரியனே மூலமாகும். பிரம்ம சம்ஹிதையில் (5.52) கூறப்பட்டுள்ளது:


யச்;-சக்ஷுர் ஏஷ ஸவிதா ஸகல-க்ரஹாணாம்

ராஜா ஸமஸ்த-ஸுர-மூர்திர் அஷே-ஷ-தேஜா:

யஸ்யாக்ஞயா ப்ரமதி ஸம்ப்ருத-கால-சக்ரோ

கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி


பிரம்மா கூறினார்: "முழுமுதற் கடவுளும் ஆதி புருஷருமான கோவிந்தனை நான் வணங்குகிறேன். எல்லாக் கிரகங்களுக்கும் தலைவனான சூரியன் அளவற்ற சக்தியையும் உஷ்ணத்தையும் இவருடைய கட்டளைக்கேற்பவே பெற்றுள்ளான். பகவானின் கண்ணைப் பிரதிநிதிக்கும் இந்த சூரியன், அவரது கட்டளைக்குப் படிந்து தனது பாதையில் சுற்றிக் கொண்டுள்ளான்."


வெப்பமும் ஒளியும் தருவதன் மூலம் கிரகங்களைக் கட்டுப்படுத்தி, அனைத்து கிரகங்களுக்கும் மன்னனாக விளங்கும் சூரியனை, சூரியதேவன் (தற்போதைய சூரியதேவனின் பெயர் விவஸ்வான்) ஆட்சி செய்து வருகிறான். கிருஷ்ணரது ஆணைப்படியே அவன் சுழன்று கொண்டுள்ளான். பகவத் கீதையின் விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்ளும் முதல் மாணவனாக பகவான் கிருஷ்ணர் விவஸ்வானை ஆக்கினார். எனவே, பகவத் கீதை அற்பமான ஏட்டுக் கல்வி அறிஞருக்கான கற்பனைக் காவியமல்ல, நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து கீழிறங்கி வரும் ஞானத்திற்கான தரமான புத்தகமாகும்.


கீதையின் வரலாற்றை மஹாபாரதத்தில் (ஷாந்தி-பர்வ 348.51-52) பின்வருமாறு நாம் காணமுடியும்:


த்ரேதா-யுகாதௌ ச ததோ

விவஸ்வான் மனவே ததௌ

மனுஷ் ச லோக-ப்ருத்-யர்தம்

ஸுதாயேக்ஷ்வாகவே ததௌ

இக்ஷ்வாகுணா ச கதிதோ

வ்யாப்ய லோகான் அவஸ்தித:


"திரேதா யுகத்தின் ஆரம்பத்தில், பகவானுடனான உறவு பற்றிய இந்த விஞ்ஞானம் விவஸ்வானால் மனுவிற்கு வழங்கப்பட்டது. மனித குலத்தின் தந்தையான மனு, தனது மகனும் பூலோகத்தின் மன்னனும் ஸ்ரீராமர் அவதரித்த ரகு வம்சத்தின் முன்னோடியுமான மன்ன இக்ஷ்வாகுவிற்கு இதனை அளித்தார்." எனவே, மனித சமுதாயத்தில் இக்ஷ்வாகுவின் காலத்திலிருந்தே பகவத் கீதை இருந்து வந்துள்ளது.


4,32,000 வருடங்கள் நீடிக்கும் கலி யுகத்தில் நாம் தற்போது ஐயாயிரம் வருடங்களை மட்டுமே கடந்துள்ளோம். கலி யுகத்திற்கு முந்தைய யுகம் துவாபர யுகம் (8,00,000 வருடங்கள்), அதற்கு முந்தைய யுகம் திரேதா யுகம் (12,00,000 வருடங்கள்). இவ்விதமாக சுமார் 20,05,000 வருடங்களுக்கு முன்பே, தனது சீடனும் மகனுமான பூலோக மன்னன் இக்ஷ்வாகுவிற்கு மனு இதனைக் கூறியுள்ளார். தற்போதைய மனுவின் ஆயுட்காலம் 30,53,00,000 வருடங்கள் என கணக்கிடப்பட்டுள்ளது, அதில் 12,04,00,000 வருடங்கள் கழிந்துள்ளன. மனுவின் பிறப்பிற்கு முன்பே, பகவானால் அவரது சீடனும் சூரிய தேவனுமான விவஸ்வானுக்கு கீதை கூறப்பட்டதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் ஏறத்தாழ 12,04,00,000 வருடங்களுக்கு முன் கீதை உபதேசிக்கப்பட்டதாக கணக்கிடலாம். மனித சமுதாயத்திலோ இஃது இருபது இலட்சம் வருடங்களுக்கு மேல் வழக்கில் இருந்து வந்துள்ளது. ஏறத்தாழ 5000 வருடங்களுக்கு முன் அர்ஜுனனிடம் பகவான் இதனை மீண்டும் உபதேசித்தார். கீதையின் கூற்றின்படியும் கீதையை உரைத்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றின்படியும், இதுவே கீதையின் சரித்திரம் பற்றிய தோராயமான கணக்கீடு. விவஸ்வான் சூரிய வம்ச சத்திரியர்களின் தந்தை என்பதால் பகவத் கீதை அவருக்கு வழங்கப்பட்டது. முழுமுதற் கடவுளால் கூறப்பட்டதால், இந்த பகவத் கீதை வேதங்களுக்குச்; சமமான ஞானம், அபௌருஷேய, மனித சக்திக்கு அப்பாற்பட்ட தெய்வீக ஞானம் எனப்படும். வேதக் கட்டளைகள் மனித வியாக்கியானமின்றி உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள்ளப்படுவதைப்போல, கீதையும் பௌதிக வியாக்கியானங்களின்றி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். வீண் வாதம் செய்யும் ஏட்டறிஞர்கள் தங்களது சுய வழியில் கீதையைப் பற்றி கற்பனை செய்யலாம், ஆனால் அஃ;து உண்மையான பகவத் கீதையாகாது. எனவே, கீதையை சீடப் பரம்பரையின் மூலம் உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள்ள வேண்டும். பகவான் இதனை சூரியதேவனுக்கும், சூரியதேவன் தனது மகனான மனுவிற்கும், மனு தன் மகன் இக்ஷ்வாகுவிற்கும் இதனை உபதேசித்ததாக இங்கு விளக்கப்பட்டுள்ளது.


( ஶ்ரீமத் பகவத்கீதை 4.1)


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


https://t.me/suddhabhaktitami

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more