'ஸ்ரீல பிரபுபாதா' என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் தெய்வத்திரு அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா அவர்கள் இஸ்கான் இயக்கத்தை நிறுவியவர் ஆவார்.
1896-ல் நம் பாரத தேசத்தின் கல்கத்தாவில் பிறந்தவர். இவரது தாய் தந்தையர் இவருக்கு இட்ட பெயர் 'அபய்சரண்தே '. அதாவது கிருஷ்ணரை சரணடைந்தவர் என்று பொருள். பெயருக்கேற்றார் போல் சிறுவயது முதலே, இவரது தந்தை கௌர்மோகன் கிருஷ்ண பக்தியுடன் இவரை வளர்த்தார். பல பல கிருஷ்ண பக்தியை ஊக்கவிக்கும் கதைகளை கேட்டு வளர்ந்த அபயின் மனதை கவர்ந்த விஷயம் வருடா வருடம் கல்கத்தாவில் நடைபெறும் ஸ்ரீஜகந்நாதரின் ரதயாத்திரை உத்ஸவம்.
ராதா கோவிந்தா கோவிலில் நடைபெறும் ரதயாத்திரைதான் கல்கத்தாவிலேயே பெரிய ரத யாத்திரையாகத் திகழ்ந்தது. இந்த ரதயாத்திரையில் கிருஷ்ணர் பலராமர் சுபத்ரா ஆகியோர் மூன்று தனித்தனி ரதங்களில் பவனி வந்தனர். ரதங்கள் ஹாரிசன் ரோடிலிருந்து கிளம்பி சிறிது தூரம் பயணம் செய்து விட்டு திரும்பி வந்து விடும். ரத யாத்திரையன்று ராதா கோவிந்தா கோயில் நிர்வாகிகள் ஏராளமாக பிரசாதம் செய்து ஜனங்களுக்கு விநியோகம் செய்வார்கள்.
ரதயாத்திரை என்பது ஆண்டுதோறும் இந்தியாவெங்கிலும் நடக்கும் நிகழ்ச்சி. ஆனால் ரதயாத்திரைகளுள் முதன்மையானதும் பெரியதும் ஆன ரதயாத்திரை பூரியில் நடக்கும் ரதயாத்திரை. இதில் லட்சக்கணக்கில் மக்கள் கடலாகத் திரண்டு பங்கு கொள்கிறார்கள். கிருஷ்ணர் மதுராவிலிருந்து பிருந்தாவனத்துக்கு சென்றதன் ஞாபகார்த்தமாக இது கொண்டா டப்படுகிறது. ஆயிரக்கணக்கான வருடங்களாக சுமார் 45 அடி உயர ரதங்களை மரத்தில் மட்டுமே உருவாக்கி அவற்றில் ஜெகன்நாதர் பலதேவர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோரை அமர்த்தி மக்கள் வடம் பிடித்து இழுத்து மகிழ்ந்து வருகிறார்கள். சைதன்ய மஹாப்பிரபு நானூறு ஆண்டுகளுக்கு முன் பூரி ரதயாத்திரையில் ஹரே கிருஷ்ணா மஹாமந்திரத்தைப் பாடி பரவசமுடன் தன் சகாக்களுடன் ஆடினார் என்பதை அபய் கேட்டறிந்தார். சில சமயங்களில் பூரியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ரயில்வே கால அட்டவணையை வாங்கிப் பார்ப்பார். பூரிக்கு கல்கத்தாவிலிருந்து டிக்கட் எவ்வளவு என்று விசாரிப்பார். எப்படி பணம் சேர்த்து பூரி சென்று ஜெகந்நாத்தைப் பார்ப்பது என்று யோசனை செய்வார்.
மேலும் அபய் தானே ஒரு சிறிய ரதம் ஒன்றை செய்து அதில் சிறிய ஜெகந்நாதர் பலதேவர் மற்றும் சுபத்ரா தேவியை வைத்து ரதயாத்திரையை நடத்த ஆசைப்பட்டார். இதற்கு தன் தந்தை கௌர்மோகன் அவர்களின் உதவியை நாடினார். அவர் ஒரு சிறிய மூன்றடி உயர பொம்மை ரதத்தை ஒரு நாள் வாங்கி வந்து கொடுத்தார். தந்தையும் மகனுமாக இந்த ரதத்தை அலங்கரித்து ஏறத்தாழ பூரி ரதம் போன்றே இருக்கும்படி செய்தனர். தன்னுடைய இந்த ரதயாத்திரையில் உதவுவதற்கு அபய் தன் நண்பர்களையும், சகோதரி பவதாரிணியையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டார். அக்கம்பக்கத்து வீடுகளுக்கு சென்று அங்குள்ள தாய்மார்களை எப்படியோ பேசி விதவிதமாக பிரசாதமும் தயார் செய்யும்படி செய்து விட்டார் அபய். பூரி ரத யாத்திரையைப் போலவே அபயின் ரதயாத்திரை தொடர்ந்து எட்டு நாட்கள் நடந்தது. அபயின் குடும்பத்தவர் அனைவரும் ரதயாத்திரையைக் காண கூடினர். அபயும் மற்ற குழந்தைகளும் ரதத்தை ஊர்வலமாக கர்த்தாளம், மிருதங்கம் ஆகியவை முழங்க பஜனை செய்தவாறு இழுத்துச் சென்று கோலாகலமாக கொண்டாடினர். அடுத்த சில தினங்கள் தாங்கள் கொண்டாடிய இந்த ரதயாத்திரை உற்சவம் பற்றி ஒருவருக்கு ஒருவர் பேசி தங்களது ஆனந்தத்தை வெளிப்படுத்தினார்கள். பின்னர் ஜெய் ஜெகந்நாத் ஜெய் பலதேவ் ஜெய் சுபத்ரா என்று கோஷம் எழுப்பினர்.
அபய் பிற்காலத்தில் இஸ்கான் இயக்கத்தை நிறுவி அகில உலகம் எங்கும் கிருஷ்ண பக்தி இயக்கத்தை உருவாக்கி பல கோயில்களை ஸ்தாபித்து .பல திருவிழா மற்றும் பண்டிகைகளை வெகு விமரிசையாக கொண்டாடினார். ஒவ்வொரு திருவிழா சாஸ்திர நியமங்களுடன் எப்படி கொண்டாட வேண்டும் என்ற தகவல்களை கற்று தந்து அவர்களை ஊக்கம் அளித்தார். தமது சீடர்கள் அனைவரும் அமெரிக்காவில் பெரிய பெரிய ரதயாத்திரைகளை நடத்திய போதும், பல நாடுகளில் இஸ்கான் கோயில்களை நிறுவி அவைகளில் ராதாகிருஷ்ண விக்ரகங்களை பிரதிஷ்டை செய்தபோதும் இவைகளையெல்லாம் தன்னுடைய தந்தையிடமிருந்து தெரிந்து கொண்டதாகச் மிகவும் பணிவாக சொன்னார்.
ஹரே கிருஷ்ணா 🙏
எல்லா புகழும் ஶ்ரீல பிரபுபாதருக்கே🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment