அரசர் யுதிஷ்டிரரின் ஆட்சியின் போது, நாட்டு மக்களின் பிரச்சனைகளை பீமன் தீர்த்து வைத்தார். அதனால், எவருக்கேனும் கேள்விகளோ, பிரச்சனைகளோ இருந்தால், அவரிடம் மட்டுமே உதவி நாடி வந்தனர். ஒரு நாள், விசித்திரமான சம்பவம் ஒன்றை கவனித்ததாக ஒரு மனிதன் கூறினான். அவன் வீட்டு வேலி மற்றொருவனின் பகுதியில் நகர்ந்திருப்பதாகவும், அதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் கூறினான். சாதாரணமாக, அரக்கர்களின் தொல்லைகளால் அவதிப்பட்ட மக்களை காப்பாற்றுவது பீமனுக்கு சகஜமாக இருந்தது; ஆனால், இதைப் போன்ற விஷயங்களைக் கண்டு பீமனுக்கு வியப்பாக இருந்ததால், அவனை யுதிஷ்டிரரிடம் செல்லும் படியாக அவர் கூறினார்.
அதே தினத்தில், இன்னொரு விசித்திரமான சம்பவமும் நடந்தது. வேறொருவன் தன் கதையை இவ்வாறு கூறினான் – அவனிடம் ஒரு பானை நிறைய தண்ணீர் இருந்தது. அதை முதலில் சிறிய பானைகளில் நிரப்பிய பிறகு, மறுபடியும் அச்சிறிய பானைகளிலிருந்து பெரிய பானைக்குள் நிரப்பிய போது, பாதி அளவு தண்ணீர் மட்டுமே இருந்தது. இதற்கும் பதில் ஒன்றுமே தெரியாமல் தவித்த பீமன், அம்மனிதனையும் யுதிஷ்டிரரிடம் சென்று கேட்குமாறு அனுப்பினார். கூடிய விரைவில், மூன்றாவதாக ஒரு மனிதன் மற்றொரு விசித்திரமான சம்பவத்துடன் பீமனிடம் வந்தான். ஒரு யானையின் பெரிய உடம்பு, ஊசியின் சிறிய துளை வழியாக செல்கிறது; ஆனால், ஆச்சரியப்படும் வகையில் யானையின் வால் அந்த ஊசியின் துளையில் சிக்கிக் கொண்டு விடுகிறது, என்று அந்த மனிதன் புகார் கூறினான். பீமன் மறுபடியும் அம்மனிதனை யுதிஷ்டிரரிடம் அனுப்பி வைத்தார். தற்சமயம், நான்காவதாக ஒரு மனிதன் அங்கு வந்து, தெருவில் ஒரு பெரிய பாறையைப் பார்த்ததாகக் கூறினான். அப்பாறையை வலிமையுள்ள சில மனிதர்களால் நகர்த்த முடியவில்லை; ஆனால், ஒரு சாது கோல் ஒன்றை அசைத்து, அப்பாறையை நகர்த்தியதாகக் கூறினான். இந்த விசித்திரமான சம்பவங்களைப் பார்த்த பீமனின் ஆர்வம் தூண்டி விடப் பட்டது. அவரும் இம்மனிதர்களுடன் யுதிஷ்டிரரிடம் சென்று, இந்த விசித்திரமான சம்பவங்களுக்கு காரணத்தை தெரிந்து கொள்ள விரும்பினார்.
எல்லோரும் சேர்ந்து யுதிஷ்டிரரிடம் சென்று, இந்த சந்தேகங்களைப் பற்றி விசாரித்தனர். அதற்கு அவர், இந்த சம்பவங்கள் அனைவற்றும் வரப் போகின்ற கலியுகத்தை குறிப்பிடுகின்றன என்று கூறி, கீழ்கண்டவாறு விளக்கினார்.
ஒருவனின் வேலி மற்றொருவனின் பகுதியில் நகர்ந்த முதலாவது சம்பவத்தில், மற்றவர்களின் உடைமைகளின் மீது ஆசைப்படுவதை குறிக்கின்றது. மன வேதனைகள் மற்றும் கோபம் போன்ற உணர்வுகளுக்கு வழி வகுத்து, மற்றவர்களைப் போல நம்மிடம் இல்லையே என்ற எண்ணங்கள் இருப்பதனால், அதை அடைவதற்கு தகாத வழிகளை தேர்ந்தெடுத்தனர்.
( வேலி பயிரை மேயும் அரசாங்கம் மக்களை ஏமாற்றும் )
பெரிய பானையிலிருந்து சிறிய பானைகளுக்கு தண்ணீரை ஊற்றி, பிறகு சிறிய பானைகளிலிருந்து பெரிய பானைக்கு ஊற்றும் போது பாதி அளவு தண்ணீர் மட்டுமே இருக்கும் இரண்டாவது சம்பவத்தில், நாம் செலுத்தும் அன்பு / கருணை / உதவியை ஒப்பிடும் போது, நமக்கு மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் அன்பு 50% மட்டுமே இருக்கிறது.
ஒரு தந்தை 5 குழந்தை காப்பாற்றுவார்கள். 5 குழந்தை தாய் தந்தையை காப்பாற்ற முடியாது
ஒரு யானையின் பெரிய உடம்பு ஊசியின் சிறிய துளை வழியாக செல்கிறது; ஆனால், ஆச்சரியப்படும் வகையில் யானையின் வால் அந்த ஊசியின் துளையில் சிக்கிக் கொண்டு விடுகிறது என்ற மூன்றாவது சம்பவத்தில், பெரிய தவறுகளை செய்பவர்கள் தப்பித்துவிடுவார்கள் சிறுதவறு மாட்டிக் கொள்வார்கள்.
ஒரு பெரிய பாறையை வலிமை மிகுந்த மனிதர்களால் நகர்த்த முடியாத நிலைமையில், ஒரு சாது தன் கோலால் சுலபமாக நகர்த்தி விட்டார். இந்த சம்பவம், நாம சங்கீர்த்தனத்தின் மகிமையால், பாவங்களை நிவர்த்தி செய்ய முடியும் என்பதைக் குறிக்கின்றது.
பாவம் சிறு கயிறு ஹரிநாமம் பாவங்கள் தூள் தூள் ஆக்கும்
மேலும் யுதிஷ்டிரர், கலியுகத்தில் அளவு கடந்த குறைபாடுகள் இருக்கின்றன, ஆனாலும் நாம சங்கீர்த்தனம் செய்வதனால் ஒருவனுக்கு மோக்ஷம் கிடைக்கும் என்பது ஒரு நல்ல விஷயம். என்றார்.
இதை ஶ்ரீமத் பாகவதத்தில் 12.3.51ல்
கலேர் தோஷ நிதே ராஜன் அஸ்தி ஹ்யேகோ மஹான் குண: கீர்த்தனாத் ஏவ கிருஷ்ணஸ்ய முக்த ஸங்க: பரம் வ்ரஜேத்
அரசரே, இக்கலியுகம் கடலளவு குற்றங்கள் நிறைந்தது என்றாலும்,இந்த யுகத்தில் ஒரு நல்ல குணமும் இருக்கவே செய்கிறது. ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்பதாலேயே, ஒருவனால் பௌதிக பந்தத்திலிருந்து விடுபட்டு உன்னத இராஜ்யத்திற்கு ஏற்றம் பெற முடியும்.
கலி யுகத்தில் கடலளவு குற்றங்கள் இருந்தாலும் இதில் மிகச்சிறந்த நன்மை ஒன்று உள்ளது. கீர்தனாத் ஏவ கிருஷ்ணஸ்ய முக்த ஸங்க: பரம் வ்ரஜேத்: எளிமையான முறையில் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்தால் போதும், கலி யுகத்தின் எல்லா தொல்லைகளிலிருந்தும் விடுபட்டு, முக்தி பெற்று இறைவனின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்.
.
ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம் கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ கதிர் அன்யதா
சண்டைகளும் சச்சரவுகளும் நிறைந்த கலி யுகத்தில் முக்தியைப் பெற ஒரே வழி பகவான் ஹரியின் நாமத்தை உச்சரிப்பது மட்டுமே. இதைத் தவிர வேறு வழியில்லை, வேறு வழியில்லை, வேறு வழியில்லை.”
எனவே, கிருஷ்ண உணர்வில் இருங்கள்! வாழ்வில் பக்குவமடையுங்கள்! மிக்க நன்றி.
ஹரே கிருஷ்ண!
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment