சஞ்சலமான நிலையை (மனோ வேகம்) எவ்வாறு கட்டுப்படுத்துவது?
ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் மனதைப் பதிக்கும் போது அதன் அமைதியற்ற அல்லது சஞ்சலமான நிலை (மனோ வேகம்) கட்டுப்படுத்தப்படுகிறது. சைதன்ய சரிதாம்ருதம் (மத்திய 22.31.) பின்வருமாறு கூறுகின்றது.
கிருஷ்ண-ஸூர்ய–ஸம; மாயா ஹய அந்தகார
யாஹான் கிருஷ்ண, தாஹான் நாஹி மாயார அதிகார
கிருஷ்ணர் சூரியனுக்கு ஒப்பானவர், மாயை இருளுக்கு ஒப்பானது. சூரியன் பிரசாகிக்கும் போது அங்கு இருளுக்கு இடமில்லை. அதைப்போலவே, மனதில் கிருஷ்ணர் இருக்கும்போது, மாயையின் வசீகரத்தால் மனம் குழப்பமடைவதற்குச் சாத்தியமில்லை. எல்லா ஜடச் சிந்தனைகளையும் இல்லாமல் செய்துவிடும் யோக முறையானது உதவி செய்யாது. மனதை சூன்யமாக ஆக்கிக் கொள்ள முயல்வது செயற்கையானதாகும். சூன்யம் நிலைத்திருக்காது. ஆனால் கிருஷ்ணருக்கு எப்படி சிறந்த முறையில் தொண்டு செய்வது என்று எப்போழுதும் கிருஷ்ண உணர்விலேயே ஒருவர் ஈடுபட்டு இருப்பாராயின், இயற்கையாகவே ஒருவரது மனது கட்டுப்படுத்தப்படுகின்றது.
- (உபதேசாமிருதம்)
Comments
Post a Comment