பகவான் ஶ்ரீ ஜெகந்நாதர் ரத யாத்திரைக்கு பின் குண்டிசா கோவிலில் ஒரு வார காலம் உல்லாசமாக இருந்து, மீண்டும் ஶ்ரீ கோவிலை நோக்கி உல்டா ரதயாத்திரை நிகழ்வு நடப்பது ஐதீகம். இந்த உல்டா ரதயாத்திரைக்கு அடுத்த நாள் அதாவது 11 ஆவது நாளான ஏகாதசி அன்று மூன்று விக்கிரகங்களுக்கும் அதர பான என்ற புத்துணர்ச்சி ஊட்டும் பானம் வழங்கப்படுகிறது. அதர என்றால் உதடு, பான என்றால் பால் சர்க்கரை, பாலாடை ,வாழைப்பழம், கற்பூரம், உலர் கொட்டைகள், மற்றும் மிளகு போன்றவற்றை கொண்டு உண்டாக்கப்பட்ட இனிப்பான வாசனையான பானம் என்று பொருள்படும். இந்தப் பொருள்கள் தவிர துளசி போன்ற புனிதமான மூலிகைச் சாறுகள் இந்த பானத்தில் சேர்க்கப்படுகிறது. இந்த பானங்கள் மூன்று விக்கிரகங்களின் உதடுகளை சென்றடையும் வகையில் மிகப்பெரிய மண் குவளைகளின் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த பானம் ஓன்பது குவளைகளில் நிரப்பப்பட்டு ஒவ்வொரு விக்கிரகங்களுக்கும் தலா மூன்று குவளைகள் வீதம் அந்தந்த தேர்களில் சமர்ப்பிக்கப்படுகிறது.
கோயில் பூஜாரிகளால் சோடச உபசார் எனும் பூஜையின் மூலம் விக்கிரகங்களுக்கு இந்தப் பானம் படைக்கப்படுகின்றது. பூஜை உபச்சாரம் முடிந்தவுடன் அங்குள்ள சேவகர்களால் பானைகள் உடைக்கப்படுகின்றன. இதனால் பானம் தேர் முழுவதும் சிதறி பரவுகிறது. அதாவது இங்குள்ள ஒரு நம்பிக்கை என்னவென்றால் பல தீய சக்திகள் பேய், பிரேதங்கள், மற்றும் அதிருப்தி அடைந்த ஆத்மாக்கள் இந்த தேர் திருவிழாவின் போது விக்கிரகங்களை பின் தொடர்வதாக நம்பப்படுகிறது. சடங்கின் படி, இந்த அதர பானம் பக்தர்களுக்கும் மற்றும் அங்குள்ள சேவகர்களுக்குமானதும் அல்ல. மாறாக அது மூன்று ரதங்களையும் பின் தொடர்ந்து வரும் தீய சக்திகள் சிறு தேவதைகள் மற்றும் உப தேவதைகளுக்குமானதாகும். வேண்டுமென்றே தான் இந்தப் பானைகள் ரதங்களில் வைத்து உடைக்கப்படுகிறது. ஏனெனில் இந்தப் பானம் பக்தர்களின் நுகர்வுக்கானது அல்ல. மேலும் கண்ணுக்குத் தெரியாத தீய சக்திகள் மற்றும் உப தேவதைகளால் இப் பானம் நுகர பட்டு அவை சித்தி அடைவதை, இந்த சடங்கின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.
இந்த நிகழ்வு பகவான் ஶ்ரீ ஜெகந்நாதர், அனைத்து ஜீவாத்மாவிற்கும் ( தேவர்கள், மனிதர்கள், பறவைகள், விலங்குகள், மற்றும் பிரேத பிசாசுகளுக்கும்...... ) இந்த ரதயாத்திரை மூலம் அனுகிரகம் வழங்கி அனைவரும் நற்கதியடைய தனது காரணமற்ற கருனையை பொழிகிறார்.
ஜெய் ஜெகந்நாத்.
![🙏](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/td9/1.5/16/1f64f.png)
ஜெய் பலதேவ்
![🙏](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/td9/1.5/16/1f64f.png)
ஜெய் சுபத்ரா தேவி
![🙏](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/td9/1.5/16/1f64f.png)
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment