உபாக்யானே உபதேசம்
( அருளியவர் :- ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி )
மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர்
🔆🔆🔆🔆🔆🔆🔆
இரவில் சூரியன்
🔆🔆🔆🔆🔆🔆🔆
ஒரு முறை செல்வ செழிப்பு மிக்க நிலக்கிழார் ஒருவர், அமாவாசை இரவன்று வானில் சூரியனை காண வேண்டும் என்று விருப்பம் கொண்டார். அவரது துதிபாடுபவர்கள் சிலர், "ஐயா! நீங்கள் ஆசை கொண்டால் அது உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இதன் மூலம், அனைவரும் உங்கள் புகழ் பற்றி பேசுவர்", என்று கூறினர்.
அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன், ஒரு மண்ணெண்னை விளக்கை விண்ணில் உயர்த்தி பிடித்தபடி, "ஐயா இப்போது வானில் சூரிய ஒளி போன்ற வெளிச்சம் தெரிகிறது பாருங்கள்", என்று கூறினான். அதற்கு இன்னொருவன், “இவ்வளவு சிறிய விளக்கு, சூரிய ஒளியை போன்று வெளிச்சத்தை தராது. ஒரு கோடி மெழுகுவருத்திகளை ஒரே சமயத்தில் ஏற்றினால், அதன் ஒளி சூரிய வெளிச்சம் போன்று இருக்கும்", என்று கூறினான். அதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும் அவர் திருப்தியடையவில்லை. அறிவியல் தெரிந்த சிலர், சக்திவாய்ந்த மின் விளக்கு போன்ற ஏற்பாடும் செய்திருந்தனர். ஆனால் எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை.
அப்போது அங்கு வந்த அறிவாளி ஒருவன், "நீங்கள் என்னதான் முயற்சி செய்தாலும், இரவில் சூரியனை காண்பது இயலாத ஒன்றாகும். இந்த முயற்சிகளின் மூலம், உங்கள் செல்வம், நேரம், உழைப்பு போன்றவற்றை வீணாக்குகிறீர்கள். சூரியனை காண்பதற்கு சூரிய உதயம் வரை காத்திருக்க தான் வேண்டும்", என்று கூறினான்.
நீதி:
இந்த பௌதிக உலகில், பரம புருஷ பகவானான முழுமுதற்கடவுளை காண்பதற்கு, விஞ்ஞானிகள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாயையில் இருக்கும் போலியானவர்கள் தங்களுக்குள் இருக்கும் சிறு மூளையை வைத்துக்கொண்டு பல வழிகளில் முயற்சி செய்கின்றனர். ஆனால் இவையனைத்தும் பலனற்றவை.
என்னதான் முயற்சி செய்தாலும் எப்படி ஒருவனால் இரவில் சூரியனை காண முடியாதோ. அதேபோல் பௌதிக ஞானத்தை கொண்டு சோதனையின் மூலம் முழுமுதற்கடவுளையும், ஆன்மீக குருவையும் வைஷ்ணவர்களையும், இவர்களது செயல்களையும் புரிந்து கொள்ள முடியாது.
சூரிய ஒளியை கொண்டே சூரியனை அறிந்துகொள்ள முடியும். அதேபோல் பகவான் மற்றும் ஆன்மீக குருவின் கருணையினால் மட்டுமே அவர்களை புரிந்துகொள்ள முடியும். மாயையின் பிடியில் சிக்கிக்கொண்டு பௌதிகத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவனால் எக்காரணத்தை கொண்டும் பகவானையும் வைஷ்ணவர்களையும் புரிந்துகொள்ள முடியாது.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment