பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அறுபத்து நான்கு குணங்கள்


 

பல்வேறு சாத்திர நூல்களை ஆய்ந்த பின்னர் ஸ்ரீல ரூப கோஸ்வாமி, பகவானின் உன்னதக் குணங்களைப் பின்வருமாறு வரிசைப் படுத்துகின்றார் : 


(1) அவரது எழில் மிகு அங்க அடையாளங்கள்; 

(2) சர்வ மங்களத் தன்மைகள் வாய்ந்தது; 

(3) காணும் கண்ணுக்கு அளவற்ற இன்பம் நல்குவது; 

(4) ஒளியுடையது; 

(5) வலிமையுடையது;

(6) எப்போதும் இளமையுடனிருப்பது; 

(7) பன்மொழி அறிவுடையவர்; 

(8) உண்மையுடையவர்; 

(9) இனிமையாகப் பேசுபவர்; 

(10) ஆற்றொழுக்கு என பேசுபவர்; 

(11) உயர்கல்வியுடையவர் ; 

(12) சிறந்த புத்திமான்; 

(13) நுண்ணறிவாளர்; 

(14) கலைஞர்: 

(15) மதி நலமிக்கவர். 

(16) மேதை: 

(17) நன்றி மிக்கவர்: 

(18) உறுதியுடையவர்: 

(19) காலம் மற்றும் சூழ்நிலைகளின் உயர் நீதி அரசர்; 

(20) வேதங்கள் அல்லது சாத்திரங்களில் ஆழங்கால் பட்டவர். 

(21) தூய்மையானவர், 

(22) சுய அடக்கமுடையவர்; 

(23) கொள்கை மாறாதவர்: 

(24) எதையும் தாங்குபவர்; 

(25) மன்னித்தருள்பவர்: 

(26) உணர்ச்சியை வெளிப்படுத்தாதவர்: 

(27) சுய திருப்தியுடையவர்; 

(28) நடு நிலைமையுடையவர்: 

(29) தாராளமான மனதுடையவர்; 

(30) தர்ம நெறி நிற்பவர்: 

(31) வீரர்; 

(32) இரக்கக் குணமுடையவர்; 

(33) மரியாதை மிக்கவர்: 

(34) மேன்மையுடையவர்; 

(35) பரந்த மனமுடையவர்: 

(36) நாணமுடையவர்: 

(37) சரணடைந்த ஆத்மாக்களின் பாதுகாவலர்; 

(38) மகிழ்ச்சியுடையவர்: 

(39) பக்தர்களின் நலன் நாடுபவர்; 

(40) அன்பினால் கட்டுப்படுத்தப்படுபவர்; 

(41) சர்வ மங்களமுடையவர்; 

(42) மகா சத்தியுடையவர்:

(43) எல்லாப் புகழுமுடையவர்; 

(44) எல்லோரிடத்தும் செல்வாக்கு மிக்கவர்; 

(45) பக்தர்களின் சார்பாக இருப்பவர்.

(46) பெண்கள் அனைவரையும் வசீகரிப்பவர்: 

(47) எல்லோராலும் வணங்கப்படுபவர்; 

(48) எல்லா வளங்களும் உடையவர்: 

(49) எல்லா மாண்புகளுமுடையவர்; 

(50) பரம நெறியாளர். 


முழுமுதற் கடவுளிடம் இந்த ஐம்பது உன்னதக் குணங்களும் ஒரு கடலைப் போல ஆழ்ந்து அகன்று விளங்குகின்றன. அதாவது அவரது குணங்கள் கற்பனைக் கெட்டாதவையாகும்.


பகவானின் அங்கமாக விளங்கும் பரமபுருஷ வாழிகளிடமும்கூட இந்த உன்னதக் குணங்கள் துளியளவு உயிர் காணப்படுகின்றன. அப்படிக் காணப்படும்பொழுது அவர்கள் பகவானின் சிறந்த பக்தர்களாகின்றனர். அதாவது மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் உன்னதக் குணங்கள் அனைத்தும் உயிர் வாழிகளிடம் துளியளவு காணப்படுகின்றன. ஆனால் முழுமுதற் கடவுளிடமோ அக்குணங்கள் பரிபூரணமாகவும், நித்தியமாகவும் காணப்படுகின்றன.


இவை தவிர பத்மபுராணத்தில் மேலும் சில உன்னதக் குணங்கள் சிவபெருமானால் பார்வதி தேவியிடம் விளக்கப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக ஸ்ரீமத் பாவகதம் முதல் காண்டத்தில் பூதேவிக்கும். தர்மராஜனான யமனுக்கும் இடையே ஓர் உரையாடல் காணப்படுகின்றது. அதில் "மகாத்மாக்களாக விரும்பும் மனிதர்களிடம் பின்வரும் குணங்கள் இருத்தல் வேண்டும்: அவை; உண்மை, தூய்மை, கருணை, ஊக்கமுடைமை, துறவு, அமைதி, எளிமை, புலனடக்கம். சமத்துவமுடைய மனம், விரதம், நடு நிலைமை, பொறுமை. பணிவு. கல்வியுடைமை, அறிவுடைமை, பற்றின்மை, வளம், வீரம், செல்வாக்கு வலிமை, நினைவாற்றல், சுதந்திரம், சாமர்த்தியம், மேன்மை, அடக்கம் அன்புடைமை, கூர்ந்த மதியுடைமை, பண்புடைமை, நயத்தகு நாகரீகம், உறுதி, எல்லா ஞானத்திலும் நிறைவுடைமை, முறையே செய்யும் செயல்திறமை, இன்ப நுகர்ச்சிக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் உடைமை, ஈர்ப்பாற்றல், நிலை தளராமை, நம்பிக்கையுடைமை, புகழ், மரியாதை, ஆணவமின்மை போன்றவையாகும். மகாத்மாவாக மாற விரும்பும் மனிதர்களிடம் மேலே கூறப்பட்டிருக்கும் குணங்கள் இல்லையேல் அவர்கள் மகாத்மாக்களாக முடியாது. ஆகவே பரமாத்மாவான பகவான் கிருஷ்ணரிடம் இத்தகு நற்குணங்கள் இருப்பது நிச்சயம் என்று நம்மால் அறிந்து கொள்ள முடியும்."


மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐம்பது குணங்கள் தவிர, பகவான் கிருஷ்ணரிடம் மேலும் ஐந்து குணங்கள் இருக்கின்றன. இக்குணங்கள் பிரம்ம தேவரிடமும், சிவபெருமானிடமும் சில வேளைகளில் ஓரளவே வெளிப்படுகின்றன. அவ்வுன்னதக் குணங்கள் பின்வருமாறு:


(51) மாற்றமின்மை; 

(52) எல்லாம் அறிய வல்ல தன்மை: 

(53) என்றும் புதிதாய் இருத்தல்; 

(54) சச்-சித்-ஆனந்தம் (பரமானந்தமான வடிவம் உடைமை): 

(55) எல்லாவிதமான யோக ஸித்திகளும் உடைமை.


கிருஷ்ணரிடம் மேலும் ஐந்து குணங்கள் இருக்கின்றன. அவை நாராயணரின் உடலில் வெளிப்படுகின்றன. அவை பின்வருமாறு;


(56) அவரிடம் கற்பனைக்கெட்டாத சக்தி இருக்கின்றது; 

(57) அவரது உடலிலிருந்து எண்ணற்கரிய பிரபஞ்சங்கள் உண்டாகின்றன;

(58) அவரே அனைத்து அவதாரங்களுக்கும் மூலாதாரமாக இருப்பவர்;

(59) அவரால் கொல்லப்படும் பகைவர்களுக்கு அவரே வீடுபேறு அளிப்பவராக விளங்குகிறார்; 

(60) அவரே முக்திபெற்ற ஆத்மாக்களுக்கு கவர்ச்சியளிப்பவராக இருக்கின்றார். 



இவ்வுன்னதக் குணங்கள் அனைத்தும் வியப்பிற்குரிய வண்ணம் பகவான் கிருஷ்ணரின் சுய வடிவத்தில் வெளிப்படுகின்றன.


இந்த அறுபது குணங்களுக்கும் மேலாக கிருஷ்ணரிடம் மேலும் நான்கு குணங்கள் இருக்கின்றன. அக்குணங்கள் நாராயணரின் வடிவத்திலேயே வெளிப்படுவதில்லையென்றால் பிறகு தேவர்களைப் பற்றியோ, உயிர்களைப் பற்றியோ சொல்வதற்கு என்ன இருக்கிறது? அக்குணங்கள் பின்வருமாறு: 


(61) அவரே பல்வேறு வகையான லீலா வினோதங்களைச் செய்பவர்; 

(62) அவர் எப்போதும் முழுமுதற்கடவுள் மீது அன்புடையப் பக்தர்களால் சூழப்பட்டிருக்கிறார்.

(63) அவர் இப்பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிர்களையும் தமது வேணுகானத்தினால் கவரவல்லவர்: 

(64) படைப்பில் எதுவும் எங்கும் போட்டியிட முடியாத விந்தை மிகு எழில் நலம் வாய்ந்தவர்.


கிருஷ்ணரின் இச்சிறப்புக் குணங்கள் நான்கையும் சேர்த்து கிருஷ்ணரின் மொத்தக் குணங்கள் அறுபத்து நான்கு என்று புரிந்து கொள்ளப்படுகிறது. ஸ்ரீல ரூப கோஸ்வாமி, பரமபுருஷ பகவானிடம் காணப்படும் இந்த அறுபத்து நான்கு குணங்களுக்கும் பல்வேறு சாத்திர நூல்களிலிருந்து ஆதாரங்கள் தருவதற்குப் பெரு முயற்சி எடுத்திருக்கிறார்.



( ரூப கோஸ்வாமி / பக்தி ரஸாம்ருத சிந்து / அத்தியாயம் 21)




 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more