பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் விருந்தாவன பயணம் ( ஜெகந்நாத காட் (படிதுறை)

 


ஜெகந்நாத காட் (படிதுறை)


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



இருநூறு வருடங்களுக்கு முன்னர் யமுனா நதி வம்சி வட்டா நதிகரையில் இராமானந்தி வைஷ்ணவர் பரம்பரையில் வரும் ஹரிதாஸ் என்னும் பக்தர் வசித்து வந்தார். அவர் பகவான் ஜெகன்நாதரை தினந்தோறும் மனதில் தியானித்து வந்தார். ஒரு நாள் இரவு ஹரிதாஸ்சரின் கனவில் பகவான் ஜெகன்நாதர் தோன்றி தான் யமுனா நதிக்கரையில் வாசம் செய்ய மிகவும் விரும்புவதாகவும் ஹரி தாசரின் நித்திய வழிபாட்டை ஏற்றுக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும் பகவான் ஜெகன்நாதர் ஹரிதாசரிடம் " தன்னுடைய தாரு பிரம்ம ( மரத்தினால் ஆன விக்ரகம்) ரூபத்தை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் செய்யும் லீலை பூரியில் நடைபெறும். அச்சமயத்தில் புதிய விக்ரகம் செய்து பழைய விக்ரகங்களை பூமிக்குள் வைத்து மூடுவர். அச்சமயம் பல்வேறு சடங்குகள் விமர்சியாக நடைபெறும். சடங்குகள் முடிவதற்கு முன் நீ அவ்விடம் சேர வேண்டும். அந்த பழைய விக்ரகத்தை விருந்தாவனத்திற்கு எடுத்து வந்து யமுனை கரையில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டார். இது எனது கட்டளை என்று அரசரிடம் தெரிவித்துவிடு.பின்னர் நான் இங்கு வரும் ஏற்பாட்டை அவர் பார்த்து கொள்வார். எனவே உடனே புறப்பட்டு செல் என்றார். கனவு கலைந்து துயில் எழுந்த ஹரிதாஸ், பக்தர்களுடன் ஆரவாரமாக பகவானின் திரு நாமத்தை ஜெபம் செய்து கொண்டே மகிழ்ச்சியுடன் பூரியை நோக்கி பயணம் மேற்கொண்டார்.

ஒரிசா மாநிலத்தில் உள்ள பூரி திருத்தலம் அடைந்த ஹரிதாசர் நேராக பகவான் ஜெகநாதரின் திருக்கோவிலை சென்று அடைந்தார்.

அங்கு திருக்கோவிலின் அர்ச்சகர்களை அணுகி தனக்கு பகவானின் பழைய விக்ரகத்தை எடுத்துச்செல்ல அனுமதி வேண்டும் என்று விண்ணப்பித்தார். இதைக் கேட்ட அர்ச்சகர்கள் எவ்வித தயக்கமுமின்றி உடனே மறுப்பு தெரிவித்தனர்.மேலும் அவர்கள் பூரி அரசனை அணுகுமாறு கூறினார்கள்.

அரசனிடம் ஹரிதாசர் விண்ணப்பித்த போதும் அவர் மறுப்பு தெரிவித்ததோடு இல்லாமல் பழைய ஜெகநாதரின் விக்ரகங்களை விதிமுறைப்படி சமாதியில் கொண்டு செல்லப்படும் என்றும் அது தொன்று தொட்டு வரும் சம்பிரதாயம் என்றும் கூறிவிட்டார். மன்னரின் மறுப்பை அறிந்தபின் ஹரிதாசர் பூரி கடற்கரையில் உண்ணா விரதம் நோன்பு மேற்கொள்ள உறுதி கொண்டார்.

அன்று இரவு பகவான் ஶ்ரீ ஜெகன்நாதர் மன்னரின் கனவில் தோன்றி " மன்னனே எனது கட்டளையின் பேரில் இங்கு வந்த எனது பக்தனின் விருப்பத்தை நிராகரிக்க உனக்கு எப்படி துணிவு வந்தது ? எனது பக்தன் எனது விருப்பம் நிறைவேற்ற முடியாமல் போனதால் கடற்கரையில் உண்ணா விரதம் இருந்து உயிர் விட தீர்மானித்திருகிறான். உடனே அவனை அழைத்து எனது விக்ரகத்தை அவனிடம் ஒப்படைக்க வேண்டும். அதுமட்டுமின்றி விருந்தாவனம் கொண்டு செல்ல சகல வசதிகளுடன் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார்.

கனவு கலைந்தவுடன் மன்னர் உடனே ஹரிதாசை சந்திக்க ஏற்பாடு செய்து, கனவில் நடந்ததை கூறி பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் தாருபிரம்ம விக்ரகத்தை எடுத்துச்செல்ல அனுமதித்தார்.

பகவான் ஶ்ரீ ஜெகன்நாதர், ஶ்ரீ பலதேவர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோர்களின் மூர்த்திகளை ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஏற்றி, சங்க நாதங்கள் முழங்க, பிராமணர்களில் வேத மந்திரம் ஓத , வழிபாட்டுடன், நாமஸசங்கீர்தனத்துடன் படைவீரர்களின் பாதுகாப்புடனும் விருந்தாவனம் நோக்கி புறப்பட்டனர்.

பகவானின் விருப்பத்திற்கேற்ப யமுனை நதிக்கரையில் ஸ்தாபிதம் செய்யப்பட்டார்; அவ்விடம் இன்று ஜெகன்நாத காட் என அழைக்கப்படுகிறது.

ஹரே கிருஷ்ணா ! 


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


Telegram


🍁🍁🍁🍁🍁


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇


https://t.me/suddhabhaktitamil


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/udvegakathaigal


Whatsapp :- 


🍁🍁🍁🍁🍁


https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR


உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏



Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more