யசோமதி நந்தன ப்ரஜ பரோ நாகர
ஸ்ரீ நாம கீர்த்தனம்
🔆🔆🔆🔆
யசோமதி நந்தன ப்ரஜ பரோ நாகர
கோகுல ரஞ்சன கான
கோபிபராண தன மதன மனோஹர
காலிய தமன விதான
அமல ஹரிநாம் அமிய விலாசா,
விபின புரந்தர நவீன நாகர போர
பம்சிவதன சுவாசா
ப்ரஜ-ஜன-பாலன அசுர-குல-நாஷன
நந்த கோதன ராகோ வாலா
கோவிந்த மாதவ நவநீத தாஸ்கர
சுந்தர நந்த கோபால
யாமுனா தடசர கோபிவசனஹர
ராஸ ரஸிக கிருபாமோய
ஸ்ரீராதா வல்லப ப்ருந்தாவன நடபர
பகதி விநோதாஸ்ரய
பகவான் க்ருஷ்ணர் யசோதையின் அருமைப்புதல்வர், விரஜவாசிகளின் உன்னத திவ்ய காதலன், கோகுலத்தின் ஒளிவிளக்கு, கோபிகளின் உயிர்செல்வம், மன்மதனின் மனத்தையும் அவர் கவருகின்றவர். காலியனெனும் பாம்பைத் தண்டித்தவர்.
அப்பழுக்கற்ற துய பகவான் ஹரியின் புனித நாமங்கள் இனிமை நிறைந்தவை, அமிர்தமயமான லீலைகள் நிறைந்தவை, க்ருஷ்ணர் விரஜ மண்டலத்திலுள்ள பன்னிரு காடுகளுக்கு தலைவன். எப்போதும் இளமையானவர், காதலர்களுள் சிறந்தவர். புல்லாங் குழலை ஊதிக்கொண்டிருப்பவர் மிக அழகிய ஆடைகளை உடையவர்..
விரஜவாசிகளின் காவலன் பல்வேறு அசுர குலங்களை அழிப்பவர். நந்த மஹாராஜாவின் பசுச்செல்வத்தின் பாதுகாவலன் பசுக்களுக்கும் நிலத்திற்கும் ஆன்மீக புலன்களுக்கும் இன்பத்தைக் கொடுப்பவர், அதிர்ஷ்ட தேவதையான லக்ஷ்மியின் கணவன் வெண்ணைய் திருடன் நந்தமஹாராஜாவின் அழகிய இடையவர் சிறுவன்.
க்ருஷ்ணர் யமுனை ஆற்றின் கரையில் விளையாடித்திரிபவர் ப்ரஜவாசிகளான இளங்கோபிகள் நீராடிக்கொண்டிருக்கும் போது அவர்களது ஆடைகளை திருடியவர், ராஜ நடனத்தின் சுவையை அனுபவிப்பவர்,. அவர் மிகக் கருணை நிறைந்தவர். ஸ்ரீமதி ராதாராணியின் அன்பிற்குரிய காதலன். விருந்தாவனத்தில் சிறப்பாக நடனம் ஆடுபவர். பக்திவிநோத தாகூரின் புகலிடமாக விளங்குபவர்,.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami.
Comments
Post a Comment