ஸகீ விரிந்தே விஜ்ஞப்தி
(ஸகிகளுக்கான பிரார்த்தனை)
(அருளியவர் :- ஸ்ரீல நரோத்தம தாஸ தாகூர்)
ராதா க்ருஷ்ண ப்ராண மோர
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பதம் 1
ராதா கிருஷ்ண பிராண மோர ஜுகல கிஷோர
ஜீவனே மரணே கதி ஆர நாஹி மோர
பதம் 2
காலிந்தீர கூலே கேலி கதம்பேர வன
ரதன பேதீர உபர வஸாப துஜன
பதம் 3
ஷியாம கௌரி அங்கே திபோ (சுவா) சந்தனேர கந்த
சாமர டுலாபே கபே ஹேரி முக சந்த்ர
பதம் 4
காதியா மாலதீர் மாலா திபே தோஹார கலே
அதரே துலியா திப கற்பூர தாம்பூலே
பதம் 5
லலிதா விஷாக ஆதி ஜத சகி விரிந்த
ஆஜ்ஞாய கரிப ஸேவா.சரணாரவிந்த
பதம் 6
ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய பிரபுர் தாஸேர அநுதாஸ
சேவா அபிலாஷ கரே நரோத்தம தாஸ
பாடலின் பொருள்
(1) தெய்வீகக் காதலர்களான ராதையும் கிருஷ்ணரும் எனது வாழ்வின் உயிர்மூச்சாவர். எனது வாழ்விலும் மரணத்திலும் இவர்களைத் தவிர வேறு அடைக்கலம் இல்லை.
(2) யமுனை நதிக்கரையில் அமைந்த, சிறிய கதம்ப மரங்கள் நிறைந்த வனத்தில், இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் இந்த தெய்வீகக் காதலர்களை அமரச் செய்வேன்.
(3) அவர்களின் கறுப்பு (கருநீல) மற்றும் பொன்னிற திருமேனியில் சூயா (ஒரு வகையான வாசனை திரவியம்) கலந்த சந்தனத்தைப் பூசி, அவர்களுக்கு சாமரம் வீசுவேன். ஆஹா, நிலவைப் போன்ற அவர்களது திருமுகத்தை எப்போது காண்பேன்?
(4) மாலதி மலர்களைக் கொண்டு மாலை தொடுத்து அவர்களின் கழுத்தில் அணிவிப்பேன். அவர்களின் தாமரைத் திருவாய்க்கு கற்பூர தாம்பூலம் வழங்குவேன்.
(5) லலிதா, விசாகா முதலிய ஸகிகளின் அனுமதியுடன் ராதா கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளுக்கு நான் சேவை செய்வேன்.
(6) ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய பிரபுவின் சேவகருடைய சேவகனான இந்த நரோத்தம தாஸன் அந்த தெய்வீக ஜோடிகளின் சேவைக்காக ஏங்குகிறான்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment