கிருஷ்ணதாஸ கவிராஜரின் சைதன்ய சரிதாம்ருதத்திலுள்ள (மத்திய லீலை 20.263-264) பின்வரும் பதங்கள் அவதாரத் தத்துவங்களைச் சுருக்கமாகக் கூறுகின்றன
ஸ்ருஷ்டி-ஹேது யேய் மூர்தி ப்ரபஞ்சே அவதரே
ஸேய் ஈஷ்வர-மூர்த்தி 'அவதார ' நாம தரே
மாயாதீத பரவ்யோமே ஸபார அவஸ்தான
விஷ்வே அவதாரி ' தரே 'அவதார ' நாம
"ஜடவுலகில் தோன்றுவதற்காக, முழுமுதற் கடவுள் தனது திருநாட்டிலிருந்து கீழிறங்கி வருகிறார். அவ்வாறு அவர் தோன்றும்போது, 'அவதாரம் ' என்று அழைக்கப்படுகிறார். ஆன்மீக உலகில் நிரந்தரமாக உள்ள இந்த ரூபங்கள், பௌதிக்க படைப்பிற்குள் தோன்றும் போது 'அவதாரம் ' என்ற பெயரைப் பெறுகின்றனர்."
புருஷ அவதாரங்கள், குண அவதாரங்கள், லீலா அவதாரங்கள், சக்தியாவேஷ அவதாரங்கள், மன்வந்தர அவதாரங்கள், யுக அவதாரங்கள் என்று பல்வேறு அவதாரங்கள் உள்ளன—அகிலமெங்கும் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் தோன்றுகின்றனர். ஆயினும், பகவான் கிருஷ்ணரே எல்லா அவதாரங்களின் மூல புருஷராவார். தனது விருந்தாவன லீலைகளைக் காண்பதற்குப் பேராவல் கொண்டிருந்த தூய பக்தர்களின் ஏக்கத்தைத் தீர்ப்பது என்னும் முக்கிய நோக்கத்திற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தோன்றுகிறார். எனவே, கிருஷ்ண அவதாரத்தின் முக்கியக் காரணம், அவரது களங்கமற்ற பக்தர்களைத் திருப்தி செய்வதேயாகும்.
பகவான் ஒவ்வொரு யுகத்திலும் தானே அவதரிப்பதாகக் கூறுகிறார்.
(பகவத்கீதை-4.
பரித்ராணாய ஸாதூனாம்
வினாஷாய ச துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸதாபனார்தாய
ஸம்பவாமி யுகே யுகே
பக்தர்களைக் காத்து, துஷ்டர்களை அழித்து, தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைத்துவதற்காக, நானே யுகந்தோறும் தோன்றுகிறேன்
இக்கூற்று கலியுகத்திலும் அவர் அவதரிப்பதைக் காட்டுகின்றது.
ஸ்ரீமத் பாகவத்தில் கூறியுள்ளபடி, ஸங்கீர்த்தன இயக்கத்தின் மூலம், அதாவது, நிறைய மக்களுடன் இணைந்து திருநாமத்தை பாடுவதன் மூலம், கிருஷ்ண வழிபாட்டையும் கிருஷ்ண உணர்வையும் பாரதம் முழுக்க பிரச்சாரம் செய்த பகவான் சைதன்ய மஹாபிரபுவே இக்கலியுகத்தின் அவதாரமாவார். இந்த ஸங்கீர்த்தன கலாசாரம், ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு கிராமத்திலும் பரவுமென்று அவர் முன்னரே கூறியிருந்தார். முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமான சைதன்யரைப் பற்றிய விளக்கங்கள், உபநிஷத்துகள், மஹாபாரதம், பாகவதம் போன்ற வேத நூல்களின் இரகசியமான பகுதிகளில், நேரடியாக அல்லாமல் மறைமுகமாக கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்கள், சைதன்யரின் சங்கீர்த்தன இயக்கத்தால் மிகவும் கவரப்படுகின்றனர். இந்த அவதாரத்தில் பகவான் துஷ்டர்களைக் கொல்வதில்லை, மாறாக தனது காரணமற்ற கருணையின் மூலம் அவர்களை விடுவிக்கின்றார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment