🍁அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் (சூரிய உதயத்திற்கு 1 1/2 மணி நேரத்திற்கு முன்பு) எழுந்து குளித்த பிறகு, மங்கள ஆரத்தி செய்து அதன் பின்னர் ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.
🍁தினமும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு நெய் தீபமேற்றி வணங்கி வர வேண்டும்.
🍁உயர்ந்த வைஷ்ணவர்களின் சங்கத்தில் தினமும் ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்க முயற்சி செய்தல் நன்று.
🍁ஜபம் செய்யும் போதும் கீர்த்தனத்தின் போதும் கிருஷ்ணரின் திருநாமத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை அதிகமாக ஜபம் செய்வதும், குடும்பத்தினருடன் இணைந்து கீர்த்தனம் செய்வதும் சிறந்தது.
🍁மாதம் முழுவதும் பிரம்மசரிய விரதம் கடைபிடித்தல் அவசியம்.
🍁 நான்கு விதிமுறைகளை பின்பற்றுதல்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
(1) மது அருந்தாமை
( மது அருந்துபவன் தவ வலிமையை இழந்துவிடுகிறான். அதாவது, புலன்களைக் கட்டுப்படுத்தும் திறனை இழக்கின்றான். )
(2) தகாத பாலுறவில் ஈடுபடாமை
( சிற்றின்ப வெறியின் காரணத்தால் தகாத உடலுறவில் ஈடுபடுபவன் அகத்தூய்மை, புறத்தூய்மை என இரண்டையும் இழக்கிறான். )
(3) மாமிசம் உண்ணாமை
( வயிற்றை நிரப்புவதற்காக அப்பாவி மிருகங்களைக் கொன்று உண்பவன் தயை (கருணை) என்னும் நற்குணத்தை இழந்துவிடுகிறான். )
(4)சூதாடாமை
( சூதாட்டத்தில் ஈடுபடுபவன் உண்மை என்னும் உயர்ந்த குணத்தைக் கைவிடுகிறான்.
(இதனால் இந்த நான்கு தீய செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்பது நியமமாக உள்ளது.)
🍁 உங்களுக்குப் பிடித்தமான உணவு வகையினை இந்த மாதங்களில் கைவிடுதல் நன்று. நல்ல உடல் ஆரோக்கியம் இருந்தால், தினசரி ஒருவேளை மட்டும் சாப்பிடுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
🍁 விரத காலங்களில் அசைவம் உண்ணக்கூடாது
🍁சிரவண மாதத்தில் கீரை உண்ணக்கூடாது .
🍁பாத்ர மாத்தில் தயிர் உண்ணக்கூடாது .
🍁ஆஸ்வின மாதத்தில் பால் அருந்தக் கூடாது.
🍁கார்த்திக மாதத்தில் மீன், மாமிசம் , மற்றும் இதர அசைவ பொருட்களை மற்றும் மசூர் பருப்பும் உளுத்தம் பருப்பும் உண்ணக் கூடாது.
🍁துளசி தேவிக்கு தினமும் ஆரத்தி செய்து கீர்த்தனம் பாடி, ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுவதற்கு பிரார்த்தனை செய்யவும்.
🍁தூய பக்தர்களுக்கு தானம் வழங்குதல் நன்று.
🍁தினமும் சுவையான பதார்த்தங்களைப் படைத்து கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யுங்கள்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment